விஜய்யை காப்பாற்றிய அண்ணாமலை…. உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம்… விஜய்க்கு எதிராக பின்னப்பட்ட சூழ்ச்சி..

0
Follow on Google News

கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது, திமுக அரசுக்கு சம்மட்டி அடியாக அமைத்துள்ளது. ஆதவா அர்ஜுனா , பாஜக, மற்றும் இறந்தவர்கள் உறவினர்கள் என மூன்று தரப்பினர், கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கொடுத்த இந்த வழக்கு தாவெக வுக்கு சாதகமாக வருவதற்கு முக்கிய காரணம் அதாவ அர்ஜுனா நியமித்த வழக்கறிங்கர்கள்.

திமுக அரசு இந்த வழக்கில் முகில் ரோகித் போன்ற தலை சிறந்த வழக்கறிஞர்களை அவர்களுக்கு ஆதரவாக ஆஜராக நியமித்தனர், ஆனால் முகில் ரோஹித்துக்கு இணையாக வாதாட கூடிய வழங்கறிங்கர்களை டெல்லியில் முகாமிட்டு மிக சிறப்பாக ஏற்ப்பாடு செய்து இருந்தார் ஆதவா அர்ஜுனா. அந்த வகையில் கோபால் சுப்பிரமணி, ரகவாச்சாரி போன்ற வழங்கறிஞர்கள் தமிழக அரசுக்கு எதிராக ஆஜரானார்கள்.

இந்நிலையில் திமுக அரசு நியமித்த வழக்கறிஞர்கள் திக்குமுக்காடி போகும் வகையில் இருந்தது தவெக சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வைத்த வாதம், இதற்கு முன்பு தமிழக உயர்நீதிமன்றம் , கரூர் விவகாரத்தை அவசர அவசரமாக விசாரித்து தவெக மற்றும் அதன் தலைவர் விஜய் ஆகியோரை கடுமையாக சாடி இருந்த நிலையில், தற்பொழுது, உயர்நீதிமன்றத்திற்கு தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்து இருந்தது உச்ச நீதிமன்றம்.

இந்நிலையில் கரூர் சம்பவம் நடந்த அன்று இரவோடு இரவாக அவசர வசரமாக இறந்தவர்கள் உடலை போஸ்ட் மாடர் செய்தது, அதுவும் ஒரு உடலை போஸ்ட் மாடர் செய்யவேண்டும் என்றால் சில மணி நேரம் ஆகும், அப்படி இருக்கையில் பெரும்பாலான உடல்கள் இரவோடு இரவாக போஸ்ட் மாடர் செய்தது எப்படி ஏன் பலரும் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் போஸ்ட் மடார் குறித்து தவெக சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

மேலும் 10 ஆயிரம் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், 20 ஆயிரம் பேர் கூடிய இந்த கூட்டத்தில், 600 போலீசார் வரை காவலில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில், ஒரு காவலர்களுக்கு கூட ஏன் இந்த தள்ளுமுள்ளுவில் சிறிய காயம் கூட ஏற்பட வில்லை என தவெக சார்பில் ஆஜரான வழங்கறிங்கர்கள் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

அந்த வகையில் தவெக சார்பில் ஆஜரான வழங்கறிங்கர்கள் வைத்த வாதம் திமுக சார்பில் ஆஜரான முகில் ரோகித் போன்ற தலை சிறந்த வழங்கறிங்கர்களை கூட திக்குமுக்காட செய்தது. தற்பொழுது தவெக வுக்கு உச்சநீதிமன்றம் சாதகமாக சிபிஐ கரூர் விவகாரத்தை விசாரிக்கலாம் என தீர்ப்பு வந்தாலும் கூட, அரசியல் களத்தில் ஒன்று காங்கிரஸ் உடன் தவெக கூட்டணி அமைக்க வேண்டும் அல்லது பாஜக உடன் கூட்டணி அமைக்க வேண்டும்.

இல்லை தனியாக தான் போட்டியிடுவோம், என திமுக – பாஜக இரண்டு கட்சியையும் கடுமையாக தவெக விமர்சனம் செய்தால் அது தவெக வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும், அந்த வகையில் பலம் பொருந்திய திமுகவை தவெக எதிர்க்க வேண்டும் என்றால், பாஜக துணை தற்பொழுது தேவை படுகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள், மேலும் கரூர் விவகாரம் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் கொலை காரன் விஜய்யை கைது செய்ய வேண்டும் என திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள தொடங்கினார்கள்.

ஆனால் இதில் இருந்து காப்பாற்றியது அண்ணாமலை தான், கரூர் சம்பவம் குறித்து அண்ணாமலை கொடுத்த பேட்டியில், ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக காவல் துறை தரப்பில் இருக்கும் குறைபாடுகளை சுட்டி காட்டிய அண்ணாமலை, விஜய் பக்கம் இருக்கும் நியத்தையே எடுத்துரைத்து மக்கள் மத்தியில் விஜய்க்கு ஏற்பட இருந்த அவப்பெயரை போக்கியவர் அண்ணாமலை என்பது குறிப்பிடதக்கது.