கடவுள் போல் உதவிய மோடி… உங்க உதவியை மறக்கவே மாட்டோம்… நன்றி தெரிவித்த ஈரான்…

0
Follow on Google News

அமெரிக்கா , Israel மற்றும் Iran இடையிலான மோதல் தொடங்கியதிலிருந்து, Strait of Hormuz வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் கட்டுப்பாடு விதித்ததது. இதன் விளைவாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பதற்றம் உருவானது. இந்த சூழலில், அந்த ஜலசந்தி வழக்கமான போக்குவரத்திற்காக திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின்சார உற்பத்தி அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் Donald Trump கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் அமெரிக்காவின் இந்த எச்சரிக்கைக்கு ஈரான், தங்களின் மின் உற்பத்தி அமைப்புகள் தாக்கப்பட்டால், அவை மீண்டும் சீரமைக்கப்படும் வரை ஹார்மூஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்பட்டே இருக்கும் என்று ஈரான் தெரிவித்தது. மேலும், ஈரானின் மின்சார உற்பத்தி அமைப்புகள் குறிவைக்கப்பட்டால், எதிரி நாடுகளின் எரிசக்தி மையங்களையும் தாக்குவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

இந்த பதற்றநிலையிலேயே, Jerusalem அருகிலுள்ள Arad மற்றும் Dimona பகுதிகளை நோக்கி ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பதிலடி நடவடிக்கையாக, Tehran நகரை நோக்கி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இரு நாடுகளின் முக்கிய நகரங்கள் குறிவைக்கப்பட்டுள்ளதால், மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. 🚀

இந்த கடுமையான சூழலில், மனிதநேய அடிப்படையில் உதவி செய்ததற்காக India அரசுக்கும் மக்களுக்கும் ஈரான் நன்றி தெரிவித்துள்ளது. இந்தியாவின் கருணை மற்றும் மனிதாபிமான அணுகுமுறையை எப்போதும் நினைவில் வைத்திருப்போம் என்று ஈரான் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய இந்த தாக்குதல் தொடர் இன்னும் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படவில்லை. ஒரு புறம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்க, மறுபுறம் ஈரானும் தளர்ச்சி காட்டாமல் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த மோதலின் தாக்கம் காரணமாக ஈரானில் வசிக்கும் பல லட்சம் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் இந்தியா மருத்துவ மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வருகிறது. இதற்காக ஈரான் மீண்டும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

“உலகமே ஒரு குடும்பம்” என்ற நோக்கத்துடன் கடந்த சில ஆண்டுகளாக அண்டை நாடுகள் மற்றும் பிற நாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மார்ச் 18ஆம் தேதி போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவப் பொருட்கள் அனுப்பப்பட்டன. தொடர்ந்து மார்ச் 22ஆம் தேதி, ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தின் பட்காம் பகுதியைச் சேர்ந்த மக்கள் வளைகுடா பகுதி மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் தங்கம், வெள்ளி மற்றும் நிதியுதவிகளை வழங்கினர்.

இந்தியா எந்த ஒரு தரப்புக்கும் ஆதரவாக இல்லாமல், போரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவி செய்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் “இந்தியாவின் மனிதாபிமான உதவியை எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது” என்று தெரிவித்துள்ளது.