அமைச்சர் மூர்த்தியின் பரிசு மழை … எடப்பாடியிடம் முறையிட்ட செல்லூர் ராஜு… ஸ்டிக்டா சொன்ன எடப்பாடி…

0
Follow on Google News

வரும் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது, தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே திமுகவினர் பணத்தை வாரி இறைக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மதுரையில் உள்ள 10 சட்டசபை தொகுதியில் அதிமுக கூட்டணி 5 தொகுதிகளும், திமுக கூட்டணி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தென் மாவட்டத்தின் தலைநகரான மதுரையை பொறுத்த வரை இரண்டு கட்சிகளும் சம பலத்துடன் இருந்தது.

இதில் 2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி பிடித்து இருந்தாலும் மதுரையில் பாதி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. இந்நிலையில் கடந்த சட்டசபை தேர்தல் போன்று இல்லாமல் , வரும் 2026 சட்டசபை தேர்தலில் மதுரையில் திமுக முழுமையான வெற்றி பெற வேண்டும் என அமைச்சர் மூர்த்த வகிக்கும் மாவட்ட செயலாளர் பொறுப்பில், ஏற்கனவே 3 சட்டசபை தொகுதி இருந்த நிலையில், கூடுதலாக அமைச்சர் செல்லூர் ராஜு சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மதுரை மேற்கு தொகுதியை மூர்த்தி கைவசம் கொடுத்தது திமுக தலைமை.

கடந்த 25 வருடமாக தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்று வரும் நிலையில், மதுரை மேற்கு அதிமுக கோட்டை என்றே வர்ணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் மூர்த்தி கைவசம் மதுரை மேற்கு தொகுதி வந்த பின்பு, அந்த தொகுதி மக்களுக்கு ஒரே கொண்டாட்டம் என்று சொல்லும் வகையில், தொடர்ந்து பரிசு பொருட்களை வாரி இறைத்து வருகிறார் அமைச்சர் மூர்த்தி.

தேர்தலுக்கு இன்னு 6 மாதம் இருக்கும் சூழலில் அதற்குள் மதுரை மேற்கு தொகுதி மக்களுக்கு வாரி இறைத்து வருகிறார் அமைச்சர் மூர்த்தி என அதிமுகவினரிடம் கேட்டால், கடந்த 4 வருடத்தில் அமைச்சர் மூர்த்தி சம்பருச்சு வெச்சுருக்க பண குவியலின் வெளிப்பாடு தான் இது என மதுரை அதிமுகவினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இதுவரை ஓட்டுக்கு பணம் கொடுப்பதை திருமங்கலம் பார்முலா என்பார்கள், ஆனால் தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த அந்த தொகுதி மக்களுக்கு அடிக்கடி பரிசு பொருட்களை கொடுத்து வரும் அமைச்சர் மூர்த்தியின் செயலுக்கு , இது மூர்த்தி பார்முலா என்கிறார்கள் மதுரை வாசிகள்.

இந்நிலையில் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் மூர்த்தியின் அட்ராசிட்டி யை தெரிவித்து, வரும் 2026 சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் சீட் வேண்டாம், மதுரை தெற்கு தொகுதியில் வாய்ப்பு கொடுங்க என கேட்டிருக்கிறார், அதற்கு 25 வருடமாக தொடர் வெற்றியை பெற்று அதிமுக கோட்டை என கொண்டாடப்படும் மேற்கு தொகுதியை அவ்வளவு சீக்கிரம் விட்டு கொடுத்து விடலாமா என சற்று கோபத்துடன் பேசிய எடப்பாடி பழனிச்சாமி.

மேற்கு தொகுதியில் நாம் மீண்டும் வெற்றி பெற்றே ஆக வேண்டும், மேற்கு தொகுதியில் நீங்கள் தான் வேட்பாளர் என செல்லூர் ராஜுவிடம் ஸ்டிட்டாக சொல்லிவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி, இதனை தொடர்ந்து மதுரை மேற்கு தொகுதியில் தேர்தல் பணியில் தீவிரம் காட்ட தொடங்கி இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

இந்நிலையில் கடந்த 2011 சட்டசபை தேர்தலில் இப்படி தான் திமுக தேர்தலுக்கு முன்பு மக்களுக்கு பணத்தை வாரி இறைத்தது, ஆனால் தேர்தல் முடிவுகளில் மதுரை மொத்தத்தில் திமுக வாஸ் அவுட்டானது வரலாறு, அந்த வகையில் ஆளும் திமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், மதுரை மேற்கு தொகுதியை பொறுத்த வரை திமுகவினர் கொடுக்கும் பரிசு பொருட்களை மகிழ்ச்சியுடன் பெற்று கொள்வார்கள் ஆனால் வாக்கு பதிவின் போது தங்கள் எதிப்புகளை ஓட்டுகளாக பதிவு செய்வார்கள் என்பது தான் கடந்த கால வரலாறு.