₹5,201 கோடி எங்கே போனது… தத்தளிக்கும் சென்னை மக்கள்… திமுக விடும் ஓலா கதை…

0
Follow on Google News

சென்னையில் பொய்ந்த கனமழையால் மீண்டும் சென்னை நேரில் மூழ்கி இருக்கிறது. மேலாண்மைக்காக ஒதுக்கிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில் ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யவில்லை என்பது, சமீபத்தில் வந்த ஒற்றை புயல் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியில் 1,144.5 கி.மீ நீளமுள்ள வடிகால்களை அமைக்க ₹5,201 கோடி செலவிட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

மேலும் இதற்கு முன்பு கனமழையால் பாதிக்கப்பட்டு சென்னையில் சுமார் 87 இடங்களில் அம்பத்தூர், மணலி, மாதவரம் மற்றும் திருவொற்றியூர் உட்பட 85 இடங்கள், இனி வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகாது என்று தெரிவித்து இருந்தனர். ஆனால் சமீபத்தில் பொய்ந்த மலையில் இதெல்லாம் வடிகட்டிய பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

தொடர்ந்து மூன்று சங்கபதங்களாக , தாத்தா, அப்பா,. மகன் என கருணாநிதி, முக ஸ்டாலின், உதயநிதி என ஒவ்வொரும் வருடமும் சென்னை மலை வெள்ளத்தை பார்வையிடுவது கடந்த 40 ஆண்டுகளாக தொடர் கதையாகி வருகிறது. இப்படி சென்னை இயற்கை சீற்றத்திற்கு ஒவ்வொரு முறையும் சிக்கி தவிக்க காரணம், இயற்கை அல்ல திமுக ஆட்சி காலத்தில் நீர்நிலைகள் அக்கிரமிக்கப்பட்டது தான்.

தொடர்ந்து ஆட்சியாளர்களின் தவறான நிர்வாகத்தின் விளைவாக ₹5,201 கோடி இல்லை இன்னும் எத்தனை ஆயிரம் கோடி ஒதுக்கினாலும் இயற்கை சீற்றத்தில் இருந்து சென்னையை பாதுக்காக்க எந்த வழிமுறையும் இல்லாமல் மக்கள் ஒவ்வொரு ஆண்டு கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆடம்பர கார் ரேஸ் நடந்த ஒரே இரவில் சென்னையில் பளபளன்னு சாலைகளை உருவாக்க கோடிகளை அள்ளி தெளித்த திமுக அரசு, கடந்த நான்கரை ஆண்டுகளில் தொடர்ந்து கனமழையால் பாதிக்கப்படும் சென்னை மக்களுக்கு ஒரு தீர்வை கொடுக்க தவறி விட்டது.

கடந்த 2022ம் ஆண்டு சென்னையின் மழைநீர் வடிகால் பணிகளில் 95% முடிந்துவிட்டது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருந்தார். கடந்த 2023ம் ஆண்டு 97 சதவிகிதம் முடிந்து விட்டது என தெரிவித்து இருந்தார் மேயர் பிரியா, அதே ஆண்டு சுமார் 98 சதவிகிதம் முடிந்து விட்டது என்றார் அமைச்சர் கே என் நேரு, இருப்பினும், 2024 ஆண்டு அதே மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் 30 சதவிகிதம் நிலுவையில் இருப்பதாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தது இருந்தார்.

ஒவ்வொரு வருடமும் புயல்களின் பெயர்கள் மாறி மாறி, ஒரு வருடம் மிச்சாங், அடுத்த வருடம் டித்வா என மாறிவரும் பெயர்களைப் போலவே, திமுக தலைவர்களின் புள்ளி விவரங்கள் “95% முடிந்தது,” “97% முடிந்தது,” “98% முடிந்தது” என ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில் எத்தனை சதவிகிதம் வடிகால் பனி முடிந்துள்ளது என்பதிலே முறைப்பட்டுள்ள திமுக அரசு, இதுவரை மேலாண்மைக்காக ஒதுக்கி பணம் விரைவில் வடியும் அளவுக்கு, சென்னையில் தேங்கி இருக்கும் தண்ணீர் வடியவில்லை, அந்த வகையில் சென்னையில் மேலாண்மைக்காக ஒதுக்கிய ₹5,201 கோடி எங்கே போனது? என சென்னை வாசிகள் திமுக அரசை நோக்கி கேள்வி எழுப்பி தொடங்கியுள்ளார்கள்.

சென்னை மக்களை பாத்துக்க ஒதுக்கப்பட்ட அரசாங்கம் பணம் உண்மையிலே நகரத்தின் நலனுக்கு பயன்படுத்தப்பட்டதா, அப்படி பயன்படுத்தப்பட்டு இருந்தால் எதற்காக நேரில் மூழ்கி தவிக்கிறது சென்னை.