கரூர் சம்பவத்துக்கு பின்பு விஜய் வெளியிட்ட வீடியோ திமுக அரசுக்கு எதிராகவும், விஜய் மீது அனுதாபத்தையும் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், விஜய் கரூர் சம்பவத்துக்கு பின்பு சாதுர்யமாக தன்னுடைய அரசியல் நகர்வுகளை நகர்த்தி வருகிறார். ஆதவ் அர்ஜுனாவை டெல்லிக்கு அனுப்பிய விஜய் அங்கே மூத்த வழங்கறிங்கர் ஒருவரை சந்தித்து பேசி இருக்கிறார் ஆதவ் அர்ஜுனா, மேலும் கரூர் விவகாரம் குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு தொலைபேசியில் விஜய்க்கு அப் டேட் கொடுத்து இருக்கிறார் ஆதவா அர்ஜுனா.
சமீபத்தில் தமிழகத்தில் நடந்த கரூர் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை விஜய்க்கு சாதகமாக இல்லை என்றாலும், இதை பற்றி சற்றும் பொருட்படுத்தாத விஜய், இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்து செல்வதற்கான வேளைகளில் தீவிரம் காட்டி வருகிறார் விஜய், குறிப்பாக உச்சநீதிமன்றம் எடுத்து சென்றால் மட்டுமே தனக்கு நீதி கிடைக்கும் என விஜய் நம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விஜய்க்கு தேவையான உதவிகளை செய்ய பாஜகவுக்கு முன் வந்துள்ளதால், விஜய்யும் கரூர் சம்பவத்துக்கு பின்பு பாஜக பக்கம் நெருங்கி சென்று கொண்டிருக்கிறார். குறிப்பாக கரூர் வந்த ஹேமா மாலினி தலைமையிலான பாஜக எம்பிக்கள் குழு வரும் பார்லிமென்ட் கூட்ட தொடரில் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பேச இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது காங்கிரஸ் தரப்பில் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
விஜய் பாஜக பக்கம் செல்ல கூடாது , நம்ம அதற்குள் இழுத்து விட வேண்டும், என திட்டமிடும் காங்கிரஸ், வெளி நாட்டில் இருந்து ராகுல் காந்தி திரும்பியதும், கரூர் எம்பி ஜோதிமணி, விசி வேணுகோபால், மாணிக்கம் தாகூர் ஆகியோருடன் ராகுல் காந்தி கரூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க ராகுல் காந்தி தொலைபேசியில் விஜய்யிடம் பேசி இருக்கிறார்.
ஆனால் விஜய் ராகுல் காந்தியிடம் பிடி கொடுக்காமலே பேசி வந்திருக்கிறார், இதற்கு காரணம் விஜய் தற்பொழுது தன்னுடைய ஒரே எதிரி திமுக தான் முடிவு செய்துள்ளார், அந்த வகையில் காங்கிரஸ் உடன் கைகோர்த்தால், காங்கிரஸ் திமுகவை மென்மையாக தான் எதிர்க்கும், அதே நேரத்தில் பாஜக உடன் கைகோர்த்தால், எதிரி எதிரி நண்பன் என்கிற பாணியில் திமுகவை வரும் 2026 சட்டசபை தேர்தலில் மண்ணை கவ்வ வைத்து தக்க பதிலடி கொடுக்கலாம் என்கிற முடிவில் இருக்கிறார் விஜய்.
இதனால் கரூர் சம்பவத்துக்கு முன்பு காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாம் என்கிற மனநிலையில் இருந்த விஜய், தற்பொழுது காங்கிரஸ் வேண்டாம், பாஜக தான் சரியான கூட்டணி என்பதால் ஸ்டிக்ட்டா இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த மிக பெரிய தொழில் அதிபர் மூலம் தான் விஜய் உடன் அமித்ஷா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தையில் விஜய் பக்கம் இருந்து நல்ல தகவல் வந்ததை தொடர்ந்து அமித்சா மிக பெரிய மகிழ்ச்சியில் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் உறுதி செய்கிறது, மேலும் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்ட அமித்சா இது குறித்து பேசி இருக்கிறார், விஜய்க்கு எத்தனை தொகுதி, விஜய்க்கு துணை முதல்வர் போன்ற பல விசயங்களை பேசி இருக்கிறார் அமித்சா.
கிட்டத்தட்ட பாஜக – அதிமுக கூட்டணியில் விஜய் இணைவது உறுதியாகி உள்ள நிலையில், உச்சக்கட்ட பதற்றத்தில் இருக்கும் காங்கிரஸ், விஜய்யை எபப்டியாவது பாஜக பக்கம் போவதை தவிர்த்து தங்கள் பக்கம் இழுத்து விட வேண்டும் என பல முயற்ச்சிகளை காங்கிரஸ் தரப்பு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.

