என் மாவட்ட அரசியலில் கனிமொழிக்கு என்ன வேலை.? ஒரு கை பார்த்துவிடுவோம்.! திமுக எம்.எல்.ஏ மூர்த்தி ஆவேசம்.!

0
Follow on Google News

வரும் 2021 சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுகவில் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது, திமுக முக்கிய தலைவர்கள் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கு சீட் வாங்குவதில் மிக தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர், தமிழகம் முழுவதும் திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கனிமொழி தனது ஆதரவாளர்களையும் சந்தித்து வரும் சட்டசபை தேர்தல் குறித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் கணிசமான தொகுதிகளை கனிமொழி தனது ஆதரவாளர்களுக்கு பெற்று தருவதில் தீவிரமாக அரசியல் நகர்வுகளை நகர்த்தி வருகிறார்,தமிழகம் முழுவதும் உள்ள ஒரு குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளை தேர்ந்தெடுத்து அந்த தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டும் தனது அதர்வளர்களிடம், தேர்தல் பணியை தொடங்குகள், உங்களுக்கு தான் இந்த தொகுதி என கனிமொழி உறுதி அளித்ததின் பெயரில் தமிழகம் முழுவதும் கனிமொழி ஆதரவாளர்கள் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட முன்னால் அமைச்சர் தமிழரசி முயற்சி மேற்கொண்டு வருகிறார், இவர் கனிமொழியின் தீவிர ஆதரவாளர், ஆனால் மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ சோழவந்தான் தொகுதியில் தமிழரசி போட்டியிடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார், மேலும் தான் மாவட்ட செயலாளராக இருக்கும் மதுரை மேலூர், சோழவந்தான், மதுரை கிழக்கு தொகுதிகளில் தான் கை காட்டும் தன்னுடைய விசுவாசி தான் போட்டியிட வேண்டும் என பிடிவாதமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் தனக்கு எதிராக திமுக எம்எல்ஏ மூர்த்தியின் அரசியல் குறித்து கனிமொழியிடம் தமிழரசி தெரிவித்ததாக கூறப்படுகிறது, அதற்கு கனிமொழி சோழவந்தான் தொகுதி உனக்கு தான், அந்த தொகுதியை உனக்கு பெற்று தருவது எனது பொறுப்பு தேர்தல் பணியில் கவனம் செலுத்து மற்றதை நான் பார்த்து கொள்கிறேன் என கனிமொழி தமிழரசியிடம் உறுதியளிக்க, சோழவந்தான் தொகுதியில் விறுவிறுப்பாக தேர்தல் பணியை தொடங்கியுள்ளார் தமிழரசி.

இதனை தொடர்ந்து திமுக எம்எல்ஏ மூர்த்தி மற்றும் முன்னால் அமைச்சர் தமிழரசி இடையே கோஷ்டி பூசல் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், சோழவந்தான் தொகுதியில் தமிழரசி பின்னால் செல்லும் திமுக நிர்வாகிகளை பதவியில் இருந்து நீக்கி விடுவேன் என எம்எல்ஏ மூர்த்தி மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது, ஆனால் எம்எல்ஏ மூர்த்தி மிரட்டலை பொருட்படுத்தாமல் தொடர்ந்து திமுக நிர்வாகிகள் தமிழரசியுடன் இணைந்து சோழவந்தான் தொகுதியில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கு பெற வந்த திமுக எம்எல்ஏ மூர்த்தியிடம் கட்சி நிர்வாகிகள் சோழவந்தான் தொகுதியில் முன்னால் அமைச்சர் தமிழரசி தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார், இம்முறை கனிமொழியை வைத்து சீட் வாங்கி விடுவார் என தெரிவித்துள்னர், இதற்கு நான் மாவட்ட செயலாளராக இருக்கும் மாவட்டத்தில் அரசியல் செய்ய கனிமொழிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது, டெல்லி அரசியலை மட்டும் கனிமொழி பார்த்து கொள்ளட்டும், தேவையின்றி எனது மாவட்ட அரசியலில் தலையிட்டால் அசிங்கப்பட்டு தான் போவார் என தெரிவித்துள்ளார்.

மேலும் வரும் சட்டசபை தேர்தலில் தமிழரசி எப்படி சோழவந்தான் தொகுதியில் போட்டியிட சீட் வாங்குகிறார் என்று பார்த்து கொள்கிறேன், நானா.? இல்லை கனிமொழியா.? என்று ஒரு கை பார்த்து விடுகிறேன் என திமுக நிர்வாகிகளிடம் எம்எல்ஏ மூர்த்தி பேசியதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் யார் யாருக்கு எந்த தொகுதி என்று தலைமை முடிவு செய்யட்டும், முர்த்தி எம்எல்ஏ தேவையின்றி கனிமொழியை எதிர்த்து அரசியலில் காணாமல் போக போகிறார் என திமுக நிர்வாகிகள் அவர்களுக்குள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.