தாலியை தூற போட்ட கீர்த்தி சுரேஷ்… திருமணம் முடிந்து ஒரு வருடம் கூட அகல… அதுக்குள்ள பிரச்சனையா…

0
Follow on Google News

திருமணம் ஆன புதிதில் நடிகை கீர்த்தி சுரேஷ் தாலியுடன் பேபி ஜான் பட விழாவில் பங்கேற்றது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. கீர்த்தி சுரேஷை பார்த்து இந்திய நடிகைகள் பலரும் கற்றுக்கொள்ள வேண்டும் என பலரும் அவரை முன் உதாரணமாக கூறி மற்ற நடிகைகளை ட்ரோல் செய்தனர்.

பெரும்பாலான நடிகைகள் திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க தங்கள் தாலியை கழட்டி வைப்பது சாதாரண விஷயமாக மாறி பலகாலம் ஆகிவிட்டது. ஆனால் மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது மட்டுமே கழுத்தில் தாலி அணியால் வருவதை சில நடிகைகள் மட்டுமே டைபிடிக்கின்றனர்.

தற்போது கீர்த்தி சுரேஷூக்கு பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்து போன நிலையில் கிளாமர் ரூட்டுக்கு சென்று, எப்படியாவது பட வாய்ப்புகள் பெற வேண்டும் என்பதற்கான பகீரத முயற்சிகள் நடிகை கீர்த்தி சுரேஷிடம் சமீபமாக அதிகமாக காணப்படுகின்றன.

பைரவா மற்றும் சர்கார் ஆகிய 2 படங்களில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் விஜய் இணைந்து நடித்த நிலையில் அவர்கள் தொடர்பாக ஏகப்பட்ட கிசுகிசுக்கள் ஏற்கனவே வெளிவந்தன. அந்த சூழலில் திடீரென தனது காதலர் என ஆண்டனி தட்டில் என்பவரை அறிமுகப்படுத்திய கீர்த்தி சுரேஷ் கடந்தாண்டு டிசம்பரில் அவரை திருமணமும் செய்து கொண்டு அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதே நேரத்தில் கீர்த்தி சுரஷே் எனது தோழி மட்டுமே என்பதை நிரூபிக்கும் விதமாக நடிகர் விஜயும் கோவாவில் நடந்த கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு தனி விமானத்தில் நேரில் சென்று வந்தார். கீர்த்தி சுரேஷ் கடைசியாக நடித்த சைரன் 108 ரகுதாத்தா மற்றும் பேபி ஜான் ஆகிய மூன்று படங்களும் படுதோல்வி அடைந்தன. எனினும் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் மலையாள படங்களில் நடித்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஓடவில்லை.

ரிவால்வர் ரீட்டா என்ற படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ள நிலையில் இன்னும் அந்த படத்தில் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிப் போய் உள்ளது. டிரெய்லர் வெளியாக கவனம் பெறாத நிலையில்படம் எப்போது வெளியாகும் என்பதும் தெரியவில்லை. இந்த ஆண்டு தெலுங்கில் வெளியான உப்புகப்புரம்பு படமும் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட் ஆகவில்லை. அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் ஒரு படத்தில் இயக்குனர் மிஷ்கின் உடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டுள்ள கீர்த்தி சுரேஷ் அடிக்கடி மும்பைக்கு விசிட் செய்து வருகிறார். தமன்னா ரூட்டில் கீர்த்தி சுரேஷூம் கவர்ச்சி ரூட்டை தேர்வு செய்து விட்டாரா என்றும் தாலியை கழற்றி வைத்துவிட்டு வைர நகைகளை அணிந்து இப்படி கிளாமராக போஸ் கொடுத்துள்ளாரே என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். திருமணமான புதிதில் தாலியுடன் பேபி ஜான் பட பிரமோஷனுக்கு கீர்த்தி சுரேஷ் வரும்போது பஃயர் விட்டதெல்லாம் வீணாகி போச்சே என்று ரசிகர்கள் இப்போதும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சினிமாவில் நடித்து விட்டால் அது தரும் அளவுகடந்த புகழ் போதை என்பது யாராலும் அதை அவ்வளவு சுலபமாக விட்டு விலக முடியாது. ஏனெனில் கோடிக்கணக்கில் கொட்டும் பணம், எங்கு சென்றாலும் ரசிகர்கள் தரும் முக்கியத்துவம் கைதட்டல் என புகழ் வெளிச்சத்தில் இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள், மீண்டும் பட வாய்ப்புகளை பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

தாலியை கழட்டி வைத்து விட்டு மட்டுமல்ல, இதுவரை பல நடிகைகள் தாலி கட்டிய கணவரையே கழட்டி விட்டுவிட்டு கேமரா முன்பு வந்து நின்றிருக்கின்றனர். தொடர்ந்து நடித்தும் வருகின்றனர். இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் மட்டும் விதிவிலக்கல்ல என்று முதிர்ச்சியடைந்த ரசிகர்கள் பலர் விமர்சனம் செய்கின்றனர்.