கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று இருந்த ஓபிஎஸ் தொடர்ந்து அதே கூட்டணியில் இருந்து வந்தார். இந்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்த பின்பு, ஓபிஎஸ், டி டி வி இருவரும் ஒவ்வொருவராக கூட்டணியில் இருந்து வெளியேறினார்கள், இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த ஓபிஎஸ், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது அவரைச் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கோரியிருந்தார்.
ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த ஓபிஎஸ், தேசிய ஜனநாயக . கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். கூட்டணியில் இருந்து வெளியியேறுவதாக அறிவித்த ஓபிஎஸ் அதிகாலை முதல்வர் முக ஸ்டாலின் வாக்கிங் சென்ற போது சந்தித்தார், அதே தினம் முதல்வர் வீட்டுக்கே சென்று நேரில் சந்தித்து ஓபிஎஸ் பேசியது தகர் அரசியலில் மிக பெரிய புயலை கிளப்பியது.

இந்நிலையில் ஓபிஎஸ் திமுகவில் இணைய போகிறார் அவருக்கு திமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது என்கிற தகவல் பரவியது, மேலும் ஓபிஎஸ் தனி கட்சி தொடங்கி திமுக உடன் கூட்டணி வைக்க போகிறார் என்றும், ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கி விஜய் உடன் கூட்டணி வைக்க போகிறார் அதற்கான பேச்சுவார்த்தை ஓபிஎஸ் மகன் தொடர்ந்து விஜய் உடன் பேசி வருகிறார் என்றெல்லாம் தகவல் வெளியானது.
இருந்தாலும் ஓபிஎஸ்ஸை பாஜக பெரிதாக கண்டுகொள்ளவில்லை, அவர் ஏதோ செய்யட்டும் என கைகழுவி விட்டது என்றெல்லாம் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் தேவர் ஜெயந்தி அன்று ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்து பேசியது அதிமுக வட்டாரத்தில் மிக பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் இணைந்தது, தமிழக அரசியலில் மிக முக்கிய நிகழ்வாக மாறி, தேர்தலை களமே மாறும் சூழலுக்கு உருவாகி இருக்கிறது இந்நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்கி தி.மு.க. அல்லது த வெ க உடன் கூட்டணி வைப்பார் என்று அரசியல் அரங்கில் பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டன.
இந்தச் சூழ்நிலையில்தான் ஓபிஎஸ்க்கு அவசர அழைப்பாக டெல்லியில் இருந்து உத்தரவு பறந்து வந்து இருக்கிறது. உடனே டெல்லி சென்ற ஓபிஎஸ் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசி இருக்கிறார், இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் வரை நீடித்து இருக்கிறது. அப்போது ஓபிஎஸ் நிலைப்பாடு என்ன என்பதை கேட்டு இருக்கிறார் அமித்ஷா, அதற்கு தன்னுடைய ஆதரவாளருடன் ஆலோசித்து தனி கட்சி தொடங்க இருப்பது குறித்து தெரிவித்து இருக்கிறார் ஓபிஎஸ்.
அதற்கு முக்கிய கண்டிஷன் ஒன்றை அமித்ஷா போட்டு இருக்கிறார். அதாவது தனி கட்சி தொடங்கி எந்த ஒரு காரணத்துக்காகவும் திமுக அல்லது த வெ க பக்கம் செல்ல கூடாது, தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்க வேண்டும், என ஓபிஎஸ் க்கு அமித்சா கண்டிஷன் போட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கினறனர். அதற்கு ஓபிஎஸ் ம் சில விஷயங்களை தயங்கி தயங்கி தெரிவித்ததாக, அதற்கு அதெல்லாம் நான் பார்த்துகிறேன் என அமித்ஷா சொன்னதாக டெல்லியில் இவர்ந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் பாஜக என்ன சொல்கிறதா அதை தான் ஓபிஎஸ் செய்வார் என்றும், ஓபிஎஸ் தனி கட்சி தொடங்கினாலும் அந்த பாஜகவின் கிளையாக தான் செய்லபடும் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

