கரூர் விவகாரத்தை சிபிஐ க்கு மாற்றி உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்டோகி தலைமையில் ஒரு குழுவையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து உத்திரபிரதேசத்தில் இருந்த அஜய் ரஸ்டோகி டெல்லி சென்று தலைமை நீதிபதியிடம் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
இந்நிலையில் அடுத்த ஆறு மாதத்திற்குள் கரூர் விவகாரம் குறித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பே கரூர் விவகாரம் மிக பெரிய அளவில் சிபிஐ விசாரணை மூலம் தமிழக தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜய் ரஸ்டோகி தலைமையிலான குழுவில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெற இருக்கிறார்கள்.

இதில் அந்த அதிகாரிகளுக்கு தமிழ் தெரிந்து இருக்க வேண்டும் ஆனால் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவராக இருக்க கூடாது, அதாவது பிற மாநிலங்களில் பிறந்து வளர்ந்த தமிழ் பேச கூடிய ஒருவராக இருக்க வேண்டும் ஏன் முடிவு செய்யப்பட்டுள்ளது, இதற்கு முக்கிய காரணம் அதே மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தால், அந்த அதிகாரிகரிக்கு அதிகாரம் படைத்தவர்கள் லஞ்சம் கொடுத்து சரி செய்ய வாய்ப்பு இருக்கு என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அஜய் ரஸ்டோகி தலைமையிலான குழுவில் ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி இருக்க வேண்டும் என அஜய் ரஸ்டோகி விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இறந்தவர்களில் பெண்கள் பலரும் உண்டு என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் திமுக அரசு தரப்பில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சிபிஐ உத்தரவு தற்காலிகமானது என தெரிவித்துள்ளது, குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதை தான்.
அதாவது வழக்கில் தோல்வி அடைந்ததை மறைக்க இது போன்ற தவறான தகவலை தெரிவிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் வரும் நவம்பர் 10 ம் தேதி சிபிஐ முன் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேரில் ஆஜராகி பல தகவல்களை தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தன் கண் முன்னே பார்த்த பல சம்பவங்களை சில ஆதாரத்துடன் சிபிஐ யிடம் விஜய் தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆறு மாதத்திற்குள் முழு ரிப்போர்ட் சமர்ப்பிக்க இருப்பதாகவும், மேலும் ஒவ்வொரு மாதம் இறுதி வாரத்தில், அதுவரை நடந்த சிபிஐ விசாரணை குறித்து தகவல் வெளியிடபட இருக்கிறது, இப்படி ஒவ்வொரு மாதமும் விசாரணை குறித்து அறிக்கை வெளியாகும் போது, தமிழக அரசியலில் மிக பெரிய பரபரப்பு நிச்சயம் நிலவும், இதனால் ஆளும் திமுக அரசுக்கு மிக பெரிய சிக்கல் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கரூர் விவகாரத்தில் தொடர்ந்து விஜய் அமைதியாக இருந்ததில் பின்னனி, புலி பதுக்கியது பாய்வதற்காக தான் என்றும், அரசியலில் நிதானம் மிக முக்கிய என்றும், அந்த வகையில் விஜய் அரசியல் கட்சி தொடங்கி மிக குறுகிய காலத்தில் ஏற்பட்ட கரூர் சம்பவத்தில், விஜய் அரசியலை இத்துடன் முடக்கி விட பல சூழ்ச்சிகள் அரங்கேறியதாகவும் ஆனால் சாதுர்யமாக சிபிஐ விசாரணைக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றதில், விஜய் நிதானமான, சாணக்யத்தனமான அரசியல்வாதி என்பதை நிரூபித்து இருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

