வெறும் 23 மூன்று நாட்கள் அரை சதம்… எதில் தெரியுமா… வெட்கி தலைகுனிய வைக்கும் திராவிடம் மாடல்…

0
Follow on Google News

கடந்த 23 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. இவை வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல. மாறாக, சாதாரண மக்களின் மனதில் உருவாகி வரும் அச்சம், பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வுகளின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகின்றன.

ஒருகாலத்தில் பாதுகாப்பான மற்றும் முன்னேற்றமான மாநிலமாக கருதப்பட்ட தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன. பெண்கள் பொதுஇடங்களில் பாதுகாப்பாக இருக்கிறோமா என்கிற அச்சம் , பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய கவலை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வீரத்துக்கும் தியாகத்திற்கும் அடையாளமாக விளங்கிய வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், குயிலி போன்ற பெண்மணிகளை உருவாக்கிய இந்த தமிழக மண்ணில், பெண்கள் மீதான தொடர்ச்சியான வன்முறை சம்பவங்கள், இதற்கு முன்பு இருந்த வீர மிகு வரலாற்றுப் பெருமையை மறைத்து விடும் நிலையை உருவாக்கி கொண்டிருக்கிறது என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

பொதுஇடங்கள் மட்டுமின்றி, வேலைத்தளங்கள் மற்றும் தங்கள் சொந்த குடியிருப்பு பகுதிகளிலும் கூட பெண்கள் பாதுகாப்பு குறித்த அச்சம் உருவாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாதம் மட்டும் 50-க்கும் மேற்பட்ட பாலியல் தொந்தரவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதில் கடந்த 10 நாட்களிலேயே 25-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது வெறும் 23 நாட்களின் நிலை என்றால், கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம் என்ற கேள்வியும் எழுகிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற குற்றச்செயல்கள் தினந்தோறும் தமிழகத்தில் செய்திகளில் வெளியாகும் நிலையில், பொதுமக்களிடையே பாதுகாப்பின்மை உணர்வு அதிகரித்து வருகிறது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்புவதற்கே தயங்குவதும், இளம் பெண்கள் சுதந்திரமாக தனியாக செல்லும் சூழல் இல்லாத தமிழகமாக உருவாகி வருகிறதா என்கிற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், அவற்றை கட்டுப்படுத்த வேண்டிய அவசரத் தேவைக்கு ஏற்ப நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கப்படுகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுகிறது.

மக்களிடையே அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இந்த பிரச்சினையை தீர்க்க துரிதமான மற்றும் உறுதியான நடவடிக்கைகள் அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். சிறுமிகள் முதல் மூத்த பெண்கள் வரை அனைவரும் பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குவது அரசின் முக்கிய பொறுப்பு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

அந்த வகையில் ஆளும் அரசின் மீது அதிருப்தியில் இருக்கும் தமிழக பெண்கள் தங்களின் பாதுகாப்பு, அமைதி மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்யும் நிர்வாகம் வேண்டும் என்கிற மாற்றத்தை நோக்கி எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பாதுகாப்பும் மரியாதையும் உறுதி செய்யப்படும் சமூக சூழலை உருவாக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் இன்றைய முக்கிய கோரிக்கையாக உள்ளது.