நீதிமன்றத்திற்கு இழுக்கப்படும் தமிழக முதல்வர்… அரசு கவிழ சட்டத்தில் இடம் உண்டு… நீதிபதி ஜி ஆர் சாமிநாதனின் அடுத்தகட்ட நடவடிக்கை..

0
Follow on Google News

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அறநிலை துறை நீதிபதியின் உத்தரவை அமல் படுத்தவில்லை. இதனால் முதல்வர் முக ஸ்டாலினுக்கு என்னெல்லாம் சிக்கல் ஏற்பட இருக்கிறது என்பது குறித்து மூத்த வழக்கறிஞர்கள் கூறுகையில்.

ஒரு உயர் நீதிமன்றத்தின் ஆணையை சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடிய நிர்வாகம் தடை செய்ய முடியாது ஆகையால் 144 தடையானை எப்போதும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மட்டுமின்றி, மற்ற எந்த நீதிபதி ஆணையையும் கட்டுப்படுத்தாது, அப்படி நீதிபதி பிறப்பித்த உத்தரவை கட்டுப்படுத்தினால் அது சட்ட விரோதமானது என்றும் , தற்பொழுது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு நடந்து கொண்ட விதம் நீதிமன்ற அவமதிப்பு என சுட்டி கட்டும் சட்ட நிபுணர்கள்.

கர்நாடகாவில் நடந்து ஒரு சம்பவத்தை சுட்டி காட்டி, அந்த மாநில முதல்வர் மன்னிப்பு கேட்டதையும் விளக்குகிறார்க்ள. சில வருடங்களுக்கும் முன்பு சில வருடங்களுக்கு முன்பு கர்நாடகாவில் உள்ள காவிரி நதிநீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது, ஆனால் அப்போது முதல்வராக இருந்த மறைந்த எஸ் எம் கிருஷ்ணா உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து காவேரி நீரை திறக்கவில்லை.

அதற்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டபோது, நாங்கள் தமிழகத்திற்கு காவேரி நதிநீரில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் கிருஷ்ணராஜா சாகர் அணையில் குதிக்கிறோம் என்று காத்திருக்கிறார்கள், அப்படி இருக்கையில், நாங்கள் எப்படி தமிழகத்திற்கு தண்ணீரை திறப்பது என்று கர்நாடகா முதல்வராக இருந்த எஸ் எம் கிருஷ்ணா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு நீதிமன்றம், தண்ணீரில் குதிக்க காத்திருக்கும் விவசாயிகளையும் கைது செய்யப் போகிறோம், உங்கள் அரசாங்கத்தை விட நீதிமன்றம் ஆணையம் பெரியது என்பது உங்களுக்கு தெரியுமா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது, உங்களை இப்போது கைது செய்யப் போகிறோம், கைது செய்தால் நீங்கள் குற்றவாளியாகி விடுவீர்கள் உங்கள் அரசு கவர்ந்து விடும், இதற்கு என்ன பதில் சொல்கிறீர்க, ள் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பு செய்தீர்கள் என்றதும்,

உடனே அப்போது முதலமைச்சராக இருந்த எஸ் எம் கிருஷ்ணா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தவர், நீதிமன்றத்தை அவமதிப்பிற்காக மன்னிப்பு கடித்தும் கொடுத்ததை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள் அரசு வல்லுநர்கள். அந்த வகையில் எஸ் எம் கிருஷ்ணாவுக்கு நடந்த அதே நிலைமை தற்பொழுது தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்றும, உயர்நீதிமன்ற நீதிபதியின் ஆணையை தமிழக அரசு எந்த ஆணை போட்டாலும் கட்டுப்படுத்தாது.

அதே நேரத்தில் இந்த ஆணையை பிறப்பித்த தமிழக அரசின் தலைவர் மு க ஸ்டாலின், அவர் காவல்துறையின் அமைச்சரும் கூட, அந்த வகையில் நீதிமன்ற அவமதிப்பில் முதல்வர் மு க ஸ்டாலினும் உள்ளே வருகிறார் என சுட்டிக்காட்டும் வழக்கறிஞர்கள், நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் நினைத்தால் உடனுக்குடன் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பி இரவோடு இரவாக இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என்றும் கூட உத்தரவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதற்கான முழு அதிகாரம் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனுக்கு உள்ளது என்றும் பொதுமக்கள் காக்க வேண்டிய ஒரு அரசு கலவரத்தை உண்டாக்கி சட்ட ஒழுங்கு சீர்குலைப்பது என்றால் அது அவதூறாக பயன்படுத்தி தானாகவே நீதிமன்றம் வழக்கு தொடுவதற்கு கூட முகாந்திரம் இருக்கு என்று மூத்த வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.