தேத்தலை புறக்கணிக்கும் முடிவில் விஜய்… சிபிஐ கொடுத்த நெருக்கடி… தப்பிக்க வேறு வழியே இல்லை…

0
Follow on Google News

தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை தொடங்கி இரன்டை வருடம்மாகி இதுவரை செங்கோட்டையன் தவிர்த்து அந்த கட்சியில் சொல்லும்படி யாரும் பெரிதாக இணையவில்லை, செங்கோட்டையன் கூட அவசரப்பட்டு விட்டோமே என தவெகவில் இணைந்தது குறித்து வருத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. குறிப்பாக ஓபிஎஸ் உட்பட அவருடைய ஆதரவாளர்கள் தவெக பக்கம் செல்வார்கள் என ஆருடங்கள் வெளியான நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட பலரும் திமுக பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள்.

மேலும் காங்கிரஸ் – திமுக இடையில் நடந்த வந்த உரசல் முடிவுக்கு வந்திருக்கிறது, திமுக கொடுக்கும் தொகுதியை கொடுக்கட்டும், நாங்கள் திமுக கூட்டணியிலே தொடர்கிறோம் என முடிவு செய்துள்ளது, காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்து இருந்த தவெக தலைவர் விஜய்க்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது, மேலும் TTV தினகரன் , பிரேமலதா போன்றவர்களும் அதிமுக உடன் கூட்டணியை உறுதி செய்து விட்டனர்.

அந்த வகையில் கடந்த இரண்டரை வருடமாக ஆட்சியில் பங்கு தருகிறோம், அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என தீபாவளி ஆஃபர் ,பொங்கல் ஆஃபர் என விஜய் கூவி கூவி அழைத்தாலும் கூட, நீ ஆட்சிக்கு வந்தா தான எங்களுக்கு ஆட்சி , அதிகாரத்தில் பங்கு தரமுடியும், அதனால நீயும் ஆட்சிக்கு வரபோறது இல்லை, நாங்களும் உன் கூட கூட்டணிக்கு வர போவது இல்லை என தவெக உடன் கூட்டணி சேர்வதற்கு யாரும் தயாராக இல்லை.

இன்னும் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் விஜய்க்கு மிக பெரிய நெருக்கடியாக இந்த சிபிஐ விசாரணை அமைந்து இருக்கிறது, குறிப்பாக குறிப்பிட்ட நேரத்திற்குள் விஜய் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு வரவில்லை போன்ற பல சம்பவங்கள் விஜய்க்கு எதிராக சிபிஐ விசாரணை மூலம் சென்று கொண்டிருப்பதால் விஜய் கடுமையான மனஉளைச்சலுக்கே உள்ளாகி விட்டார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த 2006 சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட்டது போன்று தனித்து போட்டியிட்டால் எத்தனை தொகுதியில் வெற்றி பெறலாம் என தனியார் நிறுவனம் மூலம் சர்வே எடுத்துள்ளார் விஜய், அந்த சர்வே ரிப்போர்ட் தான் விஜய்க்கு மிக பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. அதாவது தமிழகம் முழுவதும் 234 தொகுதியில் தனித்து போட்டியிட்டால் விஜய் நிற்கும் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளது, மற்ற அனைத்து தொகுதியிலும் தோல்வி தான் கிடைக்கும் என விஜய்க்கு சென்ற சர்வே ரிப்போர்ட் தெளிவு படுத்தி இருக்கிறது.

மேலும் விஜய் போட்டியிடும் தொகுதியில் அவருடைய கட்சி நிர்வாகிகள் திமுகவிடம் விலை போய்விட்டால் அந்த வெற்றியும் கிடைக்காது, மேலும் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் திமுகவிடம் பணத்தை பெற்று கொண்டு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்க அதிக வாய்ப்புள்ளது, குறிப்பாக விஜய்யை சுற்றி இருக்க கூடியவர்களில் செங்கோட்டையன் தவிர்த்து யாருமே சட்டமன்றம் தேர்தலில் ஒரு முறை கூட போட்டியிட்ட அனுபவம் இல்லாதவர்கள்.

ஆகையால் இவர்களை நம்பி விஜய் களம் இறங்குவது கல்லை கட்டி கிணறில் இறங்குவதற்கு சமம் என விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் விஜய், கட்சி தொடங்கி வெறும் இரண்டரை வருடம் மட்டுமே ஆனதால், எங்கள் கட்டமைப்பை முழுமையாக பல்படுத்திவிட்டு அடுத்த தேர்தலில் களம் இறங்குகிறோம், இந்த 2026 சட்டசபை தேர்தலை புறக்கணிக்கிறோம் என்கிற அறிவிப்பை விரைவில் விஜய் வெளியிட வாய்ப்புள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.