புதுசேரிக்கு விரட்டப்படும் புஸ்ஸி ஆனந்த்… கண்ட்ரோல் எடுத்த செங்கோட்டையன்… விஜய்யின் அதிரடி மாற்றம்….

0
Follow on Google News

தவெக என்கிற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் விஜய் இரண்டு மிக பெரிய மாநாடு, மக்கள் சந்திப்பு, மாணவர்கள் சந்திப்பு, பொதுக்குழு என பல நிகழ்ச்சிகள் நடத்தினாலும் கூட புஸ்ஸி ஆனந்த் போன்றோரை வைத்து கொண்டு, விஜய் எங்கே தேர போகிறார் என்கிற விமர்சனம் எழுந்தது. ஆனால் தற்பொழுது விஜய்யின் நடவடிக்கைகள் இதுவரை வேறு யாரும் இல்லாததால், வேறு வழியின்றி புஸ்ஸி ஆனந்தை விஜய் கூட இழுத்து வந்திருக்கிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் , அரசியலில் மிக மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெக பிறகு, மொத்த கண்ட்ரோலையும் நீங்களே எடுத்துக்கோங்க என்று சொல்லும் அளவுக்கு அதிரடி மாற்றங்களை தவெக வில் விஜய் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்த பிறகு, அவரது முதல் அசைன்மென்ட், அதிமுகவிலிருந்து விலகிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள், மற்றும் திமுக அதிருப்தி தலைவர்கள் ஆகியோரை தவெக விற்கு கொண்டு வரவேண்டும் என்பது தான்.

மேலும் செங்கோட்டையன் மூலம் அடுத்தடுத்து தவெக வில் இணையும் ஒவ்வொரு முக்கிய தலைவர்களுக்கும், அவர்களின் அரசியல் செல்வாக்கு ஏற்ப முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என செங்கோட்டையனுக்கு உறுதி கொடுத்து இருக்கிறார் விஜய். அந்த வகையில் அமைச்சர்களாக, மாவட்ட செயலராக இருந்தவர்களுக்கு அவர்களின் அந்தந்த மாவட்டத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் மற்றும் மாநில அளவில் உயர் பதவிகள் தயாராக இருக்கிறது.

மேலும் தற்பொழுது புஸ்ஸி ஆனந்த் வகித்து வரும் தவெக பொதுச் செயலாளர் பொறுப்பு ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு கொடுக்க முன் வந்து இருக்கிறார் விஜய். இது குறித்து செங்கோட்டையனிடம் ஆலோசனை நடத்தி இருக்கிறார் விஜய். அப்போது ஓபிஎஸ் 15 தேதி வரை கெடு விதித்து இருக்கிறார், அவர் தனி கட்சி தொடங்குவார் இல்லை என்றால் தவெக வில் இணைவார், அவர் தவேகவில் இணைவார், அதுவரை பொறுமையாக இருப்போம் அதற்கு பிறகு பொதுச் செயலாளர் பொறுப்பு யாருக்கு என்பதை முடிவு செய்யலாம் என செங்கோட்டையன் விஜய்யிடம் தெரிவித்து இருக்கிறார்.

அந்த வகையில் செங்கோட்டையன் அல்லது ஓபிஎஸ் இருவரில் ஒருவருக்கு தன தவெக பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்க விஜய் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கினால் தவெக பக்கம் வருவதற்கு தயார் என ஓபிஎஸ் தெரிவித்தால், தனக்கு வர இருக்கும் பொது செயலாளர் பதவியை செங்கோட்டையன் விட்டு கொடுக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

செங்கோட்டையன் வருகையால் தவெக வில் அரங்கேறி வரும் இந்த அதிரடி மாற்றங்கள் , தற்பொழுது விஜய்க்கு அடுத்தபடியாக இருந்து வந்த புஸ்ஸி ஆனந்த், மீண்டும் புதுசேரிக்கு அனுப்ப பட இருக்கிறார். தமிழக அரசியலில் இனி நீங்கள் தலையிட வேண்டாம். புதுசேரி மாநில பொதுச் செயலாளர் மற்றும் புதுசேரி மாநில முதல்வர் வேட்பாளர் நீங்கள் தான், அதனால் புதுசேரியில் கட்சியை வளர்க்கும் வேலையை பாருங்க என நேரடியாகவே புஸ்ஸி ஆனந்திடம் தெரிவித்து விட்டாராம் விஜய்.

த.வெ.க.வில் விஜய்க்கு அடுத்த நிலையில், அனுபவம் வாய்ந்த செங்கோட்டையனுக்கு அதிக அந்தஸ்து கொடுத்து, செங்கோட்டையன் மூலம் இணைக்கப்படும் முக்கிய நிர்வாகிகளின் அரசியல் அனுபவத்தை பயன்படுத்தி, த.வெ.க.வின் அடித்தளத்தை வலுப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளார் என்றும் மேலும் இனி வரும் காலங்களில் தவெக வில் மாநில நிர்வாகம் மட்டுமில்லை மாவட்டம் தோறும் அடுத்தடுத்து புதியதாக ஆட்கள் இணைய இனைய மாற்றங்கள் நிகழ் இருக்கிறது.