சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களை இருக்கும் நிலையில் திமுக தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி, தமிழக வெற்றி கழகத்தில் தலைமையில் ஒரு கூட்டணி என மும்முனைப் போட்டியின் நிலவும், திமுகவில் எதிர்ப்பு வாக்குகளை விஜய் அதிமுக இருவரும் பிரித்துக் கொள்வார்கள், நாம் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்கின்ற திமுகவின் திட்டம் தவிடு பொடியாக ஆகி உள்ளது.
காரணம் தமிழக வெற்றி கழகம் பக்கம் எந்த ஒரு அரசியல் கட்சியும் செல்லாமல் விஜய் தனியாக தத்தளித்து கொண்டிருக்கையில், திமுகவுக்கு எதிரான அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய கூட்டணியாக வலுவடைந்து வருவதை பார்க்க முடிகிறது, அந்தவகையில் வரும் சட்டசபை தேர்தல் திமுக கூட்டணி – அதிமுக கூட்டணிகளுக்கு இடையிலான நேரடி போட்டியாக மாறியுள்ளது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தை கட்சிகள் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என திமுக கூட்டணி கட்சிகளுக்கு உள்ளேயே பல முரண்பாடுகளுக்கு மத்தியில், அடுத்தடுத்து திமுக கூட்டணிக்குள் எந்தெந்த கட்சிகள் இருக்கும், எந்தெந்த கட்சிகள் வெளியேறும் என்கின்ற மிகப்பெரிய குழப்பம் நீடித்து வருகிறது.
இதற்கு இடையில் விஜயை நம்பி யாரும் கூட்டணிக்கு செல்வதாக இல்லை, அப்படியே காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் விஜய் பக்கம் சென்றாலும் கூட அது 2016 சட்டசபை தேர்தலின் போது அமைந்த மக்கள் நல கூட்டணி போன்று தான் இருக்கும் என்பதால் , அரசியல் வட்டாரத்தில் விஜய் தலைமையிலான கட்சியை யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை. இப்படி ஒரு சூழலில் தமிழக 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஆட்டத்தை பிரதமர் மோடி சென்னை மதுரங்கத்தில் உள்ள பொதுக்கூட்டம் மூலம் தொடங்குகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை வெளிப்படுத்தும் வகையிலும், மேலும் வரும் சட்டசபை தேர்தலுக்கான முதல் பிரச்சாரமாகவும் பார்க்க படுகிறது. அதிமுக – பாஜக கூட்டணி ஜெல் ஆகவில்லை என்கிற திமுகவின் பொய் பிரச்சாரத்தை உடைக்கும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி என்கிற ஒற்றை குடையின் கீழ் அதிமுக – பாஜக மட்டுமின்றி அடுத்தடுத்து தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் இணைந்துள்ளது.
குறிப்பாக பிரதம மோடி பங்கேற்கும் சென்னை பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் திருப்புமுனையாக பார்க்க படுகிறது. பிரதமர் பங்கேற்கும் இந்த மேடையில், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் – எடப்பாடி கே. பழனிசாமி, பா.ம.க. தலைவர் – டாக்டர் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் – டி.டி.வி. தினகரன், தென் இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் ஜி.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் – ஜி.கே. வாசன், புதிய நீதி கட்சி தலைவர் – டாக்டர் ஏ.சி. சண்முகம், இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் – பாரிவேந்தர், தமிழ் மாநில மக்கள் கட்சி நிறுவனர் – ஜான் பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த மாநாட்டின் மிக முக்கியத்துவமாக தேசிய ஜனநாயக கூட்டணியின் வலிமையை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைய இருக்கிறது.
மேலும் கடந்த நான்கரை ஆண்டு திமுக ஆட்சியின் அவலநிலையை எடுத்துரைக்கும் வகையிலும், திமுகவிடம் இருந்து தமிழகத்தை மட்டுமில்லை தமிழக பாரம்பரிய பண்பாட்டையும் மீட்டெடுக்கும் பொது கூட்டமாக பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் அமையும் என்கிறார்கள் பாஜகவினர். அந்த வகையில் 2026 தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பிரச்சாரமான சென்னை பிரட்சரத்தில் ஓப்பனிங் பேட்ஸ் மேனாக இறங்கி பிரதமர் மோடியே ஆட்டத்தை தொடங்குகிறார்.

