இன்னும் ஓரிரு மாநிலம் தான்… ராகுல்காந்தி துணையுடன் இந்தியா முழுவதும் பாஜக ஆட்சி… நிதின் நபின் போடும் வியூகம்..

0
Follow on Google News

பாஜக தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வெறும் 45 வயதே ஆன நிதின் நபின் தன்னுடைய 26வது வயதில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று இளம் வயது எம் எல் ஏ என்கிற பெயருக்கு சொந்தமானவர். தொடர்ந்து இவர் சந்தித்து 5 தேர்தல்களிலும் ஐந்து வெற்றிகளை பெற்ற நிதின் நபின் தேர்தல் வியூக வகுப்பில் இவரை அடித்து கொள்ள ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர் தேர்தல் பொறுப்பாளராக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை பாஜகவுக்கு பெற்று கொடுத்தவர் நிதின் நபின் .

இப்படி 45 வயதே ஆன இளம் தலைவராக பாஜகவில் கொண்டாட்டப்பட்டு வரும் நிதின் நபின் சாதனைகளை ஒரு பக்கம் அடுக்கி கொண்டே சென்று கொண்டிருக்கையில், இன்னும் இளம் தலைவராக தன்னை காட்டி கொண்டு தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் 55 வயதான ராகுல் காந்தியின் அரசியல் பயணத்தில் தோல்வியை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு தேசிய அளவில் மிக பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் பேரியக்கத்தை குறுகிய வட்டத்திற்கு சுருக்கி பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி எங்கே என்று கேட்கும் அளவுக்கு கொண்டு சென்ற பெருமை ராகுல் காந்தியவே சேரும்.

பாஜகவை தலைமை ஏற்று இருக்கும் நிதின் நபின் மாற்றும் காங்கிரஸ் கட்சியை தலைமை ஏற்று இருக்கும் ராகுல் காந்தி இருவரும் கடந்து வந்த பாதைகளை ஒப்பிடுகையில், பாஜக இளைஞரணி நிர்வாகியாக களப்பணியில் தொடங்கி படி படியாக உயர்ந்து இன்று பாஜக தேசிய தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் நிதின் நபின். அனால் ராகுல் காந்தி குடும்ப செல்வாக்கை பயன்படுத்தி நேரடியாக நாடாளுமன்றத்தில் நுழைந்தவர்.

மேலும் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக என்ன களப்பணி செய்தார் என்பதை தாண்டி, பொய்யான கதைகளை பாஜகவுக்கு எதிராக கட்டுஅவிழ்ந்து விடுவது, பின்பு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பது என்பதை வழக்கமாக கொண்டிருக்கும் ராகுல் காந்தி தலைமயிலான காங்கிரஸ் சந்தித்து வரும் தொடர் தோல்விகளில் இருந்து இன்னும் பாடத்தை கற்று கொள்ளாமல் விளையாட்டு பிள்ளையாகவே இருந்து வருகிறார்.

சத்தமே இல்லாமல் 5 வெற்றிகளை சந்தித்து 45 வயதில் இளம் தலைவராக பாஜக தேசிய தலைவராக பொறுப்புக்கு வந்துள்ள நிதின் நபினுக்கு 55 வயதில் இன்னும் அரசியல் பயிற்சியை மேற்கொண்டு , ஒரு தெளிவான அரசியல் பார்வை இல்லாமல் இருக்கும் ராகுல் காந்தி என்பது சரியான போட்டியாளர் இல்லை என்பதே நிதர்சனம். ஆகையால் காங்கிரஸ் கட்சியை எப்படி சமாளிப்பது என்பது நிதின் நபினுக்கு ஒரு விஷயமே இல்லை.

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கான வேலையை அவர் பார்த்துக்கொள்வார், மேலும் பாஜகவை வளர்ச்சியை நோக்கி எப்படி கொண்டு செல்லவேண்டும் என்பது தான் நிதின் நபின்க்கு மிக பெரிய கடைமையாக இருக்கிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் ஓரிரு மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்க ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி பரிதவித்து கொண்டிருக்க, இன்னும் ஓரிரு மாநிலக்களில் மட்டுமே பாஜக ஆட்சியை பிடித்துவிட்டால் இந்தியா முழுவதும் பாஜக ஆட்சி தான் என்பதற்காக களப்பணியில் நிதின் நபின் தலைமையிலான பாஜக தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது.

1980ல் பிறந்து 26 வயதியிலே சட்டமன்ற உறுப்பினராக, அடுத்து சந்தித்த அணைத்து தேர்தல்களிலும் வெற்றியை பெற்று வரும் நிதின் நபின், 2019ல் நாடாளுமன்றத்திற்கு நுழைந்தவர்,பீகார் மாநிலத்தில் அமைச்சராகவும் திறன்பட செயலாற்றி, சண்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றி பாஜக வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்து அமித்ஷா – மோடியின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வருகிறார் நிதின் நபின்.