விஜய்க்கு இருக்கும் இரண்டே வாய்ப்பு… திமுகவுக்கு டெபாசிட் கூட தேறாது … அமித்ஷா ஆப்ரேஷன் சக்சஸ்…

0
Follow on Google News

விஜய்யின் அரசியல் என்பது கரூர் சம்பவத்துக்கு முன், கரூர் சம்பவத்துக்கு பின் என்று தான் பிரித்து பார்க்க வேண்டும், கரூர் சம்பத்துக்கு முன்பு தன்னை சுற்றி இருப்பவர்களின் பேச்சை கேட்டு , நம்மை சுற்றி இருக்க கூடிய, ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி அணைந்து, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் நம்மை சரியாக தான் வழிநடத்துகிறார்கள் என்கிற நம்பிக்கையில் அரசியல் பயணத்தை தொடர்ந்த விஜய்க்கு விழுந்த பலத்த அடி தான் கரூர் சம்பவம்.

இந்நிலையில் கரூர் சம்பத்துக்கு பின்பு ஒவ்வொரு விஷயத்தையும் , தன்னை சுற்றி இருப்பவர்கள் மட்டும் இன்றி, தனக்கு நெருக்கமான ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ், ஐ பி எஸ் அதிகாரிகள், தனக்கு நெருக்கமான சில அரசியல் தலைவர்கள் என அனைவரிடமும் வீட்டில் இருந்து கொண்டே போனில் பேசி ஆலோசனை நடத்தும் விஜய், இனி ஒவ்வொரு விஷயத்தையும் தானே முடிவு செய்கிறேன் என்கிற முடிவில் விஜய் வந்து விட்டார் என கூறப்படுகிறது.

விஜய் அரசியல் கட்சி தொடங்கிய மிக குறுகிய காலத்தில் 2026 சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியுமா என்றால், அதற்கான களம் சூழல் தற்போது இல்லை. விஜய் தனித்து போட்டியிட்டால், விஜய் நிற்கும் தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறலாம், மேலும் வாக்குகளை பிரிக்கலாமே தவிர, பெரிதாக அரசியலில் விஜய்யால் ஜொலிக்க முடியாது. இந்நிலையில் விஜய் கூட்டணியை எதிர்பார்த்து தான் அவருடைய அரசியல் நகர்வுகளை நகர்த்தி வந்தார்.

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் – விசிக – கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணிக்கு வருவதற்கு தொடர்ந்து விஜய் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது, அந்த வகையில் பாஜகவை விமர்சனம் செய்தால் தான் இவர்கள் எல்லாம் நம்மை நோக்கி வருவார்கள் என விஜய் தொடர்ந்து பாஜகவையும் விமர்சனம் செய்து வந்தார். ஆனால் காங்கிரஸ் மற்றும் விசிக போன்ற கட்சிகள் விஜய் பக்கம் சென்று விடுவோம், என திமுகவை மிரட்டி அதிக தொகுதிகள் கேட்டு பெறலாம் என்கிற திட்டத்தில் தான் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கரூர் சம்பவத்திற்கு பின்பு பாஜக – அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு கதவை திறந்து வைத்துள்ளார் விஜய். மேலும் அமித்சா நேரடியாகவே விஜயை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். இந்த தகவல் அறிந்த ஆட்டம் கண்ட காங்கிரஸ் விஜயை பாஜக பக்கம் செல்லவிடாமல் தடுக்கும் வேலையாக விஜய் உடன் தொடர்ந்து கூட்டணிக்கு வருவது போன்று நம்பிக்கை கொடுத்து வருகிறது.

இந்நிலையில் விஜய்க்கு தற்பொழுது இரண்டே வாய்ப்பு தான், ஒன்று திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும், அல்லது அதிமுக – பாஜக உடன் கூட்டணி அமைக்க வேண்டும், இந்த இரண்டு இல்லாமல் தனித்து விஜய்யால் போட்டியிட முடியாது, அந்த வகையில் அதிமுக பாஜக உடன் விஜய் கூட்டணி அமைத்தால் திமுக மிக பெரிய தோல்வியை சந்திக்கும்.

அல்லது திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் உட்பட கட்சிகள் வெளியேறி விஜய் உடன் கூட்டணி அமைத்தாலும், திமுக வாக்குகள் இரண்டாக உடைந்து அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறவே வாய்ப்புள்ளது, அந்த வகையில் இதில் இரண்டில் எது நடந்தாலும் அதிமுக – பாஜக கூட்டணிக்கு தான் சாதகமும், திமுகவை எளிதாக வீழ்த்தி விடலாம் என்கிற மகிழ்ச்சியில் அமித்ஷா இருந்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் வரும் சட்டசபை தேர்தலில் திமுகவின் ஆட்டம் முடிவுக்கு வரும் சூழலில் விஜய்யின் அரசியல் வருகை அமைத்துள்ளது. மொத்தத்தில் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது யாருக்கு லபோமோ இல்லையோ, திமுகவுக்கு மிக பெரிய சேதாரம் தான் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.