தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி நெருங்கி கொண்டிருக்கையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு எத்தனை தொகுதி என்பதை கடந்த முறை அமித்ஷா புதுக்கோட்டை வந்த போதே திருச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டு, அடுத்த நாள் டெல்லியில் நடந்த எடப்பாடி பழனிசாமி – அமித்ஷா ஆகியோர் நடத்திய சந்திப்பில் இறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் பாஜகவுக்கு எத்தனை தொகுதி என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது, ஆனால் எந்தத்த தொகுதி என்பதை சுமார் 70 சதவிகிதம் உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில் மீதம் 30 சதவிகிதம் தொகுதிகளை அதிமுக – பாஜக இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேசி மீதம் பாஜகவுக்கு ஒதுக்க கூடிய தொகுதிகள் எது என்பது இறுதி செய்யப்பட இருக்கிறது.

இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்ப்பாளர்களில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தர் ராஜன், வானதி ஸ்ரீநிவாசன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்னண், சரத்குமார் ஆகியோருக்கு தொகுதி உறுதி செய்யப்பட்டு இவர்களெல்லாம் ஸ்டார் வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.மீதமுள்ள மற்ற வேட்பாளர்கள் தேர்வில் தான் மிக பெரிய ட்விஸ்ட்டே தான் அமைந்து இருக்கிறது.
வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கும் பரிசீலனையில் உள்ள மற்ற வேட்ப்பாளர்களில், ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று முதல் 5 நபர்கள் வரை சீட் கேட்டு பாஜக தலைமையை முட்டி மோதி வருகிறார்கள். குறிப்பாக ஒரு மாவட்டத்திற்கு 1 தொகுதி அல்லது இரண்டு தொகுதி பாஜக போட்டியிடுகிறது என்றால் அதே மாவட்டத்தில் உள்ள பாஜகவை சேர்ந்தவர்கள் குறைந்து 5 நபர்கள் வரை சீட் கேட்டு வருகிறார்கள்.
இப்படி ஒரு சூழலில் நேரடியாகவே வேட்பாளர் தேர்வை அமித்ஷா மேற்பார்வையின் கீழே நடைபெற இருக்கிறது, அதற்காக அமித்சாவின் குழு தற்பொழுது தமிழகம் முழுவதும் களம் இறக்கப்பட்டு சர்வே பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தல் என்பது பிரதமருக்கான தேர்தல், வரும் சட்டசபை தேர்தல் என்பது முதல் அமைச்சருக்கான தேர்தல், அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிட்டு வேட்பாளர்களை சட்டசபை தேர்தலுக்கு தேர்வு செய்யப்படாது, அதே நேரத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சட்டசபை தொகுதி வாரியாக பாஜக அதிகம் வாக்கு பெற்ற தொகுதிகளில் தீவிரமாக தேர்தல் பணியாற்றிய நபர் என்பதையும் கண்டறிந்து வருகிறது அமித்சாவின் குழு.
மேலும் வேட்பாளராக தேர்வு செய்யக்கூடியவர் அந்த தொகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது அந்த தொகுதி மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க கூடியவர்கள் இருக்க வேண்டும் , மேலும் அந்த தொகுதியில் போட்டியிட கூடிய வேட்பாளர் சார்ந்த சமூகம் அந்த தொகுதியில் பெரும்பான்மையாக இருக்க வேண்டும், குறிப்பாக அந்த தொகுதி மக்கள் மத்தியில் மட்டுமின்றி அந்த தொகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகி மத்தியிலும் நன் மதிப்பை பெற்ற ஒருவராக இருக்க வேண்டும் என்கிற பல கண்டிஷன்கள் உடன் வேட்பாளர் தேர்வை செய்து வருகிறது அமித்ஷா குழுவினர்.
குறிப்பாக சமூக வலைதளத்தில் அந்த மாவட்டத்துக்கே சம்பந்தம் யில்லாதவர்களை வைத்து பக்கம் பக்கமாக தங்களை புகழ்ந்து எழுத வைத்து இவருக்கு தான் சீட் கொடுக்க வேண்டும் என பாஜக தலைமையை ஏமாற்றி இம்முறை சீட் வாங்க முடியாது என்கிறது பாஜக வட்டாரங்கள். அந்த வகையில் ஸ்டார் வேட்பாளர் தவிர்த்து மற்ற வேட்பாளர்கள் தேர்வுகள் நேரடியா அமித்சா மேற்பார்வையின் கீழ் தான் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

