வலிமை வெற்றி பெறாது.. அடித்து கூறிய நடிகர் அஜித்..! நஷ்டத்தை சரி செய்ய அஜித் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

அஜித் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் வினோத் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கும் படம் வலிமை.சுமார் இரண்டு வருடம் கழித்து அஜித் நடித்த படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளதால், இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மொத்த சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் பண்டிகை நாட்களில் இல்லாமல் சாதாரண நாட்களில் திரைக்கு வந்துள்ளது வலிமை.

மிகுந்த எதிர்பார்ப்புகளுடம் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அடையும் வகையில் அமைத்துள்ளது வலிமை படம், ஹாலிவுட் தரத்துக்கு எடுக்கப்பட்டுள்ளது வலிமை என்றாலும், முறையான திரைக்கதை அமைப்பு இல்லாமல் படத்தின் கதை என்ன என்று பார்ப்பவர்களை பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு சொதப்பி உள்ளார் இயக்குனர் வினோத், போதை பொருள் சம்பந்தமான கதை, என்பதால் சமூகத்தில் அக்கறை கொண்டவர்கள் அதிகமாக இந்த படத்திற்கு வந்தனர்.

இருந்தும் இந்த படம் போதை பொருட்களால் சீரழியும் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் இல்லை, மாறாக இளைஞர்கள் இப்படியெல்லம் வாழலாமா,? என தவறான பாதைக்கு அழைத்து செல்வது போன்று கதை அமைந்துள்ளதாக சமூக அரவாளர்கள் குற்றசாட்டு வைக்கின்றனர், பைக் சம்பந்தமான கதைகளில் அஜித் நடிக்க வேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாக இருந்து வந்தது என கூறப்படும் நிலையில், அவரின் ஆசையை நிறைவேற்ற தவறிவிட்டார் இயக்குனர்.

இந்நிலையில் வலிமை படம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் போன நிலையில், இந்த படம் தோல்வியை தழுவும் என ஏற்கனவே கணித்துள்ளார் நடிகர் அஜித்குமார், இதனால் படம் வெளியாகும் முன்பே தன்னை நம்பி தமிழ் சினிமாவில் படம் தயாரிக்கும் ஆசையில் தமிழில் முதல் தயாரிப்பில் தன்னை வைத்து தயாரிக்க முன் வந்த போனி கபூரை நேரில் அழைத்து வலிமை படம் வெற்றி பெறாது என படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பே தெரிவித்துள்ளர் அஜித்.

இதற்கு போனி கபூர் வலிமை படத்தை விளம்பரம் செய்தால் வசூல் ரீதியாக வெற்றி பெற்று விடும், நீங்கள் படத்தின் ப்ரோமோஷன் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என போனிகபூர் தெரிவிக்க அதற்கு அஜித் திட்டவட்டமாக மறுத்துள்ளார், நான் ரசிகர்களை ஏமாற்ற விரும்ப வில்லை, படம் நற்றாக இருந்தால் விளம்பரமில்லாமல் வெற்றி அடையும், ஆனால் வலிமை படம் பொருளாதார ரீதியில் வெற்றி பெறுவதில் நடிகர் அஜித்துக்கு சந்தேகம் எழுந்துள்ளதால்.

தயாரிப்பாளர் போனி கபூரிடம் அடுத்த படத்துக்கான கால் சீட் கொடுத்துள்ளளதாக கூறப்படுகிறது. அதாவது பொருளாதார ரீதியில் வலிமை வெற்றி பெறாது என்பதால் அடுத்த படத்துக்கு கால் சீட் கொடுத்து அந்த படத்தின் மூலம் லாபம் அடைய போனி கபூருக்கு உதவி செய்துள்ளார் அஜித்குமார் என கூறப்படுகிறது.இந்நிலையில் அஜித் கணித்தது போன்று வலிமை படம் மிக பெரிய தோல்வியை நோக்கி நகரத்து கொண்டிருக்கிறது குறிப்பிடதக்கது.