தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக… அரணாக காப்பாற்றும் மோடி … 2026ல் திமுகவை வீட்டுக்கு அனுப்ப தயாராக இருக்கும் விவசாயிகள்…

0
Follow on Google News

கடந்த 2024 -2025 திமுக அரசின் பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகளுக்கு சுமார் 50 ஆயிரம் மின்சார இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது, அனால் வெறும் 15 ஆயிரம் மின்சார இணைப்புகள் மட்டுமே வழங்கி, மின்சார இணைப்புக்காக காத்திருந்த விவசாயிகளை ஏமாற்றி வருகிறார் திமுக அரசு.

சிறுகுடிநீர் பாசனம், கூட்டுறவு துறை, உணவுத்தானியக் கிடங்கு அமைப்பு போன்ற முக்கியப் பிரிவுகளில் திமுக அரசு நிதி ஒதுக்கீட்டை குறைத்து விவசாயிகளை வஞ்சித்து வருவதாக விவசயிகள் குற்றசாட்டுகளை முன் வைக்கிறார்கள். விவசாயிகளுக்கு எதிரான திமுக அரசின் அடக்கு முறைக்கு எல்லையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் பிராட்டம் நடத்தினால் அவர்களை கைது செய்து அடக்கி வருகிறார் திமுக அரசு.

பருவ மலையில் நெல் கொள்முதல் செய்ய போதிய சாக்கு பை இல்லை என அரசு தரப்பில் நெல் கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, நெல்கள் மலையில் நனைத்து நாசமாகி, அரும்பாடு பட்டு விவசாயம் செய்த விவசாயிகளுக்கு மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது, இதனால் பெரும் இழப்பை சந்தித்தாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். மேலும் நெல் கொள்முதல் செய்ய மூட்டை ஓன்று 70 ரூபாய் லஞ்சம் கேட்பதாக குற்றசாட்டுகளை அடுக்குகிறார் விவசாயிகள்.

கடந்த 2024 – 2025 ஆண்டில் டிஎன்சிஎஸ்சி மூலமாக நடந்த நெல் ஏற்றி வரும் போக்குவரத்தில் ,நடந்த முறைகேட்டில் மட்டும் சுமார் 165 கோடி வரை வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம் பேய்ந்த தீடிர் மலை காரணமாக டெல்ட்டா பகுதியில் அறுவடைக்கு தயாரான ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் நீரில் நனைந்து நாசமாகி போன நிலையில் அதிகாரிகள் முதல் ஆட்சியாளர் வரை யாரும் எட்டி கூட பார்க்க வில்லை என்கிற அதிருப்தியில் திமுக அரசு மீது விவசாயிகள் இருந்து வருகிறார்கள்.

இப்படி ஒருபக்கம் திமுக அரசு தமிழக விவசாயிகளை வஞ்சித்து வரும் நிலையில் மறுப்பக்கம், விவசாயிகளின் காவலனாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசாங்கம் கடந்த 2019 ஆண்டு தொடங்கி ஆறு வருடத்தில் தமிழக விவசாயிகளுக்கு மட்டும் கிசான் திட்டத்தின் கீழ் ரூ. 12,764 கோடி ரூபாய் நிதி வழங்கி இருக்கிறது. விவசாய குடும்பங்களுக்கு ஆண்டு தோறும் 6 ஆயிரம் ரூபாயை அள்ளி கொடுத்து வருகிறது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு. இதனால் ஆயிரக்கணக்கான தமிழக விவசாயிகள் பலன் அடைந்து வருகிறார்கள்.

மேலும் தமிழகத்தில் சுமார் ஒரு கோடிக்கு அதிகமான குடும்பங்கள் பயனடைந்து வரும் வகையில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் இல்லங்கள் தோறும் குடிநீர் இணைப்பை வழங்கிய இருக்கிறது மத்திய மோடி அரசு. நாட்டின் முதுகெலுப்பாக திகழும் விவசாயத்தை காக்க, பயிர் காப்பீட்டு விரிவாக்கம், எம்எஸ்பி கொள்முதல் உயர்வு இப்படி பல சீர் திருந்தங்களை செய்து வருகிறது மோடி தலைமையின் மத்திய பாஜக அரசு.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் விவசாயிகளை ஏமாற்றி வாக்கு வாங்க , திமுக அறிவித்த தேர்தல் அறிக்கையில் ,இயற்கை விவசாயத்திற்கான தனிப் பிரிவு அமைத்தல் நிறைவேற்றவில்லை, கோடைக்கானலில் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம், துளி பாசனத்திற்கு 90% மானியம், ஒவ்வொரு யூனியனிலும் தானிய கிடங்கு, ஈரோட்டில் விவசாய இயந்திர உற்பத்தி நிலையம், ஏரிகள் மற்றும் குளங்கள் பாதுகாப்புக்கு ரூ.10,000 கோடி சிறப்பு திட்டம் என இது வரை நிறைவேற்ற படாத திமுக தேர்தல் அறிக்கை நீண்டு கொண்டே செல்கிறது.

அந்த வகையில் தமிழக விவசாயிகளை திமுக அரசு ஒரு பக்கம் வஞ்சித்து வந்தாலும், அரணாக தமிழக விவசாயிகளை காப்பாற்றி வருகிறது மத்திய பாஜக மோடி அரசு..