பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலை தொடர்பாக முதல்கட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் வாக்காளர் பட்டியல் SIR எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் போலியாக உள்ளது கண்டு பிடிக்கப்பட்டு, இந்த போலி வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் தீவிர வாக்காளர் பட்டியர் சீர்திருத்தம் பணி மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் 2வது கட்டமாக எஸ்ஐஆர் நடவடிக்கை அக்டோபர் 4ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. பீகாரில் கண்டுபிடிக்கப்பட்ட போலி வாக்காளர்களில், போலி முகவரியில் வாக்காளர்கள், இறந்தவர்கள் பெயரில் வாக்காளர்கள், சட்ட விரோத குடியேறிகள், இப்படி பல லட்சம் பெயர் இந்தியாவில் போலி வாக்குரிமை பெறப்பட்டது தெரியவந்தது.

தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும் என்றால், போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட வேண்டும், அந்த வேளையை தான் எஸ்ஐஆர் செய்து வருகிறது, ஆனால் போலி வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கும் பணிக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் பீதியை கிளப்பியது மட்டுமில்லாமல், போலி வாக்காளர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் களத்தில் குதித்துள்ளது, இது இந்தியா ஜனநாயகத்திற்கு எதிரானது என மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
பிகாரில் இறந்தவர்கள் பெயரில் மட்டும், 22 லட்சம் போலி வாக்காளர்களாக சேர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. மேலும் மியான்மர், நேபால், பங்களாதேஸ் நாட்டை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் போலி வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டு, நீக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்கும் எஸ்ஐஆர் நடவடிக்கை நடவடிக்கை சுதந்திரம் அடைந்த பின்பு இதுவரை 12 முறை நடந்துள்ளது, அந்த வகையில் இது தற்பொழுது மட்டும் நடக்கும் புதிய நடைமுறை கிடையாது, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த எஸ்ஐஆர் நடவடிக்கையை தற்பொழுது மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.
ஆரம்பத்தில் நாட்டின் எல்லையோர மாநிலங்களில் இந்த போலி வாக்காளர்கள் ஊடுருவ தொடங்கினார்கள், பின்பு நாட்டில் பல பகுதியில் இது போன்ற போலி வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அதை களையெடுக்கும் பணியில் இறங்கியுள்ள மத்திய அரசுக்கு எதிராக திமுக உட்பட்ட எதிர்கட்சிகளை, பீகாரில் சுமார் 65 போலி வாக்காளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டது குறித்து வாய் திறப்பார்களா.? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் எஸ்ஐஆர் நடவடிக்கை எதிராக திமுக தலைவரும் , முதல்வருமான முக ஸ்டாலின் அணைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ள நிலையில், இது தற்பொழுது திமுக அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் கடந்த 7 வருடங்களாக நடந்த பெரும்பாலான தமிழகத்தில் நடந்த தேர்தலில் திமுக தான் அதிகமாக வெற்றி பெற்று வருகிறது. இப்படி ஒரு சுழலில், எஸ்ஐஆர் நடவடிக்கை நடவடிக்கைக்கு எதிராக திமுக ஒரு வித பதற்றத்துடன் எதிர்ப்பதன் பின்னனியில், தமிழகத்திலும் பீகார் போன்று போலி வாக்காளர்கள் உள்ளார்களா என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் போலி வாக்காளர்களை கண்டிறித்து நிக்க இருக்கிறார்கள், இதற்கு எதற்காக திமுக உட்பட எதிர்கட்சிகள் பதற வேண்டும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

