முதல்வரிடம் இருந்து வந்த சிக்னல்… திமுகவில் இணையும் ஓபிஎஸ் – டிடிவி… தென் மாவட்டத்தை குறி வைத்து காய் நகர்தல்…

0
Follow on Google News

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த டிடிவி தினகரன் , ஓபிஎஸ் ஆகியோர் தற்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், இவர்களை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளுமா.? அல்லது தமிழக வெற்றி கழகம் பக்கம் செல்வார்களா.? என்கிற பரபரப்புக்கு மத்தியில், யாருமே எதிர்பாராத அரசியல் ட்விஸ்ட் அரங்கேறி வருகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வரும் ஓபிஎஸ் மற்றும் டி டி வி தினகரன் ஆகியோர் மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு இடம் கொடுக்காமல், ஓபிஸை மீண்டும் கட்சிக்குள் இணைக்க முடியாது, டிடிவி தினகரனை கூட்டணிக்குள் கொண்டு வர முடியாது என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் பக்கம் தான் ஓபிஎஸ் மற்றும் டிடிவி இருவரும் செல்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் சமீப காலமாக ஓபிஎஸ் – டிடிவி இருவரும் திமுகவை புகழ் பாட தொடங்கியுள்ளார்கள். எடப்பாடி பழனிச்சாமி தான் தனது ஒரே எதிரி என்ற நிலைப்பாட்டில் டிடிவி தினகரன் இருப்பதாலும், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை NDA கூட்டணியில் இணைய மாட்டோம் என்று தொடர்ந்து அவர் கூறி வந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம் விஜய் உடன் கூட்டணியில் இணைவீர்களா என்று கேள்வி எழுப்பபட்டது.

அதற்கு அவர் யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்றார். துரோக சக்தியான எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவோம் என்றும், கூட்டணி தொடர்பாக இந்த ஆண்டு இறுதியிலோ அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ அறிவிப்போம், வெற்றி பெறும் அணியில் நாங்கள் இருப்போம் என்று கூறினார். இதனை தொடர்ந்து ஓபிஎஸ் ஸிடம் திமுக வெற்றி பெறும் என்று முதல்வர் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

தற்போதுள்ள சூழ்நிலையில் அனைத்து கட்சிகளும் பிரிந்து கிடக்கின்றன. அதிமுக, பாமக, போன்ற கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. ஆனால் திமுக அரசு கூட்டணியை சரியாக கையாள்கிறது. இப்படி இருக்க அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்புக்கு அதிகளவில் வாய்ப்பிருப்பதாக மக்கள் பேசி கொள்கிறார்கள், நான் கூறவில்லை என்று சூசகமாக பதிலளித்தார்.

ஓபிஎஸ்ன் இந்த பதில் திமுக பக்கம் அவர் மெல்ல மெல்ல சாய்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே பார்க்கப்படுகிறது. மேலும் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவை நோக்கி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நகர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தேசிய ஜனநாயக கூட்டணி பக்கம் செல்ல இருப்பதை உணர்ந்து கொண்ட ஓபிஎஸ் மற்றும் டிடிவி இருவரும், திமுக பக்கம் சாய தொடங்கி இருக்கிறார்கள்.

சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் மூலம் திமுக தலைமை ஓபிஎஸ் மற்றும் டிடிவி இருவரும் திமுகவுக்கு வருவதற்கு சிக்னல் கொடுத்துள்ளதாகவும், டிடிவி க்கு மூன்று அல்லது 4 தொகுதிகளும் ஓபிஎஸ் க்கு ஒன்று அல்லது இரன்டு தொகுதி வரை திமுகவில் ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மேலும் டிடிவி மற்றும் ஓபிஎஸ் இருவரும் குறைந்த தொகுதியே போதும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தென் மாவட்டத்தை குறி வைத்தே ஓபிஎஸ் மற்றும் டிடிவி இருவரையும் திமுக உள்ளே இழுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here