முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் ராமநாதபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், மத்திய பாஜக அரசை கடுமையாக பேசி இருந்தார், இது கரூரில் 40க்கு மேற்பட்டவர்கள் உயிர் இழந்த சம்பவத்தை திசை திருப்பும் விதமாக அமைந்துள்ளது முதல்வர் முக ஸ்டாலின் ராமநாதபுரம் பேச்சு என்கிற குற்றசாட்டை பாஜக வைத்துள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பேசிய பேச்சுக்களில் உள்ள பொய் தற்பொழுது அம்பலமாகி உள்ளது. அதில் மணிப்பூர் கலவரதின் போது உடனே விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறார்கள் என்றால், தமிழ்நாட்டு மக்கள் மீது இருக்கின்ற அக்கறையால் கிடையாது என முதல்வர் பேசி இருந்தார்.

இந்நிலையில் பட்டியல் சமூக மக்களின் தண்ணீர் தொட்டிகளில் மலம் கலந்திருப்பது கண்டறியப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள வேங்கைவயல் கிராமத்திற்கு இது வரை செல்லாத முதல்வர் முகஸ்டலின் மத்திய அரசு மணிப்பூருக்கு ஆணையத்தை அனுப்பிய விவரம் தெரியாமல் இது குறித்து கேள்வி எழுப்பலாமா என எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மணிப்பூர் கலவரத்தை விசாரிக்க மத்திய அரசு ஜூன் 4 2023 அன்று உள்துறை அமைச்சகத்தால் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் ஹிமான்ஷு சேகர் தாஸ் மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அலோகா பிரபாகர் ஆகியோர் குழு அடங்கிய ஆணையம் ஒன்றை அமைத்தது, இந்த ஆணையம் மே 3 2023 தொடக்கி மணிப்பூர் கலவரம் குறித்த விசாரணையை தொடங்கியது.
ஆனால், தமிழகத்தில் வேங்கை வயல் , கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம், ஆகியவற்றை பார்வையிடாத முதல்வர் முக ஸ்டாலின், மணிப்பூர் கலவர குறித்து மிகுந்த கவலையிடுவதா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் நடந்த பேரிடரின் போது மத்திய அரசு தமிழ்நாட்டை வந்து பார்வையிடவில்லை , நிதி வழங்கவில்லை என முதல்வர் தெரிவித்து இருந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்பு நடந்த 2023ம் ஆண்டு நடந்த மிச்சாங் புயல், 2024ல் ஏற்பட்ட புயல் வெள்ளம் ஆகியவற்றை பார்வையிட மத்திய குழு வந்தது, மேலும் மாநில பேரிடர் மீட்டு நீதியாக மத்திய அரசு 900 கோடி அளித்தது, அதே போன்று 2024ல் ஃபெங்கல் புயலுக்குப் பிறகு, சேதத்தை மதிப்பிடுவதற்காக தமிழகம் வந்தது மத்திய குழு. இதனை தொடர்ந்து தமிழகத்தின் நிவாரணத்திற்காக ₹944.80 கோடியை விடுவிக்க ஒப்புதல் அளித்தது மத்திய அரசு.
இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு தமிழகத்தின் வெள்ள நிவாரணத்திற்காக ₹59.82 கோடியை வழங்கியுள்ளது. மேலும் 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கான SDRF மத்திய பங்கு ₹992.00 கோடி என அள்ளி கொடுத்து வரும் மத்திய அரசு எப்போதும் பேரிடர்களின் போது தமிழ்நாட்டை கண் இமை போல் காப்பாற்றி வரும் நிலையில், முதல்வர் முக ஸ்டாலின்தனது நிர்வாகத்தின் தோல்வியை மறைக்க தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என பொய்களைப் பரப்பி வருகிறார் என பாஜக தரப்பில் குற்றசாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் மக்கள் இருந்து வரும் நிலையில், கரூர் சம்பத்திற்கு பின்பு மேலும் திமுக மீது இருக்கும் மக்கள் அதிருப்தி அதிகரித்து உள்ள நிலையில் இதை திசை திருப்பவே முதல்வர் முக ஸ்டாலின் மத்திய அரசை விமர்சனம் செய்கின்ற பெயரில் பொய்யை சொல்லி வருகிறார் ஏங்கி குற்றச்சாட்டுகளையும் அரசியல் விமர்சகர்கள் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

