சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான நிதியை தவறாக பயன்படுத்தியதாக திமுக அரசின் மீது எழுந்துள்ள ஊழல் குற்றசாட்டு, தூய்மை பணியாளர்களை கூட விட்டு வைக்கவில்லையா என மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொழிலாளர்களின் போலி பதிவுகள் மூலம் மாதம்தோறும் சுமார் 1 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொடங்கியுள்ள விசாரணையில் பல பூகம்பம் வெடிக்கும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அம்பத்தூர் மண்டலம் 7 இல் தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்கள் பணியமர்த்துவதில் உள்ள முறைகேடுகள் தொடர்பான எழுந்துள்ள புகார்கள் குறித்து சென்னை மாநகராட்சி ஒரு பக்கம் விசாரணையை தொடங்கி இருக்கும் நிலையில், மறுப்பக்கம் பாஜக மாநில செயலாளர் கராத்தே ஆர்.தியாகராஜன் சென்னை மாநகராட்சியில் அதிகாரபூர்வ பதிவுகளில் சுமார் 1400 தொழிலாளர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.

ஆனால் அதிகாரப்பூர்வ பதிவில் இருப்பதை விட குறைவாக சும்மர் 1000 தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாக குற்றசாட்டுகளை தெரிவித்துள்ள பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன். இதில் 400 தொழிலாளர்கள் போலியாக சேர்க்கப்பட்டு, அவர்கள் பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டு, சுமார் மாதம் மாதம் போலியாக இணைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மூலம் 1 கோடி ரூபாய் மாதம்தோறும் நடைபெறுபவதாக கராத்தே தியாகராஜன் குற்றசாட்டுகளை வைத்து இருந்தார்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் போலியாக பணியாளர்கள் பெயர்களை பயன்படுத்தி, அவர்கள் வேலையே செய்யாமல், மாதம் தோறும் அவர்கள் வேலை செய்ததாக கணக்கு காட்டப்படுகிறது என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், ஏழு நாட்களுக்குள் விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் திமுக ஆட்சியில் ஊழல் என்பது அன்றாட தினச்செய்தி போன்று தொடர்ந்து ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கையில், தூய்மை பணியாளர்களிடமே திமுக ஆட்சியில் கைவரிசை கட்டப்பட்டுள்ளது, எந்த அளவுக்கு எந்த ஆட்சியில் உடல் கரை புரண்டு ஓடுகிறது என்பதை பாரீர் என்கிறார்கள் எதிர்கட்சியினரும், அரசியல் விமர்சகர்களும்.
தூய்மை பணையர்களின் பலரும் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கையில், மேடைக்கு மேடை சமூக நீதி பேசும் திமுக, பட்டியல் சமூக மக்களின் உரிமை பெற்றுத்தரவில்லை என்றாலும் கூட, அவர்களின் நலுனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கூடவா மோசடி செய்ய வேண்டும் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது, மேலும் மாமன்னன் அசுரன் போன்ற பட்டியல் சமூக மக்கள் நலன் சார்ந்து வெளியான சினிமா படங்களை ஆதரிக்கும் திமுக நிஜத்தில் அவர்களை காக்க தவறிவிட்டது என்கிற குமுறல் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏற்கனவே சென்னையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி செய்வதற்காக மாதம் ரூ.23,000 ஊதியம் தருவதாக வாக்குறுதி அளித்து, தூய்மைப் பணியாளர்களை மாநகராட்சி அதிகாரிகளும், திமுக மாநாகராட்சி மன்ற உறுப்பினர்களும் அழைத்துச் சென்று தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வைத்த நிலையில், பணி ஒப்பந்தத்தில் ரூ.16,950 மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சிக்கு உள்ளாகி வந்த நிலையில், தற்பொழுது தொழிலாளர்களின் போலி பதிவுகள் மூலம் மாதம்தோறும் சுமார் 1 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டு திமுக அரசின் மீது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து வருவது குறிப்பிடதக்கது.

