தேர்தலுக்கு முன்பே 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படுகிறதா.? வெளியாகிறது எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.!

0
Follow on Google News

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தேனி நாடாளுமன்ற தொகுதியை தவிர்த்து, மற்ற அணைத்து தொகுதிகளும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது, இதற்கு முக்கிய காரணம் திமுக அதன் கூட்டணி காட்சிகள் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்கள் தான் என கூறப்படுகிறது, பாஜக எதிர்ப்பு, பிரதமர் மோடி எதிர்ப்பு பிரசாரங்கள், ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் என்கின்ற ஒரு மாயையை உருவாக்கியது ஒருபக்கம் இருந்தால் மக்களை கவரும் வகையில் திமுக வெற்றி பெற்றால் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதி முக்கியத்துவம் பெற்றது.

திமுக கூட்டணி வெற்றி பெற்றால் அரசு வங்கிகளில் பெறப்பட்டுள்ள விவசாய நகைக்கடனுக்கான 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும், ஆகையால் இதுவரை நகை கடன் பெறாதவர்கள் வங்கியில் 5 சவரனுக்கான நகை கடனை உடனே பெற்று கொள்ளுங்கள் என திமுக சார்பில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது, ஏற்கனவே 2006 திமுக ஆட்சிக்கு வந்த போது வங்கியில் பெறப்பட்ட விவசாய கடனை முதல்வராக இருந்த கருணாநிதி ரத்து செய்ததால், நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் 5 சவரன் நகை கடன் ரத்து செய்யப்படும் என தமிழக மக்களும் நம்பி வாக்களித்தனர்.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மிக பெரிய வெற்றியை பெற்றாலும், அவர்கள் மக்களிடம் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்ற முடியவில்லை, இதனால் 5 சவரன் நகை கடன் ரத்து செய்யப்படும் என எதிர்பார்ப்பில் திமுகவுக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது, இந்நிலையில் வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைந்தவுடன் 5 சவரன் நகை கடன் ரத்து செய்யப்படும் என மீண்டும் வாக்குறுதி அளிக்க இருப்பதாக கூறும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில அதிரடி முடிவுகளை எடுக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு சில தினங்களுக்கு முன்பு, அணைத்து அரசு வங்கிகளில் பெறப்பட்டுள்ள 5 சவரன் விவசாய கடன் ரத்து செய்து அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டு எதிர்கட்சிகளை கதிகலங்க வைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சமீபத்தில் தனது டெல்லி பயணத்தின் போது சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது, மேலும் டெல்லி பயணத்தை முடித்து தமிழகம் திரும்பிய முதல்வர் பழனிசாமி, தமிழக நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னிர் செல்வத்திடம் கலந்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வருகின்ற சட்டசபை தேர்தல் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை அணைத்து அரசு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற விவசாய கடன் தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பு விரைவில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு தமிழக மக்களின் பெரும் ஆதரவை பெறுவார் என்றும், குறிப்பாக இந்த நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு தாய்மார்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை அதிமுகவுக்கு பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடதக்கது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .