45 நிமிடம் தனியாக நடந்த சந்திப்பு…. தேர்வு செய்யப்பட்ட தேசிய தலைவர் …. அண்ணாமலைக்கு அடித்த ஜாக்பாட்…

0
Follow on Google News

கடந்த மார்ச் மதமே வெளியாக இருந்த பாஜக புதிய தேசிய தலைவர் அறிவுப்பு தொடர்ந்து தாமதமாகி கொண்டிருந்த நிலையில், தற்பொழுது ஒரு வழியாக பாஜக தேசிய தலைவர் யார் என்பதை உறுதி செய்துள்ளது பாஜக தலைமை மற்றும் ஆர் எஸ் எஸ் தலைமை என்பதை உறுதி செய்கிறது டெல்லி வட்டாரங்கள். பாஜக தேசிய தலைவராக இருந்த ஜெ பி நட்டா பதவி காலம் முடித்தும் அவருடைய பதவி நீடிக்கப்ட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து அடுத்த பாஜக தேசிய தலைவர் யார் என்பதை முடிவு செய்வதில், ஆர் எஸ் எஸ் மற்றும் பிரதமர் மோடி இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக நீடித்து வந்தது. இதற்கு இடையில் பகல்காம் தாக்குதல், அதனை தொடர்ந்து ஏர் இந்தியா விபத்து காரணமாக பாஜக தேசிய தலைவர் அறிவுப்பு மேலும் காலதாமதமானது.

இந்நிலையில் தற்பொழுது தொடர்ந்து மூன்று முறை பிரதமராக இருந்து வரும் மோடிக்கு, அடுத்த பிரதமர் வேட்பாளராக ஒருவரை முன்னிலை படுத்தும் வகையிலும், அதற்கு ஏற்றார் போல் ஒருவரை பாஜகவின் தேசிய தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என ஆர் எஸ் எஸ் முயன்று வருகிறது. அதே நேரத்தில் வரும் 2029 பாராளுமன்ற தேர்தலிலும் மோடியே பிரதமர் வேட்ப்பாளராக முன்னிறுத்த படுத்துவார் என்றும், வரும் 2031ல் பிரதமர் மோடி அவராக முன் வந்து பிரதமர் பதவியை விட்டு கொடுத்து ஓய்வை அறிவிப்பார் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் தேர்வில் ஆர் எஸ் எஸ் மற்றும் பிரதமர் மோடி இருவருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில், பலர் பெயர்கள் அடிபட்டது, அதில் தர்மேந்திர பிரதான், மனோகர் லால் கட்டர், சிவராஜ் சிங் சௌகான் , ராஜ் நாத் சிங் , என பாஜகவின் பல மூத்த தலைவர்கள் இடையே அடுத்த பாஜக தேசிய தலைவர் யார் என்கிற போட்டி மிக கடுமையாக நடந்து வந்தது.

இதில் தற்பொழுது ஆர் எஸ் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு மனதாக ஒருவரை தேர்வு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் உறுதி படுத்துகிறது. மத்திய வேளாண் துறை அமைச்சராக இருக்கும் சிவராஜ் சிங் சௌகான் சமீபத்தில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகத்தை தனியாக சந்தித்து சுமார் 45 நிமிடம் 1 டு 1 பேசி இருக்கிறார்கள். இதில் அடுத்த பாஜக தேசிய தலைவர் சிவராஜ் சிங் சௌகான் என்பதை உறுதி செய்து இருக்கிறது ஆர் எஸ் எஸ்.

மேலும் சிவராஜ் சிங் சௌகான் தேசிய தலைவராக நியமிக்க பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் உறுதி படுத்துகிறது. அந்த வகையில் பாஜக தேசிய தலைவராக சிவராஜ் சிங் சௌகான் தேர்வு செய்யப்பட்டுள்ளது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் தேர்வு செய்வதில் மட்டுமே தாமதமாகி வந்த நிலையில், தேசிய பொதுச் செயலாளர், தேசிய துணை தலைவர், என மற்ற தேசிய அளவிலான பட்டியல் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ளது பாஜக தலைமை, என்றும் அதில் ஒரு சில மாற்றங்கள் மட்டும், பாஜக தேசிய தலைவராக சிவராஜ் சிங் சௌகான் அறிவிப்பு வெளியான பின்பு மாற்றங்கள் செய்யப்பட்டு தேசிய நிர்வாக பட்டியல் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, தேசிய பொதுச் செயலாளராக நியமிக்க பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதை உறுதி செய்கிறது டெல்லி வட்டாரங்கள், அந்த வகையில் தென் மாநிலங்களின் பொறுப்பாளராகவும், பாஜக தேசிய பொதுச் செயலாளராகவும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நியமிக்க பட இருப்பதாக உறுதி படுத்துகிறது டெல்லி வட்டாரங்கள்.