முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போகாத கட்சியே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, பாஜக காங்கிரஸ் தவிர்த்து, எல்லா கட்சிகளுக்கும் ஒரு ரவுண்டு சென்று விட்டார். இதனாலே இவரை 5 கட்சி அம்மாவாசை என அண்ணாமலையின் விமர்சனம் மிக பெரிய அளவில் பேசும் பொருளாக இருந்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, சசிகலா குடும்ப உறுப்பினருடன் நெருக்கமாக பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டு, இளம் வயதிலே அதிமுகவில் அமைச்சராக பொறுப்பேற்றார்.
அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டுகளில் செந்தில் பாலாஜி சிக்க, அதிமுக ஆட்சியிலே, அதிமுக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய வைத்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தலையில் இரட்டை இலையில் மின் விளக்கு, ஜெயலலிதா சிறையில் இருந்து வெளியே வர கோவிலில் அங்கப்பிரதேசம், என செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போது அடித்த கூத்து கொஞ்சம் நஞ்சம் இல்லை.

ஜெயலலிதா மறைவுக்கு பின்பு டிடிவி தினகரன் பக்கம் சென்ற செந்தில் பாலாஜி, சில மாதங்கள் டிடிவி தினகரனின் தீவிர விசுவாசியாக வலம் வந்தார். அதன் பின்பு திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி. இப்படி கொள்கை கோட்பாடுகளுகின்றி , இருக்கிற கட்சியில், இருக்கிற மேடையில் இருந்து கொண்டே , இந்த கட்சியில் இருந்து இந்த இன்னொரு கட்சிக்கு தாவும் தைரியமும் தன்னம்பிக்கையும், இந்த உலகத்திலே எனக்கு ஒருவருக்கு தான் உண்டு என வடிவேலு நகைசுவை காட்சியில் வருவது போன்று, செந்தில் பாலாஜியின் கட்சி தாவும் அரசியல் இருந்து வருகிறது.
இந்நிலையில் பல கட்சி தாவி திமுகவுக்கு வந்த செந்தில் பாலாஜிக்கு, 2021 ல் திமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பு, அதுவும் மின்சாரம், டாஸ்மாக் என செல்வம் செழிக்கும் முக்கிய இலாக்கா அவருக்கு கொடுக்கப்பட்டது, திமுக சீனியர்கள் மத்தியில் மிக பெரிய புகைச்சலை ஏற்படுத்தியது, இதற்கெல்லாம் முக்கிய காரணம், செந்தில் பாலாஜி எந்த கட்சிக்கு சென்றாலும், அங்கே கட்சி தலைமயின் மனதில் இடப்பிடிப்பதில் பக்கா கில்லாடி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்த பின்பு , மேற்கு மணடலத்தில் உள்ள திமுக சீனியர்கள் மெல்ல மெல்ல ஓரம் கட்டப்பட்டு, தற்பொழுது திமுகவின் மேற்கு மண்டல முகமாகவே மாறிவிட்டார். மேலும் முதல் குடும்பமும், மேற்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி என்ன சொல்கிறாரா, அதையே தான் பின்பற்றுகிறது என்கிறார்கள் திமுகவினர், அந்த வகையில் செந்தில் பாலாஜி குறித்து மேற்கு மண்டலத்தில் இருந்து திமுக தலைமைக்கு புகார் கொடுத்தாலும் எந்த பயனும் இல்லை.
இந்நிலையில் மேற்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜிக்கு திமுக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது, ஆனால் கட்சியை வளர்க்காமல் அவர் தன்னை வளர்த்து வந்துகொண்டிருக்கிறார் என குமுறி வரும் சீனியர் உடன் பிறப்புகள், மேற்கு மண்டலத்தில் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு மட்டும் தான் கட்சியில் முக்கிய பொறுப்பு, குறிப்பாக மேற்கு மண்டலத்தில் வரும் சட்டசபை தேர்தலில் செந்தில் பாலாஜி கை நீட்டும் நபருக்கே சீட் என்கிற ஒரு சூழல் மேற்கு மண்டலத்தில் உருவாகி உள்ளது.
இதனால், திமுக தலைவர் முக ஸ்டாலின், மற்றும் உதயநிதி ஸ்டாலின் மனதில் எப்படி இடம் பிடிப்பது என்பதை தவிர்த்து செந்தில் பாலாஜி மனதில் இடம்பிடிக்க மேற்கு மண்டல திமுகவில் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி மேற்கு மண்டலத்தில் திமுகவை வளர்ப்பதை விட, அந்த பகுதியில் தன்னை முன்னிறுத்தி கொள்ளவே முயற்சித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து திமுக தலைமையை எதிர்க்க கூட அவர் தயங்க மாட்டார் என்று உடன் பிறப்பிறப்புகள் திமுக தலைமையிடம் அறிவுறுத்தி வருவதாக தகவல் வந்துள்ளது.

