இந்திய பொருள்களுக்கு அமெரிக்க விதித்துள்ள அதிக வரி என்பது பொருளாதாரம் தடையாக ஒரு தரப்பு பேசி வந்தாலும், இது உண்மையிலே பொருளாதாரத்தில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிக்க செய்துள்ளதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியாவை அந்நியப்படுத்த வேண்டும் என முடிவு செய்து அமெரிக்க மிக பெரிய தவறை இழைத்து விட்டது என்கிறார்கள் உலக பொருளாதார நிபுணர்கள்.
அமெரிக்க இந்தியா மீது விதித்துள்ள அதிக வரி, வளர்ந்து வரும் வல்லரசு நாடக இந்தியா தன்னை நிலை நிறுத்தி கொள்ள கூடிய வாய்ப்பாக இதை இந்தியா பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் என்பது ஏற்கனவே ஜி 20 நாடுகளை விட அதிகமாக என்பது குறிபிடத்தக்கது. வரும் 2028ல் இந்தியா முன்றாவது பொருளாதார நாடக உருவெடுக்கும் என IMF தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பால் இந்தியாவின் எழுச்சியைத் தடை செய்ய முடியாது, இது இந்தியா மீது அமெரிக்காவுக்கு இருக்கும் அச்சத்தை தான் வெளிப்படுத்துகிறது.1947 முதல் இந்தியா அணிசேராமை கொள்கையாக எந்த நாட்டின் அனுசரணையும் விரும்பவில்லை, தனித்துவமாகவே முடிவுகளை எடுக்கும் வகையில், எந்த நாட்டிற்கும் தலைவணங்கி செயல்பட்டது இல்லை இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தற்போதை நிலைப்பாட்டை ஜப்பான் வலுவாக ஆதரித்து வருகிறது. ரஷ்ய உடனான இந்தியாவின் பொருளாதார தொடர்பு, இரு நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமை வெளிப்படுத்துகிறது , அந்த வகையில் அமெரிக்கா நினைத்தது போன்று இந்தியா தனிமை படுத்தப்படவில்லை, ஆசியா நாடுகளின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக பறைசாற்றுகிறது இந்தியா.
தற்பொழுது இந்தியாவுக்கு எதிராக பாக்கித்தானை ஆதரிக்கும் அமெரிக்காவின் கொள்கை முட்டாள் தன்மானது என்கிற விமர்சனம் அமெரிக்கர்கள் மத்தியிலே எழுந்து வருகிறது. உலக நாடுகள் இந்தியாவை பொருளாதார சுழற்சி மையமாக பார்த்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள், ஆசியா நாடுகள், ஆப்பிரிக்க போன்ற இந்தியாவின் நட்பு நாடுகள் அனைத்தும் இந்தியாவின் பொறுப்புணர்வை புரிந்து கொண்டு அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஆதரிக்க வில்லை என்பதை பார்க்க முடிகிறது.
அந்த வகையில் அமெரிக்க இந்தியா மீது விதித்துள்ள அதிக வரியின் காரணமாக, இந்தியாவை உலக நாடுகளிடம் இருந்து தனிமை படுத்தி விடலாம் என்கிற அமெரிக்காவின் திட்டம் தோல்வியை தழுவியது மட்டுமில்லாமல், இந்தியாவின் ராஜதந்திர உலக வர்த்தகம் இந்தியாவின் நட்புநாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 11 வருடங்களாக பிரதமர் மோடி அரசின் இந்தியாவின் உட்கட்டமைப்பான, புதிய சாலை, விமான நிலையங்கள், துறைமுகம், நிலையான இந்தியாவின் நாணய மதிப்பு, போன்றவை அமெரிக்கா போன்ற எந்த ஒரு வல்லரசு நாடும், இனி இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்பதை இந்தியாவின் உட்கட்டமைப்பு உணர்த்துகிறது.
மேலும் பாக்கிஸ்தானின் உறுதியற்ற தன்மை, அந்த நாடு எதிர்கொண்டு வரும் கடன் நெருக்கடிகள், அந்த நாட்டில் நிலவும் பயங்கரவாதம் மற்றும் சீனாவைச் சார்ந்திருக்கு பொருளாதார ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமேரிக்காவின் நடவடிக்கை, இது அமெரிக்காவை இழப்பை தேடி சென்று பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பிரதமர் மோடியின் அரசாங்கம் அடி பணியாது என்பதை தற்பொழுது நிரூபித்து இந்தியாவை தலைநிமிர செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

