தேர்தல் தேதி அறிவித்து அதிமுக – திமுக இரண்டு கூட்டணிகளும் தேர்தல் பணிகளில் ஆயத்தமாகி வரும் நிலையில், வடிவேலு நகைச்சுவை காட்சியில் இங்கேயே இருப்போமா இல்ல மீண்டும் துபாய்க்கு போவோமா என்பது போல், அரசியலில் தொடருவோமா அல்லது மீண்டும் சினிமா பக்கமே சென்று விடுவோமா என்கிற மிக பெரிய குழப்பத்தில் இருந்து வருகிறார் விஜய், அந்த அளவுக்கு அரசியல் ஒன்றும் சினிமா இல்லை என்கிற பாடத்தை விஜய்க்கு கற்று கொடுத்து இருக்கிறார் சமீப கால தமிழக அரசியல்.
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு டெல்லி சென்ற விஜயிடம் கூட்டணி குறித்து பேசி இருக்கிறது பாஜக தரப்பு, குறிப்பாக ஆனால் விஜய்யின் நெருக்கமான வட்டாரத்தில் இருக்கும் ஆதவா அர்ஜுன் போன்றோர் NDA கூட்டணிக்கு விஜய் செல்வதை விரும்ப வில்லை, இதனால் விஜயை கூட்டணிக்கு செல்ல விடாமல் முட்டு கட்டையாக இருந்தாலும், விஜய்க்கு கூட்டணிக்கு செல்வத்தில் ஒரு பக்கம் விருப்பம் இருந்து இருக்கிறது.

இதனால் தொடர்ந்து பாஜக தரப்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்திருக்கிறார் விஜய், ஆனால் அவர் 60 தொகுதி, துணை முதல்வர் மற்றும் அமைச்சரவையில் இடம் என ஓவர் டிமாண்ட் வைத்து இருக்கிறார் விஜய், ஆனால் பாஜக தரப்பில் 30 தொகுதிகள் வரை உங்களுக்கு கூட்டணியில் பெற்று தர முடியும், இதுவரை நீங்கள் இன்னும் தேர்தலை சந்திக்கவில்லை, ஆகையால் உங்கள் பலம் என்ன என்பதை நீங்கள் நிரூபிக்க வில்லை, அப்படி இருக்கையில் எப்படி 60 தொகுதி தரமுடியும் , துணை முதல்வர் தரமுடியும் என பாஜக தரப்பு கேட்க.
அப்போது விஜய் பிடிவாதமாக இருந்திருக்கிறார் இதனால் விஜய் உடனான கூட்டணி பேச்சுவார்த்தையை டெல்லி பாஜக தலைமை கைவிட்டது. இந்நிலையில் விஜய் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், 234 தொகுதிக்கு அவருடைய கட்சியில் வேட்பாளர் இல்லாதது மேலும் , வேட்பாளர்கள் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டும் என தவெக தெரிவிக்க அப்படி செலவு செய்ய 10 வேட்பாளர்கள் கூட முழுமையாக இல்லை என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து , டெல்லியில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய போதே NDA கொடுப்பதாக இருந்த 30 தொகுதிகளை பெற்று இருந்தால், அவர்களே தேர்தல் செலவை பார்த்து இருப்பார்கள், குறைந்தது 20 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கலாம் என வேதனைப்பட்ட விஜய் மீண்டும் பாஜகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
சமீபத்தில் மும்பை சென்ற விஜய், மஹாராஷ்டிராவில் உள்ள பாஜக முக்கிய தலைவர் ஒருவர் மூலம் அமித்சாவிடம் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தூது விட்டிருக்கிறார், அதற்கு அமித்ஷா விஜய்க்காக வாய்ப்பு முடிந்து விட்டது என தெரிவிக்க, அதற்கு விஜய் எனக்கு துணை முதல்வர், அமைச்சரவையில் இடம் என எதும் வேண்டாம், 30 சீட் தருவதாக சொன்னார்கள் ஒரு 40 சீட்டா தரச்சொல்லுங்க என விஜய் மஹாராஷ்டிராவில் உள்ள பாஜக முக்கிய தலைவர் ஒருவர் மூலம் மீண்டும் அமித்ஷாவிடம் பேசி இருக்கிறார்.
அதற்கு அமித்சா, இனிமே கூட்டணி என்று இந்த பக்கமே வரக்கூடாது என்று சொல்லுங்க, ஏனென்றால் NDA கூட்டணியில் உள்ள காட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது, இன்னும் இரண்டு நாளில் அறிவிப்பு வெளியாக இருக்கிறது, அவருக்கு 15 தொகுதி கொடுக்கும் அளவுக்கு கூட கையில் சீட் இல்லை, வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு பேசட்டும் என்று அமிதாஷா கறாராக தெரிவித்து விட்டாராம்.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார் விஜய், ஆனால் அவர்களும் நீங்கள் கேட்கும் தொகுதியை எங்களால் கொடுக்க முடியாது என கைவிரித்து விட்டார்களாம், இதனை தொடர்ந்து மிக பெரிய குழப்பத்தில் இருக்கிறாராம் விஜய்.

