பெரும் படையுடன் களம் இறங்கிய நயினார்…. தமிழகமே ஸ்தம்பித்தது… திக்குமுக்காடி போன திமுக அரசு….

0
Follow on Google News

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம் மிக பெரிய அளவில் விஸ்வருபம் எடுத்து வருகிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பழமையான கார்த்திகை தீபம் ஏற்றும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், திமுக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அறநிலைத்துறை நடைமுறை படுத்தவில்லை, இந்து அமைப்புகள், பாஜகவினர் பொதுமக்கள் என பலரும் போராடி கார்த்திகை தினம் அன்று இறுதி வரை தீபம் ஏற்ற முடியவில்லை.

இதனை தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் நேரடியாக களம் இறங்க முடிவு செய்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சுமார் 100 கணக்கான கார்களுடன் பெரும் படையுடன் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் வந்தடைந்த நயினார் நாகேந்திரன், அங்கே இந்து அமைப்புகளின் தலைவர்களிடம் நடத்திய ஆலோசனைக்கு பின்பு , நீதிமன்றம் 10 பேர் மட்டும் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என உதவிட்டதை தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மனுதாரர் ராம ரவிக்குமார் உட்பட 10 பேர் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி விளக்கு ஏற்ற சென்றனர்.

அப்போது மலை பாதைக்கு செல்லும் வழியிலே நயினார் நாகேந்திரன் உட்பட அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர், ஏன் தடுத்து நிறுத்துகிறீர்கள் என நயினார் நாகேந்திரன் கேட்க, அதற்கு போலீசார் தரப்பில், 144 உத்தரவு உள்ளது, அதனால் மலை மேல் ஏற கூடாது என்றனர், நீதிமன்றம் 144 உத்தரவு ரத்து செய்துள்ளதை நயினார் நாகேந்திரன் சுட்டி காட்ட, இல்லை 144 உத்தரவு நடை முறையில் உள்ளது என்றார்கள் போலீசார்.

அதற்கு சரி 10 பேர் வேண்டாம் மனுதாரர் ராம ரவிக்குமார் மட்டும் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் விளக்கு ஏற்றட்டும் அனுமதியுங்கள் என நயினார் தெரிவிக்க, அதற்கும் காவல்த்துறை அனுமதிக்கவில்லை, இதனை தொடர்ந்து மலை மீது தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து போலீசாரால் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டார், அவருடன் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, கூட்டணி கட்சியை சேர்ந்த திருமாறன் ஜி மற்றும் பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திர கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த தமிழகம் முழுவதும் நயினார் நாகேந்திரன் கைதை கண்டித்து பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல இடங்களில் சாலை மறியலில் பாஜகவினர் ஈடுபட்டனர், இதனை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் கைதால் தமிழகமே சில நிமிடம் ஸ்தம்பித்து போனது. இதில் பாஜக மூத்த தலைவர்களின் ஒருவரான நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி, தன்னுடை வயது, உடல்நிலை எதையும் கருத்தில் கொள்ளாமல், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைதை கண்டித்து இரவு நேரம் என்று கூட பாராமல் சாலை மறியலில் ஈடுபட்டார்.

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மிக பெரிய படை பலத்துடன் திருப்பரங்குன்றம் வந்த பின்பு திருப்பரங்குன்றம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதை தொடர்ந்து , பொதுமக்கள் மத்தியிலே முருகன் கோவில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற ஏன் இந்த திமுக அரசு தடுத்து நிறுத்துகிறது என்கிற கேள்வியும் எழுத்து வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாகவே திருப்பரங்குன்றம் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இதுவரை அமைதியாக இருந்து வந்த தமிழக முதல்வர், திமுக எம்பி கனிமொழி ஆகியோர் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.