விஜய் பின்னணியில் வெளிநாட்டு சக்தி… விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்… உறுதியாக சிறை தண்டனை….

0
Follow on Google News

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூரில் பங்கேற்ற நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 41 பேர் பலியான சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணையை மேற்கொண்டு வரும் வகையில், தொடர்ந்து விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்.

கரூர் விவகாரத்தை சிபிஐ மிக தீவிரமாக எடுத்து வரும் நிலையில் தாவேக தரப்பிலிருந்து ககரூர் விவகாரம் குறித்து எந்த ஒரு பேச்சும் இல்லாமல் அமைதியாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த விசாரணையை சிபிஐ தொடர்ந்து மேற்கொள்ள இருக்கும் நிலையில் அடுத்தடுத்து விஜய் இந்த விசாரணைக்கு ஆஜராக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது, மேலும் விரைவில் குற்ற பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், அந்த குற்ற பத்திரிக்கையில் விஜயின் பெயரும் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அப்படி விஜயின் பெயர் இந்த குற்ற பத்திரிக்கையில் இடம் பெற்றால், இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றதும் விஜய் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராக வேண்டிய சூழல் ஏற்படும் என கூறப்படுகிறது, கரூர் விவகாரத்தில் யாரும் தப்ப முடியாது என்றும் தப்பு செய்தவர் யாராயினும் நிச்சயம் சிறை தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை உறுதியாக சொல்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

இந்த நிலையில் விஜய்க்கு பின்னணியில் இந்தியாவுக்கு எதிரான வெளிநாட்டு சக்திகள் இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர் திடுகிடும் ஒரு தகவலை தெரிவித்து இருக்கிறார், விஜயின் அரசியல் செலவுக்கான பணம் அனைத்துமே வெளிநாட்டில் உள்ள சில மிஷனரி மூலமே விஜய்க்கு செலவிடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தகவல் இந்திய உளவுத்துறை மூலம் மத்திய அரசுக்கு நன்கு தெரியும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக விஜயை சுற்றி மிக நெருக்கமான வட்டாரத்தில் இருக்கும் பெரும்பாலானோர் மிஷினரிகளின் தொடர் உள்ளவர் என்றும், இது போன்ற ஒரு சூழ்ச்சி தெரியாமல் அரசியலில் பழுத்த அரசியல்வாதி செங்கோட்டையன் சிக்கிக்கொண்டார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. விஜயின் டார்கெட் வரும் 2026 தமிழ்நாடு அரசியல் இல்லை, 2029 இல் பாஜகவை தோல்வியடைய வைத்து ராகுல் காந்தியை முன்னிறுத்த வேண்டும் என்பதே விஜய்யை பின்னால் இயங்கும் மிஷனரிகளின் திட்டம் என்று குற்றச்சாட்டுகளை மூத்த அரசியல் வைத்துள்ளார்.

அந்த வகையில் ராகுல் காந்தி மற்றும் விஜய் இவர்கள் இருவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் தான் இந்தியாவுக்கு எதிரான மிஷினரி சக்திகளை வேலை செய்து வருவதாகவும், ஆனால் சில அரசியல் காரணங்களால் திமுகவை விட்டு காங்கிரசால் வெளியேற முடியவில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

குறிப்பாக கரூர் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணையில் விஜயிடம் சில புகைப்படம் வீடியோ ஆதாரங்களை காண்பித்து அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அப்படி கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் விஜய் திக்கு முக்காடி போனதாகவும் டெல்லியில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது.

குறிப்பாக விஜய் ஒரு அரசியல் வாதியாக செல்லும் வழியெல்லாம் ஒவ்வொரு ஊராக பேசிக் கொண்டே சென்றால் அவருக்கு பெரும் கூட்டம் கூடாது, அதனால் தான் ஒரே இடத்தில் பேசுவதாக அறிவித்து மக்கள் கூட்டத்தை காண்பித்து ஏமாற்று அரசியல் செய்து வருகிறார் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.