வேலூர் இப்ராஹிம் மீது தாக்குதல்.! படுகாயம் அடைந்த காவலர்கள் மருத்துவமனையில் அனுமதி.!

0
Follow on Google News

கொடைக்கானலில் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் வேலூர் இப்ராஹிம் மீது நடந்த கொலை வெறி தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, முன்கூட்டியே சமூக வலைதள வழியாக இத்தகைய வன்முறை தாக்குதலை நடத்தப் போகிறோம், என அறிவித்து காவல்துறைக்கும் தகவல் தெரிந்தும் வேலூர் இப்ராஹிம் கொடைக்கானலில் தாக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது, இந்த சம்பவத்தில் SDPI போன்ற அடிப்படைவாத அமைப்புகளும், அவர்களுடன் நாம் தமிழர் கட்சியும் இணைந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

குடியரசு தின விழாவில் பங்கேற்க கொடைக்கானல் வந்த வேலூர் இப்ராஹிமை, நாம் தமிழர் கட்சி மற்றும் SDPI கட்சியை சேர்ந்தவர்கள் வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்து தாக்க முயன்றுள்ளனர், இதில் வேலூர் இப்ராஹிம் தனி பாதுகாவலர் மற்றும் காவல் துறையை சார்ந்தவர்களும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது, காவலர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், வேலூர் இப்ராஹிமை காப்பாற்ற முயற்சி செய்த காவல்துறையினரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மாவட்ட காவல்துறை அலட்சியம் செய்த காரணத்தினால் இந்த கொடும் தாக்குதல் நடைபெற்று இருக்கிறது. முன்கூட்டியே தகவல் தெரிந்தும் காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் தமிழக காவல்துறைக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

தற்போது தாக்குதல் நடத்தியவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டபங்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க தமிழக போலீசாருக்கு விடப்பட்டு இருக்கின்ற சவால். தமிழக போலீசார் வெட்கித் தலைகுனிய வேண்டும். காவல்துறை அதிகாரிகளையும் வேலூர் இப்ராஹிமையும் தாக்கி காயப்படுத்தி உள்ள வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த தாக்குதலுக்கு காரணமான நாம் தமிழர் கட்சி எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, உள்ளிட்ட அமைப்புகளை தடை செய்ய வேண்டும். இந்தத் தாக்குதலை கொடைக்கானலில் உள்ள ஜமாத்தார்கள் கண்டித்திருக்கிறார்கள். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இது விஷயத்தில் நேரடியாக கவனம் கொடுத்து தமிழக காவல்துறைக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த அவமானத்தை சரி செய்ய வேண்டும். வன்முறையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட நாம்தமிழர், எஸ்டிபிஐ கட்சியினரை தடைசெய்ய வேண்டும். இந்த தாக்குதலில் தொடர்புடைய மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள அத்தனை பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.