மதுரை மாவட்டம் ஏழுமலையை சேர்ந்த ராம ரவிக்குமார். இவர், கார்த்திகை தீப திருநாளான நாளை (டிச.3) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கோயில் நிர்வாகம் சார்பில் கார்த்திகை தீபம் எற்றவும், இல்லையெனில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தனக்கு அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து, இந்த வழக்கில் திருப்பரங்குன்றம் தர்கா, கோவில் நிர்வாகம், அரசு தரப்பு வாதங்களைக் கேட்டிருந்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரில் மலை உச்சிக்கு சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து இந்தாண்டு முதல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் எற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு வந்த சில நிமிடங்களில் மதுரை கம்யூனிஸ்ட் எம்பி சு வெங்கடேசன் அவருடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருந்த கருத்து மிக பெரிய அளவில் சர்ச்சையை வெளிப்படுத்தி இருந்தார், அதில் கார்த்திகை தீபத்தை
கலவர தீபமாக மாற்ற மதவெறி சக்திகள் எல்லாவகையிலும் முயலுகிறார்கள் என குறிப்பிட்டு இருந்த சு வெங்கடேசன்,
மேலும் மதவெறி அரசியலை எந்த நாற்காலியில் அமர்ந்து அமல்படுத்தினாலும் அதை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற சக்திகளுக்கு உண்டு. இந்துத்துவா மதவெறி அரசியலை எதிர்கொள்ள குன்றென நிமிர்ந்து நிற்போம். என்று பதிவு செய்து இருந்தார் சு வெங்கடேசன், இதில் மதவெறி அரசியலை எந்த நாற்காலியில் அமர்ந்து அமல்படுத்தினாலும் என மறைமுகமாக இந்த தீர்ப்பை வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதியை சு வெங்கடேசன் விமர்சிக்கும் வகையில் அமைந்து இருந்தது.
மேலும் கார்த்திகை தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றினால் கலவர தீபமாக மாறும் என சு வெங்கடேசன் குறிப்பிட்டு இருந்தது முருக பக்தர்கள் மனம் புண்படும்படி அமைந்து இருந்தது. இந்நிலையில் ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் சோலை கண்ணன் சு வெங்கடேசனை மிக கடுமையாகச் சாடியுள்ளார். ‘மதுரை குப்பை நகரமாகியதையும், மாநகராட்சி ஊழல் மலிந்ததையும் கண்டிக்க துப்பில்லாத வெங்கடேசன், சம்பந்தமே இல்லாத திருப்பரங்குன்றம் தொகுதியில் மூக்கை நுழைத்து நீதிமன்றத் தீர்ப்பையும் நீதிபதியையும் அவமதிக்கிறார் என தெரிவித்துள்ள சோலை கண்ணன்.
மேலும் சு வெங்கடேசன் ஏற்கனவே ஆடு-கோழி பலி தடை தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளையும் அவமானப்படுத்தினார். இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி பதவிப் பிரமாணத்திற்கு எதிரானது. வெங்கடேசனின் எம்.பி. பதவியைப் பறிக்க வேண்டும்’ என சோலை கண்ணன் தெரிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி பதவிப் பிரமாணத்திற்கு எதிராக சு வெங்கடேசன் கருத்து வருமா.? இதனால் சு வெங்கடேசன் எம்பி பதவி பறிபோகுமா என்கிற விவாதம் அனல் பறந்து வருகிறது.
இந்நிலையில் கார்த்திகை தீபம் தீர்ப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ள சு வெங்கடேசன் , எங்கள் பகுதிக்கு வந்தால் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என , சு வெங்கடேசனை முற்றுகை இடுவோம் என்று இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. மேலும் மத ஒற்றுமைக்கு முன்மாதிரியாக விளங்கும் திருப்பரங்குன்றத்தில் கலவர விதையை விதைக்கும் வகையில் பேசியதாக சு வெங்கடேசன் மீது கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த வகையில் சு வெங்கடேசன் இந்த பேச்சு அவர் வகிக்கும் கூட்டணி கட்சியான திமுக மீது மக்கள் மத்தியில் விமர்சனம் எழுந்து வருவதால், திமுகவையும் சிக்கலில் சிக்க வைத்து இருக்கிறார் சு வெங்கடேசன்.

