அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் நடத்தும் ஒரு நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தியது. அவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 30 கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அந்த வழக்கில் தேடுதல் நடத்தியபோது, வேலைவாய்ப்பு மோசடியை சுட்டிக்காட்டும் முக்கியமான ஆவணங்களையும் ED கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
அந்த ஆதாரங்களை ஆய்வு செய்ததில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்ற பணியிட நியமனங்களில் லஞ்சம் கைமாறியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ED கூறியுள்ளது. இதன் அடிப்படையில் 232 பக்கங்களுடன் கூடிய விரிவான அறிக்கையையும், பணம் பரிமாறப்பட்ட புகைப்படங்கள், ஆவணங்கள், மற்றும் டிஜிட்டல் தரவுகளையும் இணைத்து டிஜிபிக்கு அனுப்பியுள்ளது.

ஒவ்வொரு பணியிடத்திற்கும் ஹவாலா முறையில் 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை கூறி, ஆதாரங்களுடன் தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறிப்பாக, அந்தத் துறையைச் சார்ந்த அமைச்சர் கே.என். நேருவை நேரடியாக குறிவைத்து அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது..
மொத்தம் 1,12,000 பேர் தேர்வு எழுதியதில் 2,538 பேர் பணி நியமனம் பெற்றனர். இதில் 150க்கும் மேற்பட்டோர் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக ED குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே யாருக்கு எந்த பணி வழங்கப்படும் என்பது சிலருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அதற்கான உரையாடல் பதிவுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே உறுதி செய்த பட்டியல் உதவியாளர்களின் whatsapp உரையாடலில் மீட்கப்பட்டதாகவும், ஹவாலா பரிமாற்றத்திற்காக பயன்படுத்திய பத்து ரூபாய் நோட்டின் படங்களை whatsapp-ல் பரிமாறிக் கொண்டதாகவும் ED கூறியுள்ளது. மேலும், லஞ்சத் தொகை ஹவாலா நெட்வொர்க் வழியாக பரிமாறப்பட்டதாகவும், பல இடைத்தரகர்கள் இதில் கமிஷன் பெற்றதாகவும் ED அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெரிய அளவிலான பணம் அதிகாரிகளுக்கும், அரசியல் நபர்களுக்கும் சென்றதாக அந்த அமைப்பு கூறுகிறது.இதனால் அமைச்சர் கே என் நேரு மீது சட்டரீதியாக நடவடிக்கை பாயும் என்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பொன் முடியை போன்று அமைச்சர் பதவியை துறக்கும் நிலை அமைச்சர் கே என் நேருவுக்கும் ஏற்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த விவகாரம் அரசியல் ரீதியாக புயலைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் இதற்கு முன்பு செந்தில் பாலாஜியை அமலாக்க துறை கைது செய்தது போன்று வரும் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமைச்சர் கே என் நேரு கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் அமைச்சர் கே என் நேரு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால், அவர் திமுகவின் பொறுப்பாளராக இருக்கும் டெல்டா, மத்திய மண்டலம் ஆகிய பகுதிகளில் திமுகவின் தேர்தல் பணி முடங்கும் சூழல் உருவாகும்.
மேலும் அமைச்சர் கே என் நேரு சிறையில் இருந்து கொண்டு தேர்தலில் எப்படி போட்டியிட்டு வெற்றி பெற போகிறார் என்கிற பரபரப்பும் நீடித்து வருகிறது. மேலும் அமலாக்கதுறை கைது செய்தால், எளிதாக ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருக்காது என்பது கடந்த முறை செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போதே வெளிப்பட்டது. அந்த வகையில் தற்பொழுது கே என் நேரு விவகாரம் தமிழக அரசியலில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

