கரூர் சம்பவத்துக்கு பின்பு பாஜக பக்கம் நெருங்கி இருக்கும் விஜயிடம் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக வந்த தகவல் உண்மை என உறுதி படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அமித்ஷா விஜய்யிடம் பேசியது போன்றே ராகுல் காந்தியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜயிடம் பேசி இருக்கிறார்.
குறிப்பாக விஜய், காங்கிரஸ் , விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வரும் அவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது தான் முதல் சாய்ஸ் ஆக வைத்து இருந்தார், இவர்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்கிற நம்பிக்கையில் தான் பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் விஜய், இந்நிலையில் கரூர் சம்பவத்துக்கு பின்பு பாஜக விஜய்க்கு ஆதரவாக இருந்தாலும், காங்கிரஸ் உடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வந்துள்ளார்.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியை நம்பி ஏமார்ந்து விட கூடாது, அதனால் காங்கிரஸ் உடன் கூட்டணியை உறுதி செய்யவேண்டும் என காங்கிரஸ் தரப்புக்கு விஜய் தரப்பு கண்டிஷன் போட்டது. இதனை தொடர்ந்து ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்து விஜய்யை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசி இருக்கிறார், அப்போது நாங்கள் திமுக கூட்டணியை விட்டு வெளியே வர முடியாது என தெரிவித்த ரகுல்,
திமுக தேசிய அளவில் எங்களுக்காக உடன் நிற்கும் கட்சி, இந்தியா கூட்டணி உருவாக காரணமான திமுகவுடன் இப்போதும் உயிர்ப்புடன் இருக்க சகோதரர் ஸ்டாலின் ஒரு காரணம்.அவரை விட்டு பிரிய முடியாது. உங்களையும் நாங்கள் விட்டுக்கொடுக்க முடியாது. அதனால் நீங்கள் எங்களுடன் வந்துவிடுங்கள் என தெரிவித்த ராகுல் காந்தி,
நீங்கள் உங்கள் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து விடுங்கள். சிரஞ்சீவி அரசியல் நெருக்கடிகளை சந்தித்தார். அவர் அரசியல் செய்ய முடியாது என்று உணர்ந்த பின், எங்களுடன் இணைந்தார். நீங்களும் எங்களுடன் இணைந்துவிடுங்கள் என்று விஜயிடம் ராகுல் காந்தி தெரிவிக்க, உடனே டென்ஷனான விஜய், நீங்கள் நினைப்பது நடக்காது என ஒரே வார்த்தையில் தெரிவித்து ராகுல் காந்திக்கு குட் பை சொல்லி இருக்கிறார்.
இதன் பின்பே பாஜக உடன் கூட்டணியை உறுதி செய்துள்ள விஜய், வரும் டிசம்பர், ஜனவரி மாதத்தில் அதிகாரபூர்வமாக பாஜக – அதிமுக உடனான கூட்டணியை அறிவிக்கலாம் என பாஜகவுக்கு விஜய் சிக்னல் கொடுத்து இருக்கிறார், அதற்குள் தன்னுடைய பழத்தை நிரூபிக்கும் வகையில் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கி மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார் விஜய்.
இந்நிலையில் காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தையில், கட்சியை களைத்து விட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து விடுங்கள் என ராகுல்காந்தி விஜய்யை அசிங்கப்படுத்தும் விதத்தில் பேசியதை தொடர்ந்து இனி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த வேண்டாம் என தன்னுடைய சகாக்களுக்கு விஜய் உத்தரவு போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து பாஜக – அதிமுக – விஜய் கூட்டணி உறுதியாகி விட்டது என்கிற காரணத்தினால் தான் தற்பொழுது, திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் உட்பட அணைத்து கட்சிகளும் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

