மஹாசிவராத்திரி ஆபத்தனாவை.. அனுமதிக்க கூடாது… முதல்வரை எச்சரிக்கும் வன்னியரசு..! ஏன் தெரியுமா.?

0
Follow on Google News

இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் முதன்முறையாக சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கும் வகையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மைதானத்தில் மகா சிவராத்திரி விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு.

இது அறநிலையத் துறை வரலாற்றில் முதல்முறையாக மகா சிவராத்திரியன்று 100-க்கும் மேற்பட்ட ஆன்மிகக் கலைஞர்கள் இணைந்து, மார்ச் 1-ம் தேதி மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் தினத்தை சிவராத்திரியாக கொண்டாடி வருகிறோம். இதையொட்டி சென்னை கபாலீஸ்வரர் கோயில் மைதானத்தில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் பங்குபெறும் வகையில் சிவராத்திரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பழநி பஞ்சாமிர்தம் உட்பட முக்கியமான கோயில்களின் பிரசாதங்கள் விற்பனை செய்யப்படும். மேலும், கோயில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். மங்கள இசை, சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி, பட்டிமன்றம், பக்தி பாடல்கள், கிராமிய இசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. என தெரிவித்த அமைச்சர் சேகர் பாபு.

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சிவாலயங்கள் அனைத்தும் மகா சிவராத்திரியன்று வண்ண விளக்குகளால் ஜொலிக்கும். மேலும் சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்ச்சி அரங்கில் 3 ஆயிரம் பேர் அமரலாம். இந்த நிகழ்ச்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது டிவீட்டர் பக்கத்தில், மார்ச்1 அன்று மயிலாப்பூர கோவிலில் மகா சிவராத்திரி ஒன்றை நடத்தப்போவதாக அமைச்சர் சேகர்பாபு, அறிவித்துள்ள அறிவிப்பு ஆபத்தானதாகும். ஆன்மீகப்பரப்புரையை அரசே முன்னெடுப்பது திராவிட கருத்தியலுக்கு எதிரானதாகும்.தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் இச்செயல்திட்டத்துக்கு அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.