இந்திய பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி கூடுதலாக 25 சதவீதம் வரியை விதித்து அதனை 50 சதவீதமாக உயர்த்தினார். ட்ரம்ப்பின் இத்தகைய நடவடிக்கைகளால் அமெரிக்காவுக்கான இறக்குமதி பாதிக்கப்படும், உள்நாட்டில் பொருட்களின் விலை உயரும், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று அமெரிக்க மக்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
இந்நிலையில் அமெரிக்க பொருளாதாரம் இப்போது வரலாற்றில் இதுவரை கண்டிராத கடன் சுமையில் தத்தளிக்கிறது. அமெரிக்காவின் கடன் 35-36 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. அமெரிக்காவில் வளர்ந்து வரும் கடன் பிரச்சனை நாட்டின் வருடாந்திர பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி நாட்டின் மதிப்பை விட அதிகமாக உள்ளது இப்படி அமெரிக்க அதிபரின் தவறான முடிவால் அந்த நாடு கடன் பிரச்சனையில் கடுமையாக சிக்கியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக 50 சதவிகித வரி உயர்த்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைகள் அவரது அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல என்று அவருக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் உலக நாடுகளுக்கு வரிகளை விதிக்க ட்ரம்புக்கு அதிகாரம் இல்லை என்றும், ட்ரம்ப் செய்திருப்பது அதிகார மீறலாகும். எனவே அவர் விதித்த வரி உத்தரவுகள் அனைத்தும் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை ட்ரம்ப் தரப்பு மேல்முறையீடு செய்த நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றமும் அதே தீர்ப்பை தற்போது வழங்கியுள்ளது. நீதிமன்றம் தீர்ப்பில் டிரம்ப் வரிகளை விதிப்பதன் மூலம் தனது அதிகாரத்தை மீறியதாகவும், இதை அவர் வர்த்தக பேச்சுவார்த்தைகளிலும் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதிலும் பயன்படுத்தி வருகிறார் என கூறியது.
மேலும் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறியதாகவும் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு, வரிகளை விதிக்கும் அதிகாரத்தை அதிபருக்கு அல்ல, காங்கிரஸ் சபைக்குத்தான் வழங்குகிறது. இது காங்கிரஸ் சபைக்கு வழங்கப்பட்ட ஒரு முக்கிய அதிகாரம் என்று தெரிவித்துள்ளது நீதிமன்றம்
மேலும், அறிவிக்கப்பட்டஅவசரநிலையின்போது, அதிபருக்கு அதிகாரங்கள் இருந்தாலும், அந்த அதிகாரங்களில் வெளிப்படையாக வரிகளை விதிப்பது அல்லது பரஸ்பரவரிகளை விதிப்பது அடங்காது என நீதிமன்றம் விளக்கம் அளித்தது.இந்த தீர்ப்பினால் அதிருப்தியடைந்த ட்ரம்ப் இந்த மேல்முறையீட்டை அடுத்து சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வதாக அறிவித்துள்ளார். ஆனால் அங்கேயும் இதற்கு எதிராகவே தீர்ப்பு அமையும் என கூறப்படுகிறது.
அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பால் விரைவில் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் ட்ரம்ப் விதித்த புதிய வரிகள் நீக்கப்படும் என கூறப்படுவதால் இந்திய வணிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் மேலும் இந்த தீர்ப்பு, ட்ரம்ப்புக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்துமானால், கூடுதல் வரி விதிப்பின் மூலம் பெறப்பட்ட பணத்தை திருப்பி தர வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.
இதனிடையே, நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அனைத்து வரி விதிப்புகளும் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன. இந்த வரிகள் நீக்கப்பட்டால் அது நாட்டுக்கு ஒரு முமையான பேரழிவாக இருக்கும். இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தப்படுமானால் அது அமெரிக்காவை அழித்துவிடும்.’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

