லண்டன் ப்ரீவி கவுன்சிலில் சொன்ன தீர்ப்பு… மூடி மறைக்கும் திமுக அரசு… திருப்பரங்குன்றம் மலையின் உண்மை வரலாறு…

0
Follow on Google News

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ‘குதிரை சுனை திட்டு’ எனும் பகுதியில் ஒரு பெரிய விளக்குத் தூண் இன்றும் உள்ளது. பல்லாண்டுகளாக அந்த விளக்குத் தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது, அன்றைய ஆங்கிலேய அரசு, மலை உச்சியில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்தது. அதனால், அந்த வருடம் அந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை.

இந்நிலையில் அடுத்த ஆண்டும் மலை உச்சியில் குதிரை சுனை திட்டு எனும் பகுதியில் விளக்கு ஏற்றப்படவில்லை. இதனை தொடர்ந்து குறிப்பிட்ட ஒரு தரப்பினர் திருப்பரங்குன்றம் மலை மீது தர்காவைக் கட்டி சிக்கந்தர் தர்கா என்று பெயர் சூட்டியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மலைப் பகுதிகளையே சிக்கந்தர் மலை என்று அழைக்கத் துவங்கியுள்ளனர்.

மேலும் மலை உச்சியில் உள்ள மரங்களில் பச்சை நிற பிறைக் கொடியைப் பறக்கவிட்டுள்ளார். இந்நிலையில் அன்றைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சின்ன கருப்பத் தேவர் மக்களைத் திரட்டி மலை மீது சென்று, பச்சைக் கொடிகளை அகற்றிவிட்டு தேசியக் கொடியை ஏற்றிவிட்டு அப்போது வந்துள்ளார். மேலும் திருப்பரங்குன்ற மலை மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சின்ன கருப்பத் தேவர் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றுள்ளது.

அப்போது 700 பேர் கைதான நிலையில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை உருவாகிறது என்றவுடன் சின்ன கருப்பத் தேவர் போராட்டத்தை வாபஸ் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தர்கா அமைந்துள்ள மலைப்பகுதிகள் முழுவதுமே தங்களுக்கு சொந்தம் என்று ஒரு தரப்பினர் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு லண்டன் ப்ரீவி கவுன்சிலில் நடைபெற்றது. இறுதியில் மலை முழுவதுமே, அங்கு கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானுக்கே சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதுமட்டுமல்லாமல் அங்குள்ள தர்காவை எந்தக் காரணம் கொண்டும் விஸ்தரிக்கக் கூடாது என்றும் லண்டன் ப்ரீவி கவுன்சிலில் நடைபெற்ற வழக்கில் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. மேலும் திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்குமாறு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பில் தர்காவின் காம்பவுண்டு சுவரிலிருந்து 15 மீட்டர் தூரம் தள்ளி மலை உச்சியில் எங்கு வேண்டுமானாலும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றிக் கொள்ளலாம்” என்று தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது.

வழக்கமாக ஏற்றும் தீபத் தூண் தர்காவிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. ஆனாலும் கோயில் நிர்வாகம் மலையில் 150 அடி உயரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபத்தை ஏற்றி வருகிறார்கள்.இந்நிலையில் தற்பொழுது தீபம் ஏற்றும் இடம் இறந்தவர்களுக்காக ஏற்றப்படும் மோட்ச தீபம் இடம் என்றும், இன்றைக்கும் கூட அந்தப் பகுதியில் யாராவது இறந்து போனால் அவர்களுக்காக அங்கு மோட்ச தீபம் ஏற்றி வரும் அதே இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றி வருவதாக ஒரு தரப்பு வேதனையை பகிர்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் வருடக்கணக்கில் ஓடி கொண்டிருந்தாலும், நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசு தக்க இந்த விவகாரத்தை கையில் எடுத்து சரி செய்ய வேண்டும் என்பதே மக்களின் குரலாக உள்ளது. அதே நேரத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் திருப்பரங்குன்றம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து பாராளுமன்றம் வரை ஒலிக்க தொடங்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவது அரசாங்கம் கையில் தான் உள்ளது . ஆனால் வரலாற்றை மூடி மறைத்து திமுக அரசே பிரச்சனையை பெரிதாகி வருகிறது என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.