செல்வாக்கை இழக்கும் தமிழ்நாடு – கர்நாடக… ஒவ்வொரு நிறுவனமாக வெளியேறும் அவலம்… திமுக – காங்கிரஸ்ன் திறனற்ற நிர்வாகம்…

0
Follow on Google News

தமிழநாடு மற்றும் கர்நாடக ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் நிர்வாகத்திறமையின்மையால் தடுமாறி கொண்டிருக்கையில், இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கொண்ட ஆந்திர அரசாங்கம், தன்னுடைய தொலைநோக்கு நிர்வாக திறமையால், தென்னிந்தியாவில் அதிகம் முதலீட்டை பெற்று வரும் மாநிலமாக உருவெடுத்துள்ளது.

பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடந்த 2024ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றது முதல் முதலியார்களை ஈர்க்கும் வகையில் நிர்வாகத்தின் கட்டமைப்பை உருவாக்கியதின் விளைவு தற்பொழுது ஒட்டுமொத்த முதலீட்டர்களும் ஆந்திராவை நோக்கி நகர தொடங்கி இருக்கிறார்கள். மேலும் தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீட்டாளர்கள், ஆந்திராவை நோக்கி திரும்பி இருக்கிறார்கள், அது மட்டுமின்றி ஏற்கனவே தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் நிறுவனம் கூட ஆந்திராவை நோக்கி நகர திட்டமிட்டு கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீட்டார்கள் ஆந்திராவிக்கு செல்வது, அங்கே ஆந்திராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசாங்கத்தின் நிர்வாக திறன் என்பதை தாண்டி, தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் திறனற்ற நிர்வாகம் தான் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். மேலும் ஆந்திராவில் முத்திரை தாள் வரிக்காக தள்ளுப்படி, மிக பெரிய அளவில் குறைக்கப்பட்ட மின் கட்டணம், குறித்த நேரத்தில் திரும்ப செலுத்தப்படும் SGST . அதி முக்கியமாக பாதுகாப்பான சுற்று சூழல் இதுவே அதிக தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீட்டர்களை ஆந்திரா பக்கம் இழுக்க காரணமாக அமைத்துள்ளது.

2024 – 2025 காலகட்டத்தில் மட்டுமே சுமார் ₹4.47 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது ஆந்திராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசாங்கம்.கூகுளின் A I டேட்டா மட்டுமே சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலரை ஆந்திராவில் முதலீடு செய்து இருக்கிறது. L&டீ நிறுவனம் சுமார் 2.5 பில்லியனுக்கான திட்டத்தை ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் அமைக்க இருக்கிறது. மேலும் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து அதானி குழுமம் சுமார் 26 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் ஆந்திர மாநில விசாகப்பட்டினத்தில் புதிய நிறுவனத்தை தொடங்க இருக்கிறது.

இப்படி ஆந்திராவில் பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு முதலீடு செய்து கொண்டிருக்க, திமுக ஆட்சியில் தமிழகத்தை புதிய நிறுவனங்கள் புறக்கணிக்கவும், பழைய நிறுவனங்கள் மெல்ல மெல்ல தமிழகத்தை விட்டு வெளியேற திமுக அரசின் மெத்தன போக்கு தான் என கூறப்படுகிறது. இதனால் தான் பல மில்லியன் அமேரிக்க டாலர் மத்தியில் தமிழகத்தில் தொடங்க இருந்த மின்சார வாகன உற்பத்தி சாலை கைவிடப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இதே போன்ற நிலை தான் காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்திலும் அரங்கேறி வருகிறது. கர்நாடகாவில் கடந்த 2.5 ஆண்டுகளில் எந்த ஒரு பெரிய முதலீடும் கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்யவில்லை. மேலும் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் முறையற்ற நிர்வாகத்தினால் பல நிறுவனங்கள் தமிழகத்தை போலவே புறக்கணித்து ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது.

தென் இந்தியாவின் பொருளாதார இதயம் என போற்றப்பட்டு வந்த தமிழ்நாடு , கர்நாடக ஆகிய இரண்டு மாநிலங்களில், சென்னை இந்தியாவின் தொழில் துறை முதுகெலும்பு என்றும், பெங்களூர் இந்தியாவின் டிஜிட்டல் சாம்ராஜ்யம் என அழைக்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது காங்கிரஸ் மற்றும் திமுக அரசின் நிர்வாகயின்மையால் அதன் தன்மையை இழந்து முதலீட்டார்களில் புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறது என்கிற செய்தி வருத்தம் அளிக்க கூடியதாக அமைத்துள்ளது.