கதறும் திமுக கூட்டணி எம்எல்ஏ…. தரமான சம்பவம் செய்த டால்பின் ஸ்ரீதர்… ஒன்று கூடிய வேளச்சேரி தொகுதி மக்கள்…

0
Follow on Google News

சென்னையில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக மக்கள் கடும் அவதிக்குகளாகி வருகிறார்கள், இந்நிலையில் சென்னை வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா தொகுதி பக்கமே வரவில்லை, கடந்த நான்கரை வருடத்தில் அவரால் இம்மி அளவு கூட வேளச்சேரி மக்கள் பயனடையவில்லை என்கிற வேளச்சேரி மக்கள் மத்தியில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா மீது கடுமையாக இருந்து வருகிறது.

அதே நேரத்தில் வேளச்சேரி தொகுதியில் மலை வெள்ளம் வந்தாலும், புயல் பாதிப்பு வந்தாலும், எந்த ஒரு அதிகாரமிக்க பதவியில் இல்லை என்றாலும் கூட பம்பரமாக சுழன்று தொகுதி முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர், அந்த வகையில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா அல்லது டால்பின் ஸ்ரீதரா என்று சொல்லும் வகையில், அந்த தொகுதி மக்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கு தீர்வு காணு டால்பின் ஸ்ரீதரிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் மலை வெள்ளத்தால் வேளச்சேரி மக்கள் பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில், மக்கள் வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராக்கிய ஹசன் மௌலானா தொகுதி பக்கமே வரவில்லை என்கிற கடும் அதிருப்தியில் வேளச்சேரி மக்கள் இருந்து வரும் நிலையில், வேளச்சேரி தொகுதியில் நீரில் மூழ்கி இருக்கும் பகுதிகளை வீடியோவாக எடுத்து, கண்டா வர சொல்லுங்க ஹசன் மௌலானாவை கையோடு கூட்டி வாருங்க என கண்டா வரச்சொல்லுங்க கர்ணனை கையேடு கூட்டி வருங்க என்கிற பின்னணி பாடலுடன் டால்பின் ஸ்ரீதர் பதிவு செய்த வீடியோ வேளச்சேரி மக்களால் அதிகம் பகிர பட்டு, அந்த தொகுதி மக்களும் கண்டா வர சொல்லுங்க நாங்க ஓட்டு போட்டு தேர்தெடுத்த எம் எல் ஏ ஹசன் மௌலானாவை கையோடு கூட்டி வருங்க என்று கமெண்ட் செய்து வந்தனர்.

இதற்கு முன்பு கடந்த காலங்களில் வேளச்சேரி தொகுதி மக்கள் மலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா இயற்கை பேரிடரால் இவ்வளவு பெரிய மழை பெய்யும் போது இதெல்லாம் சாதாரணமாக நடக்கும்.. நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். வேளச்சேரி ஏரி உயரம் கூடும் போது, தண்ணீர் ஊருக்குள் வரத்தான் செய்யும்.. அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நம்மால் முடிந்ததை செய்திருக்கிறோம். தண்ணீர் கடலுக்கு போகிறது. கடல் தண்ணீரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும் என பேசியது பாதிக்கப்பட்ட வேளச்சேரி மக்கள் மத்தியில் கடும் கோபத்துக்கு உள்ளாகி இருந்தது.

மேலும் கடந்த காலங்களில் வேளச்சேரி தொகுதியின் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற காங்கிரஸ் எம் எல் ஏ ஹசன் மவுலானாவை முற்றுகையிட்டு அந்த தொகுதி மக்கள் கடும் வாக்குக்கவாதத்தில் ஈடுபப்ட்ட போது, வாக்களித்த மக்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து தெறித்து ஹசன் மவுலானா ஓடிய வரலாறும் உண்டு.

இந்நிலையில் தேர்தலுக்கு இன்னு 6 மாதங்களே இருக்கும் நிலையில், பாஜக துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர் வேளச்சேரி தொகுதி முளுவதும் பம்பரமாக சுழன்று மக்கள் சேவை செய்து வரும் நிலையில், மக்கள் மத்தியில் எழுந்துள்ள வேளச்சேரி எம் எல் ஏ ஹசன் மவுலானா மீதுள்ள அதிருப்தியை சமாளிக்க வீடியோ ஒன்றை வெளியிட்டு, ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம் அதெல்லாம் உண்மை இல்லை என மறைமுகமாக டால்பின் ஸ்ரீதர் வெளியிட்ட கண்டா வரச்சொல்லுங்க வீடியோவுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசியுள்ள வீடியோவை பார்க்கும் வேளச்சேரி தொகுதி மக்கள், பரவாயில்லை தூக்கி கொண்டிருந்த நாங்க வாக்களித்த எம் எல் ஏ ஹசன் மவுலானா வை தட்டி எழுப்பி விட்டுள்ளார் டால்பின் ஸ்ரீதர் என வேளச்சேரி மக்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.