அன்புமணி எடுத்த முக்கிய முடிவு…. மகிழ்ச்சியில் விஜய்… அதிர்ச்சியில் உறைந்த திமுக…

0
Follow on Google News

சினிமாவில் உச்சகட்ட கேரியரை விட்டுட்டு அரசியலுக்கு வந்துருக்கேன் என விஜய் பேசிய பேச்சுக்களை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தாலும், எதிர் தரப்பு கேலி கிண்டல் செய்தன, மேலும் பொது மக்கள் மத்தியிலும் கூட விஜயின் அரசியல் பேச்சுக்கள் ஒரு வித ஈர்ப்பை உண்டாக்க வில்லை , மேலும் விஜய்யை சுற்றி இருந்த புஸ்ஸி, நிர்மல் , ஆதவா போன்ற அரசியல் அனுபவம் இல்லாத நபர்களால், என்ன தான் விஜய் பின்னால் பெரும் கூட்டம் இருந்தாலும் கூட, அவர்களை அரசியல் படுத்த முடியாமல் தவித்து வந்தார் விஜய்.

இதற்கு மிக பெரிய உதாரணம் கரூர் சம்பவம், கரூர் சம்பவத்திற்கு பின்பு தான் அரசியல் என்றால் என்ன என்கிற ஞானம் விஜய்க்கு பிறந்தது என்றே சொல்லலாம். காரணம் கரூர் சம்பவத்தின் போது தான் நம்மை சுற்றி இருப்பது அணைத்து டம்மி பீசுகள், இதில் ஆதவா அர்ஜுனா ஓரளவு பரவாயில்லை , மற்ற அனைத்தும் சுத்த வேஸ்ட் என்பதை விஜய் புரிந்து கொண்டார் என்றே சொலலால்.

இப்படி ஒரு சூழலில், விஜய்க்கு ஒரு அரசியல் அனுபவம் மிக்க தலைவர்களின் துணை தேவைப்பட்ட சூழலில் விஜய் உடன் சேர்ந்தவர் தான் செங்கோட்டையன். தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் திருப்புமுனை என்பது, செங்கோட்டையன் இணைந்த பின்பே தொடங்குகி இருக்கிறது. தவெக தொடங்கி ஒன்றை வருடம் ஆனாலும் கூட அந்த தவழும் குழந்தையாக தான் இருந்து வந்தது, அந்த குழந்தையை எழுந்து நடக்க வைக்க கூட அங்கிருந்தவர்களால் செய்ய முடியவில்லை.

ஆனால் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின்பே எழுந்து நடக்கும் நிலைக்கு வந்துள்ளது விஜய்யின் தவெக கட்சி என்றே சொல்லலாம், காரணம் இதுவரை விஜய் மேடைக்கு மேடை ஆட்சியில் பங்கு தருகிறோம், அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என முழங்கினாலும் கூட, விஜய்யையும், விஜயை சுற்றி இருக்கும் கத்துக்குட்டிகளை நம்பி யாரும் தவெகவில் கூட்டணி அமைக்க முன்வரவில்லை.

மேலும் கட்சி தொடங்கி ஒன்றரை வருடத்தில் ஒரு முன்னாள் எம் எல் ஏ, முன்னாள் எம் பி என யாருமே விஜய்யை நம்பி தவெகவில் இணைய முன் வரவில்லை. இப்படி ஒரு சூழலில், சுமார் 50 வருட அரசியல் அனுபவம் கொண்ட, 8முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமையிடம் அரசியலில் பயணித்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின்பு தவெக மீது ஒரு நம்பிக்கை மற்ற கட்சிகளுக்கும், மூத்த அரசியல் தலைவர்களுக்கு வந்து இருக்கிறது.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வரும் 2026 சட்டசபை தேர்தலில், திமுகவுக்கு எதிராக இருக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என தெரிவித்துள்ளது, அவர் அதிமுக கூட்டணிக்கு செல்ல இருக்கிறாரா அல்லது தவெக கூட்டணிக்கு செல்ல இருக்கிறாரா என்கிற கேள்விக்கு அன்புமணி ராமதாஸ், TTV தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் ஒரே நேர்கோட்டில் தற்பொழுது வரை பயணித்து வருவதாகவும், அந்த வகையில் தவெக உடன் கூட்டணி வைக்க தான் அம்புமணி முடிவு செய்துள்ளதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தவெக உடன் கூட்டணிக்கு அன்புமணி சிக்னல் கொடுத்துள்ளது விஜய்க்கு மிக பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் திமுகவுக்கு மிக பெரிய அதிர்ச்சி தரும் செய்தியாக இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. காரணம் பாமகவை வரும் 2026 சட்டசபை தேர்தலில் தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு முயற்சித்து வந்தது திமுக, ஆனால் அன்புமணி திமுகவுக்கு பிடி கொடுக்காமல் தவெக பக்கம் செல்ல முடிவு செய்துள்ளார்.

ஏற்கனவே செங்கோட்டையனை த வெ க பக்கம் செல்லாமல், தங்கள் பக்கம் இழுக்கு திமுக முயற்சித்து தோல்வியை தழுவியது, அதே போன்று தற்பொழுது தொடர்ந்து தவெக பக்கம் பாமக செல்ல விடாமல் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.