ஒரு நடிகர் அரசியல் கட்சி தொடங்குவது பெரிய விஷயம் இல்லை, ஆனால் அரசியல் கட்சி தொடங்கிய பின்பு வரும் தொடர் இடையூறுகளை எதிர்கொள்ள துணிவு இருந்தால் மட்டுமே அரசியலில் வெற்றி பெற முடியும், இதில் தமிழகத்தை பொறுத்த வரை எம்ஜிஆர் மட்டுமே சினிமா துறையில் இருந்து வந்து வெற்றி பெற்றவர், ரஜினிகாந்த் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள துணிவு இல்லாமல் தான் கட்சி தொடங்கும் முன்பே பின் வாங்கி புடணி தெறிக்க ஓடிய வரலாறு அனைவரும் அறிந்தது.
இந்நிலையில் முதல் படம் முதல் காட்சி போன்று விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் அவருடைய ரசிகர்கள், ஆரவாரம் செய்து கொண்டாடி மகிழ்ந்தார்கள், அடுத்தடுத்து தனக்கு கிடைத்த வரவேற்ப்பை தொடர்ந்து விஜய்யும் அரசியலில் தீவிரம் காட்ட கரூர் சம்பவத்துக்கு பின்பு ஒரே அடியாக வீட்டில் முடங்கினார் விஜய். கரூர் சம்பத்திற்கு பின்பு தான் விஜய்க்கு அரசியல் என்றால் என்ன.? எதற்காக ரஜினிகாந்த் என்னை ஆள விடுங்க சாமி என அரசியலே வேண்டாம் என ஓடினார் என்பதற்கெல்லாம் விஜய்க்கு விடை கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

இதனை தொடர்ந்து கரூர் கற்று கொடுத்த பாடம், விஜய் அரசியலில் மாற்றம் தொடங்கியிருக்கிறது, திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என மத்தியில் ஆளுகின்ற, மாநிலத்தில் ஆளுகின்ற இரண்டு கட்சிகளையும் ஒன்றாக எதிர்த்து அரசியல் செய்து வந்த விஜய் தற்பொழுது திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் கூட்டணி பலம் வேண்டும் என்பதை உணர்ந்து இருக்கிறார்.
இந்நிலையில் அரசியல் கட்சி தொடங்கியதும் அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த விஜய், அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தி வந்தார். ஆனால் அதிமுக பாஜக பக்கம் சென்றதும், அவருக்கு இருந்த இரண்டு வாய்ப்பு, ஒன்று அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய வேண்டும், அல்லது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி விஜய் உடன் கூட்டணி அமைக்க வேண்டும்.
இந்நிலையில் அதிமுக – பாஜக உடன் கூட்டணி அமைத்தால், முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிலை படுத்த முடியாது, ஆகையால் காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிலை படுத்தவே விஜய் விரும்பினார். இந்நிலையில் கரூர் விவகாரத்திற்கு பின்பு பாஜக மேலிடம் நேரடியாக விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
மேலும் தற்பொழுது திமுக தான் ஒரே எதிரி என இறுதி செய்த விஜய், தற்பொழுது தனித்து நின்றால் திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரியும், அதனால் திமுகவுக்கு தான் சாதகமாகும், மேலும் தமிழகத்தில் 4 சதவிகித வாக்கு வங்கியை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியால் சல்லி பைசா பிரேஜனம் இல்லை என உணர்ந்து கொண்ட விஜய், வரும் 2026 நமது இலக்கு இல்லை, 2031 தான் இலக்கு என்கிற முடிவுக்கு விஜய் வந்து விட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆகையால் வரும் 2031ல் தனித்து போட்டியிட்டு முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்த முடிவு செய்துள்ள விஜய், வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக உடன் கைகோர்க்க முடிவு செத்துள்ளார் விஜய். திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அமித்சா உடன் கைகோர்த்தால் மட்டுமே சரியாக இருக்கும், ராகுல் காந்தி அதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைக்க விஜய் இறுதி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் த வெ க நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவாக பாஜக – அதிமுக கட்சிகளை விமர்சனம் செய்ய வேண்டாம் என த வெ க தலைமையிடம் இருந்து உத்தரவு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

