கோபத்தில் கொந்தளித்த அஜித்… கப் சிப் ஆன ரசிகர்… ஆக்ரோஷமா நடந்துகொண்ட அஜித்…

0
Follow on Google News

சினிமாவை தாண்டி கார் ரேஸ் பைக் ரேஸ் துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார். ஆனால் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இந்த ஆர்வம் அஜீத்குமாரிடம் இருந்திருக்கிறது. ஏகப்பட்ட பைக் ரேஸ்களில் கலந்துக்கொண்ட பிறகு அஜீத்குமார் சினிமாவில் நடிக்கவே வந்திருக்கிறார். கடந்த 10, 15 ஆண்டுகளாக கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து கார் ரேஸில் பங்கேற்றும் வருகிறார்.

நடிகர் அஜீத்குமார் நடிக்கும் படத்தை இயக்க முன்னணி இயக்குனர்களும் தயாரிக்க தயாரிப்பாளர்களும் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் பல மாதங்களாக வெளிநாடுகளில் நடந்து வரும் கார் ரேஸ்களில் அதிக ஆர்வத்துடன் அஜீத்குமார் பங்கேற்று வருகிறார். அதில் சில வெற்றிகளையும் பெற்று சாதனை படைத்தும் இருக்கிறார். கார்ரேஸ் பைக்ரேஸ் போன்றவற்றுக்கு முதலிடம் தந்து சினிமாவை அவர் இரண்டாம் இடத்தில் வைத்திருக்கிறார் என்ற விமர்சனம் கூட எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவை பொருத்த வரை நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் அஜீத்குமார் விஜய் ஆகிய 4 பேரும்தான் உச்ச நட்சத்திர நடிகர்கள். இதில் ரஜினி கமலுக்கு வயதாகி விட்டதால் சீனியர் நடிகர்களாகி விட்டனர். விஜயும் அரசியல்வாதி ஆகிவிட்டார். அதனால் அஜீத்குமாரை வைத்து படம் உருவாக்க கோலிவுட்டில் கடும் போட்டியே இருக்கிறது. ஆனால் அஜீத்குமார் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் கார் ரேஸில் தொடர்ந்து கடந்த 10 மாதங்களாக பங்கேற்று வருகிறார்.

நடிகர் அஜீத்குமார் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி பல நாடுகளில் நடந்து வரும் கார் ரேஸில் தொடர்ந்து கலந்துக்கொண்டிருக்கிறார். இந்த முறை அஜீத்குமார் கார் ரேசிங் என்ற அணியின் தலைவராகவும் இருந்து இந்த கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். தொடர்ந்து பல போட்டிகளில் முக்கிய இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இந்தியன் ஃபிலிம் இண்டஸ்ட்ரி என்ற லோகோவை தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் பொறித்து சர்வதேச அளவில் இந்திய திரையுலகின் புகழை கொண்டு சென்றிருக்கிறார்.

இதை பாராட்டி தமிழக அரசு சார்பில் சமீபத்தில் அஜீத்குமாருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கார் ரேஸ் துவங்கிய கடந்த 10 மாதங்களாக வெளிநாடுகளில் தான் அஜீத்குமார் தங்கி இருக்கிறார். அவ்வப்போது அவரது புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்நிலையில் அவரை பார்க்கவும் அவர் கார் ரேஸில் பங்கேற்கும் போட்டிகளை பார்க்கவும் அவரது ரசிகர்கள் வெளிநாடுகளுக்கு நேரில் சென்று ஆரவாரம் செய்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் அஜீத்குமாரின் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அஜீத்குமார் கார் ரேஸ் நடக்கும் பகுதியில் கேஷூவலாக வருகிறார். அப்போது திரண்டிருக்கும் ரசிகர்களை பார்த்து கையசைத்து லேசாக சிரிக்கிறார். உடனே குஷியான ரசிகர்கள் சத்தமாக விசில் அடித்து கத்துகின்றனர். இதை பார்த்து டென்ஷனான அஜீத்குமார் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு விசில் அடிக்கக்கூடாது என்று விரலை ஆட்டி சைகை செய்து எச்சரித்தார். இதை கவனித்த ரசிகர்கள் உடனடியாக விசில் அடிப்பதையும் கத்துவதையும் நிறுத்தி சைலன்ட் ஆகிவிட்டனர்.

முதலில் ரசிகர்களை பார்த்து புன்னகைத்து தன் அன்பை வெளிப்படுத்திய பின் அதே ரசிகர்கள் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் விதமாக சத்தம் எழுப்பி விசில் அடித்தவுடன் தனது ஒரே முறைப்பால் விரலை ஆட்டி ஒரே சைகையால் அனைவரையும் ஒரு நொடியில் அஜீத்குமார் கண்ட்ரோல் செய்தார். இப்படி ரசிகர்களை ஒரே நொடியில் கட்டுப்படுத்த அஜீத்குமார் ஒருவரால் மட்டுமே முடியும் என்று அவர் ரசிகர்கள் கமெண்ட் செய்து அவரை பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.