சிக்கிய செல்போன் ஆதாரம்… குடும்பத்துடன்சிக்கிய கே என் நேரு… உள்ளே தள்ள அமலாக்கத்துறை தீவிரம்…

0
Follow on Google News

கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர் நேரு அவரது சகோதரர் கே என்ற ரவிச்சந்திரன் மணிவண்ணன் ஐயர் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையின் போது, இதற்கான ஆதாரம், உதவியாளர்களின் செல்போன்களில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் வாட்ஸ்அப் உரையாடல்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களையும் கிடைத்ததாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உதவியாளர் ரமேஷின் கைப்பேசியில் இருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பட்டியலில், ரவிச்சந்திரன், செல்வமணி உள்ளிட்டோரின் குறிப்புகளுடன், தேர்வர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அடையாளங்கள் இடப்பட்டிருந்ததாகவும், அந்தப் பட்டியலில் உள்ள பலர் நியமன ஆணைகள் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பணியில் சேர விரும்பும் வேட்பாளர்கள், அமைச்சரின் சகோதரர்கள் அல்லது உதவியாளர்களான ரமேஷ், செல்வமணி, கவி பிரசாத் ஆகியோரை அணுகியதாகவும், லஞ்சம் செலுத்தத் தயாரானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வேலைவாய்ப்புக்காக முயற்சித்தவர்களிடம் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இடைத்தரகர்கள் தேர்வர்களின் விவரங்களைப் பகிர்ந்தபின், பணம் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட ரூ.10 நோட்டின் படங்களை, அந்த உதவியாளர்கள் வாட்ஸ்அப்பில் பரிமாறிக் கொண்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இது ஹவாலா பரிமாற்றத்தின் குறியீடாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 2024 ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வை நடத்தியது, அதன் முடிவுகள் 2025 பிப்ரவரி 17 அன்று வெளியிடப்பட்டன. அதற்குப் பிறகு தகுதி பெற்றவர்களுக்கு ஆலோசனை (counselling) நடைபெற்றது. இறுதி முடிவுகள் ஜூலை 4 அன்று அறிவிக்கப்பட்டன. ஆனால்,

முடிவுகள் அறிவிக்கப்படும் முன்பே, உதவியாளர்களின் கைப்பேசிகளில் இருந்து, இடைத் தரகர்கள் அனுப்பிய விண்ணப்பப் படிவங்கள் மற்றும் ஆலோசனை அழைப்புக் கடிதங்களை மீட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே, அவ்வாறு பரிந்துரைத்த நபர்கள் தேர்வு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.

நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் உதவியாளரான செல்வமணி, முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே இடை தரகர்களிடமிருந்து தேர்வர்களின் விவரங்களைப் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. முடிவுகள் வருவதற்கு முன்பே தேர்வில் வெற்றி பெற்றதற்கு செல்வமணிக்கு நன்றி தெரிவித்து ஒருவர் அனுப்பிய குறுஞ்செய்தியும் மீட்கப்பட்டிருப்பதாக ED தரப்பில் கூறப்பட்டுள்ளது. ரவிச்சந்திரனுடன் தொடர்பில் உள்ள கவி பிரசாத், ஆரம்ப சுற்றில் தேர்ச்சி பெறாத ஒருவரை இறுதி மதிப்பெண் பட்டியலில் சேர்க்கச் செய்ததாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இடை தரகர்கள் தேர்வர்களின் விவரங்களை பகிர்ந்தபின், ஹவாலா பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட ரூ.10 நோட்டின் படங்களை, அந்த உதவியாளர்கள் வாட்ஸ்அப்பில் பரிமாறிக் கொண்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய 232 பக்கம் கொண்ட ஆவணங்கள் டிஜிபிக்கு அனுப்பிய கடிதத்தோடு இணைக்கப்பட்டுள்ள அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here