இந்துக்களுக்கு எதிரான கட்சி… மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் திமுக… திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் பின்னனியில் திமுகவின் அரசியல்…

0
Follow on Google News

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீபம் ஏற்ற கூடிய தூணில் இம்முறை கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சுமார் 60 வருடங்களுக்கு மேலாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீபம் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற பட வேண்டும் என முருக பக்தர்கள் போராடி வரும் நிலையில் முருக பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியாக மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படலாம் என்கிற உயர் நீதிமன்ற தீர்ப்பு அமைந்து இருந்தது.

மேலும் இந்துக்களின் கலாச்சாரம், பாரம்பரியம் போன்ற உரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்துக்களும், முருக பக்தர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக 60 வருட போராட்டத்திற்கு பின்பு திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கார்த்திகை தீபம் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்கிற உயர்நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து இந்த முறை நிச்சயம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்கிற நம்பிக்கையில் இருந்த முருக பக்தர்களுக்கும் , இந்துக்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

இம்முறையும் வழக்கம் போல் மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. உச்சநீதிமன்றம் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து அறநிலை துறை அதை செய்யவில்லை, மாறாக மோச்ச தீபம் ஏற்றும் இடத்திலே கார்த்திகை தீபத்தை ஏற்றியது பலருடை முருக பக்தர்களின் மனம் புண்படும்படி அமைந்து இருந்தது.

அதாவது மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்றினால், திருப்பரங்குன்றத்தில் மிக பெரிய கலவரம் ஏற்பட்டு விடும் என்பது போன்ற ஒரு சித்தரிப்பை இந்து அறநிலை துறை சித்தரிக்க முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டும் முருக பக்தர்கள், உச்சநீதிமன்றம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்கிற உத்தரவுக்கு வக்பு வாரியம் மற்றும் தர்கா தரப்பினர் கூட அமைதியாக இருக்க தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கு இந்து அறநிலைத்துறை அந்த தீர்ப்பை எதிர்த்து வாதிட்டு வருவது, ஏற்கனவே இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக என்கிற விமர்சனம் உண்மை தானா என திமுகவை நோக்கி பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கிகளுக்காக இந்துக்களின் மரபுகளை நசுக்கும் வகையில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம் மட்டுமில்லை தமிழகம் முழுவதும் பல உதாரணம் உண்டு என்கிறார்கள் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள்.மேலும் துணை முதல் உதயநிதி ஸ்டாலின், கடந்த காலங்களில், சானாதனம் , டெங்கு மலேரியா, போன்று ஒளிக்கப்படவேண்டியது என பேசியவர்.

மேலும் சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டவர் தான் தற்பொழுது அறநிலை துறை அமைச்சராக இருக்கும் சேகர் பாபு, இப்படி இருக்கையில், இவர்களுக்கு கீழே இயக்கும் அறநிலை துறை மூலம் இந்துக்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என குமுறும் இந்து அமைப்புகள்,திமுக ஆட்சியில் அகற்றப்பட்டால் மட்டுமே இந்துக்களின் உரிமைகளை மீட்டெடுக்க முடியும், மேலும் இந்துக்களின் உரிமையை மீட்க திமுகவுக்கு வாக்களிக்கும் ஒவ்வொரு இந்துக்களும் யோசித்து வாக்களித்தால் போதும் என்கின்றனர் இந்துகள் உரிமையை மீட்க தொடர்ந்து போராடி வரும் இந்து அமைப்புகள்.

மேலும் கடந்த 25 வருடத்தில் இடையில் நடந்த ஒரு இடைத்தேர்தல் தவிர்த்து , அதுவும் கூட வெறும் சுமார் 2 ஆயிரம் வாக்கு விதியசத்தில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது, மற்ற தேர்தல் அனைத்திலும் தோல்வி தான், அதே நிலை தான் வரும் 2026 தேர்தலிலும் நீடிக்கும் என்கிறார்கள் திருப்பரங்குன்றத்தில் இருக்கும் முருக பக்தர்கள்.