பீகார் தேர்தல் முடிவடைந்த நிலையில், விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழகம், கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த எஸ்ஐஆா் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் அரசு தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த மனுக்களை கடந்த வாரம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற அமா்வு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி 99% முடிந்துவிட்டதாகவும், 50%க்கும் மேல் டிஜிட்டல் முறையில் விண்ணப்பங்கள் பதிவாகிவிட்டதாகவும் தேர்தல் கமிஷன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி தெரிவித்தார்.

‘டிசம்பர் 4-க்கு மேல் எந்த விண்ணப்பமும் பெறப்படாது’ என்று கமிஷன் ஏற்கனவே சொல்லிவிட்ட நிலையில், ‘இதை உடனே நிறுத்தணும்’ என்று திமுக தரப்பில் அவசர விசாரணை கேட்டது. ஆனால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. இந்நிலையில் SIR குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு எந்தக்கட்சிகளுக்கு பலத்த அடியை கொடுத்து இருக்கிறது. பீகாரில் SIR இன் போது கிட்டத்தட்ட 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தாலும், ஒரு வாக்காளர் கூட தங்கள் பெயர் நீக்கப்பட்டதை எதிர்த்துப் போராட முன் வராததை குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றம்.
துல்லியமான வாக்காளர் பட்டியலைப் பராமரிப்பதன் ஒரு பகுதியாக நீக்குதல் மற்றும் புதுப்பிப்புகள் உட்பட, மாநிலங்கள் முழுவதும் SIR ஐச் செயல்படுத்த தேர்தல் ஆணையம் சட்டப்பூர்வமாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் அதிகாரம் பெற்றுள்ளது என்பதை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களின் விரிவான, மாவட்ட வாரியான தரவு, நீக்கத்திற்கான காரணங்களுடன் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக மாநில தேர்தல் அலுவலகங்களால் பொதுவில் வெளியிடப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
SIR மூலம் வாக்காளர்கள் நீக்கப்படுகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் மேடையில் முழங்கினாலும், சரியான ஆதாரத்தை இதுவரை உறுதி தன்மையுடன் வெளிப்படுத்தவில்லை, இப்படி இருக்கையில் SIR செயல்முறையை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக எதிர்க்கட்சி குற்றசாட்டுகள் உண்மைக்கு புறம்பானது என்பது அமபலமாகி இருக்கிறது.
இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தவர்கள் வாக்குகளை நீக்குவது என்பது ராகுல் காந்தி சொல்வது போன்று வாக்கு திருட்டு இல்லை, அது ஜனநாயகத்தை பாதுகாக்கும் தேர்தல் ஆணையத்தின் நேர்மையை வெளிவுபடுத்தும் செயல். அந்த வகையில் தேர்தல் தோல்விகளை ஏற்று கொள்ளாத எதிர்க்கட்சிகள், SIR செயல்முறையை குற்றம் சுமத்துவது மக்கள் தீர்ப்பை அவமதிக்கும் செயலாக உள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
மேலும் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என தேர்தலில் மக்களின் வாக்குகளுக்கு மதிப்பளித்து தோல்வியை ஒப்பு கொள்ள மனமில்லாத எதிர்க்கட்சிகள் இதற்கு முன்பு வாக்கு இயந்திரத்தை குற்றம் சொல்லி வந்தார்கள், ஆனால் , அதே வாக்கு இயந்திரம் முறையில் திமுக எப்படி வெற்றி பெற்றது என்றால் எதிர்கட்சிகளிடம் பதிலில்லை, தற்பொழுது வாக்கு தேர்தல் தோல்விகளை ஏற்று கொள்ள மனமில்லாமல் SIR செயல்முறையை குற்றம் தெரிவித்து வருகிறது எதிர்க்கட்சிகள்.




