செங்கோட்டையனுக்கு விஜய் கொடுத்த அசைன்மென்ட்… கடும் பீதியில் திமுக… உடனே தொடங்கிய அப்ரேஷன் ….

0
Follow on Google News

தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் இணைந்தது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் செய்தியை கூட இருட்டடிப்பு செய்யும் விதத்தில், அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது செங்கோட்டையன் தவெக வில் இணைந்தது. அந்த வகையில் இதற்கு முன்பு ஆதவ் அர்ஜுனா விசிக்காவில் இருந்து விலகி தவெக வில் இணைந்தது போன்று, அதிமுகவில் இருந்து விலகி நிர்மல் குமார் தவெக வில் இணைந்தது போன்று சாதாரணமாக கடந்து செல்ல கூடிய செய்தி கிடையாது செங்கோட்டையன் தவெக வில் இணைந்தது.

சுமார் 50 வருட அரசியல் அனுபவம் கொண்டவர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்கிற இருபெரும் ஆளுமையிடம் அரசியலில் பயணித்தவர், கொங்கு மண்டலத்தில் அவருக்கென செல்வாக்கு உண்டு, கோபிச்செட்டி பாளையத்தில் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறக்கூடியவர், குறிப்பாக தற்பொழுது இருக்கும் அரசியல் தலைவர்களில் அதிகம் முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர்களில் முதன்மையானவர் செங்கோட்டையன்.

இந்நிலையில் அதிமுக தலைமை மீது செங்கோட்டையன் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கி போதே, ஆதவா அர்ஜுன் அவருடன் பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யை நேரில் சந்திப்பதற்கு முன்பு சுமார் நான்கு முறை ஆதவா அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் இருவரும் செங்கோட்டையனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து விஜய்யை சந்தித்து இறுதி பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறார் செங்கோட்டையன். குறிப்பாக ஒரு நிகழ்வுக்கு விஜய் வருகிறார் என்றால், அவருடைய வருகைக்கான அனைவரும் காத்திருக்க வேண்டும், ஆனால் செங்கோட்டையன் விஜய்யை நேரில் சந்திக்க வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பே செங்கோட்டையன் வருகைக்காக காத்திருந்து வரவேற்று சந்தித்து பேசி இருக்கிறார் விஜய்.

அந்த அளவுக்கு செங்கோட்டையன் அரசியல் அனுபவம் மற்றும் மூத்த அரசியல் தலைவர் என்கிற முறையில் தகுந்த மரியாதையும் மதிப்பும் விஜய் கொடுத்து இருக்கிறார், முதல் சந்திப்பிலே பல விஷயங்களை விஜியிடம் பேசி இருக்கிறார் செங்கோட்டையன். மேலும் தற்பொழுது தவெக வில் நீங்கள் தான் எங்களுக்கெல்லாம் சீனியர், நீங்கள் தான் எங்களை வழிநடத்த வேண்டும் என்கிற பெரிய வார்த்தைகளை எல்லாம் செங்கோட்டையனிடம் விஜய் தெரிவித்து இருக்கிறார்.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அதிருப்தியில் இருப்பவர்களிடம் பேசி நீங்க தான் தவெக வில் இணைக்கும் வேலையை செய்ய வேண்டும் என்கிற அசைன்மென்டை செங்கோட்டையனிடம் கொடுத்து இருக்கிறார் விஜய். மேலும் மூத்த தலைவர் நீங்கள் எங்களுடன் இருப்பதால், மற்ற அரசியல் அனுபவம் பெற்ற தலைவர்களுக்கு தவெக மீது நம்பிக்கை வரும் ஆகையால் உங்கள் வருகை எங்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது என விஜய் தெரிவித்து இருக்கிறார்.

அதே நேரத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தவெக வில் செங்கோட்டையன் இணைந்தது கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் அதிமுக தோல்வியை தழுவ வேண்டும் என்பது தான் முக ஸ்டாலினின் திட்டம், அதே நேரத்தில் எதிர்க்கட்சியாக அதிமுக தான் வரவேண்டும் புதியதாக மற்ற எந்த கட்சியும் வந்து விட கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளார் முக ஸ்டாலின்.

ஆனால் தற்பொழுது தவெக வில் செங்கோட்டையன் இணைந்துள்ளது எங்கே தேர்தல் காலம் விஜய் சொன்னது போன்று DMK VS TVK என மாறி விடுமோ என்கிற அச்சம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here