கரூரில் நடந்த அந்த துயர சம்பவத்தால் பெரிய பாதிப்பு அடைந்த தவெக கட்சியின் தலைவர் விஜய் வெளியிடங்களுக்கு எங்கும் செல்லாமல் கடந்த 10 நாட்களாக சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டுக்குள்ளேயே அமைதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் வசித்து வரும் நீலாங்கரை இல்லம் குறித்த பல முக்கிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகர்களின் ஒருவர் விஜய். அவரது நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் விமர்சன ரீதியாக சுமாராக இருந்தாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸில் பல நூறு கோடி ரூபாய்களை கொட்டி குவித்து விடுகிறது. அதனால் அவர் நடித்த படம் மோசமாக இருந்தாலும் வசூல் சூப்பராக இருந்து விடுகிறது.

நடிகர் விஜய் அவர் பயன்படுத்தும் தன்னுடைய பொருட்கள் அனைத்தும் எப்போதுமே தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதை விரும்புபவர். எதை செய்தாலும் அதில் தனக்கான ஒரு ஸ்பெஷல் இருக்க வேண்டும் என்பதும் அவரது பாலிஸியாக வைத்திருக்கிறார். அப்படித்தான் பார்த்து பார்த்து தனது நீலாங்கரை வீட்டையும் விஜய் கட்டி இருக்கிறார்.
நடிகர் விஜயின் ஆடம்பர பங்களா சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ளது. இந்த நீலாங்கரை இல்லம் கடற்கரைக்கு அருகே அமைந்திருக்கிறது. ஒருமுறை நடிகர் விஜய் படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்குச் சென்ற போது அங்கு ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் இல்லத்தை வெளியில் இருந்து பார்த்ததாகவும் அதைப் பார்த்து அதேபோல தானும் வீடு கட்ட வேண்டும் என்றுதான் நீலாங்கரை இல்லத்தை நடிகர் விஜய் பார்த்து பார்த்து ரசித்து உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இப்போது நடிகர் விஜயின் வீட்டு கேட்டுக்கு முன்னால் இருந்து மட்டுமே அந்த வீட்டை பெரும்பாலும் ரசிகர்கள் பார்த்திருக்கின்றனர். ஆனால் அவரது வீட்டுக்குள் எப்படி இருக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். விஜயின் வீட்டுக்குள் ஹால் மட்டுமே மிக பிரமாண்டமாக அமைந்திருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட காஸ்ட்லியான மின்விளக்குகள் என வண்ணமயமாக காட்சியளித்து வீட்டை அலங்கரிக்கிறது.
அதேபோல் வீட்டுக்குள் நவீன வசதிகளுடன் உடற்பயிற்சி கூடம் ( ஜிம்) வீட்டுக்கு வெளியே நீச்சல்குளம் இருக்கின்றன. விஜயின் வீட்டுக்கு வெளியே லேண்ட்ஸ்கேப்டு கார்டன்ஸ் எனப்படும் ஒரு பூங்காவும் காணப்படுகிறது. அதில் பெரிய நிழல் தரும் மரங்கள் புல்வெளிகள் புதர்கள் பூச்செடிகள் என்று காணப்படுகிறது. அதை ஒழுங்குப்படுத்தி நடப்பதற்கு நடைபாதை விட்டு சரியாக பராமரிப்பு செய்கிறார்கள்.
நடிகர் விஜய் இங்கு அடிக்கடி அமர்ந்து தியானம் செய்வதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் அரை சதுர அடி விலையே ஆயிரக்கணக்கில் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். நீலாங்கரையில் நடிகர் விஜய்யின் ஆடம்பர பங்களா மொத்த மதிப்பு 70 கோடி முதல் 80 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இருப்பினும் நீலாங்களை பங்களாவின் துல்லியமான விலை எவ்வளவு என்பது தெரியவில்லை. சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் போதே அரசியலுக்கு வர வேண்டும் என்ற யோசித்த விஜய் தேர்தலுக்கு முன்பே அதற்கான பணிகளிலும் இறங்கினார். ஆனால் கடந்த 27ஆம் தேதி கரூரில் அவர் பங்கேற்ற தவெக கூட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவம் அவரது அரசியல் பயணத்தில் பெரிய பின்னடைவை சந்தித்திருக்கிறது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் தலைமறைவாகி விட்டார். கட்சியின் தலைவர் விஜயும் தன்னுடைய நீலாங்கரை பங்களாவுக்குள் ஐக்கியமாகி விட்டார்.

