மதுரை தெற்கு தெற்கு தொகுதியில் சீட்டிங் எம் எல் ஏ வாக இருக்கும் பூமி நாதன் மீண்டும் அதே தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட இருக்கிறார், மதுரை தெற்கு தொகுதியில் பெரும்பான்மையாக முக்குலத்தோர் சமூகம் , அதற்கு அடுத்ததாக சௌராஷ்ட்ரா சமூகம் , அடுத்து வெள்ளாளர் சமூகம் உள்ளனர், இந்த தொகுதியில் தற்பொழுது திமுக சார்பில் போட்டியிட இருக்கும் பூமி நாதன் முக்குலத்தோர் சமூகம் என்பது அவருக்கு கூடுதல் பலம்.
மேலும் இந்த தொகுதியில் மைக்ரோ அளவில் பூமி நாதன் வேலை செய்து வைத்துள்ளார், குறிப்பாக இந்த தொகுதியில் நல்லது கேட்டது என அணைத்து நிகழ்வுகளிலும் பூமி நாதன் கலந்து கொண்டு அந்த மக்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்று இருந்தாலும் கூட, மதுரை மாநகராட்சியின் செயல்பாடுகள், குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளை சரிவர செய்து கொடுக்காதது ஆளும் திமுக அரசின் மீது அப்பகுதி மக்களுக்கு அதிருப்தி உள்ளது.

இருந்தாலும் மதிமுக வேட்பாளரான பூமி நாதன் அந்த தொகுதியில் உள்ள அடித்தட்டு மக்கள் வரை நன்கு அறிமுகமானவர், அந்த தொகுதியில் பெரும்பான்மையான சமூகமான முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர் பூமி நாதன் மேலும் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பது அவருக்கு கூடுதல் பலம். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மதுரை தெற்கு தொகுதியில் வலுவான வேட்பாளர் களம் இறங்க இருப்பது திமுக கூட்டணி வேட்பாளரான பூமிநாதனுக்கு சவாலாக அமைத்துள்ளது.
மதுரை சேர்ந்த பிரபல சினிமா பைனாசியர் அன்பு செழியன் மகன் விவேக் மதுரை தெற்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட இருக்கிறார், ஏற்கனவே புதிய வாக்காளர்கள் பெரும்பாலும் இம்முறை தவெகவுக்கு வாக்களிக்க இருக்கும் நிலையில் இவரும் முக்குலதோர் சமூகம் என்பதால் பூமிநாதனுக்கு மிக பெரிய சவாலாக உருவெடுத்து இருக்கிறார். மேலும் பணம் படைத்த சினிமா பைனாசியர் அன்பு செழியன் மகன் விவேக் இந்த தொகுதியில் போட்டியிடுவது , அந்த தொகுதி மக்களுக்கு தீபாவளி தான் என்றே சொல்ல வேண்டும்.
அந்த வகையில் விட்டமின் பா பெரிய அளவில் கிடைக்கும் என மதுரை தெற்கு தொகுதி மக்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள், மேலும் இந்த தொகுதியில் அன்பு செழியன் மகன் விவேக் போட்டியிட இருப்பது அந்த தொகுதி மக்களுக்கு அடித்த மெகா ஆபர் என்றே சொல்லலாம், மேலும் அன்பு செழியன் சார்த்த தொழில் நிறுவனம் மதுரை தெற்கு தொகுதியை சார்ந்து உள்ளது.
இப்படி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் பூமி நாதன் மற்றும் தவெக வேட்பாளர் விவேக் என இரண்டு வலுவான வேட்பாளர்களை எதிர்கொள்ளும் வகையில் பாஜக சார்பில் யார் போட்டியிட இருக்கிறார்கள் என்கிற பரபரப்புக்கு மத்தியில், ஓன்று சமுதாய ரீதியாக அந்த தொகுதியில் பெரும்பான்மையாக இருக்க கூடிய முக்குலத்தோர், சௌராஷ்டிரா, அல்லது வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு பாஜக சீட் கொடுக்குமா.
அல்லது சினிமா பைனாசியர் அன்பு செழியன் போன்ற பணம் படைத்த ஒருவருக்கு சீட் கொடுக்குமா என்பதை பாஜக நிறுத்த இருக்கும் வேட்பாளரை பொறுத்தே மதுரை தெற்கு தொகுதி களம் நிலவரம் என்ன என்பதை கணிக்க முடியும், ஒரு வேலை பாஜக மதுரை தெற்கு தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கு முக்குலத்தோர் அல்லது சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த பணம் படைத்த , அதுவும் அதே தொகுதியை சேர்ந்த ஒருவருக்கு சீட் கொடுக்கும் பட்சத்தில்,
மதுரை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணி – த வெ க – பாஜக என மும்முனை போட்டி உருவாகி , பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மிக கடுமையாக தேர்தல் பணியாற்றினால் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது, அந்த வகையில் பாஜகவின் வெற்றி என்பது அந்த தொகுதியின் வேட்பாளரை பொறுத்தே வெற்றி வாய்ப்பு உள்ளது.

