இப்படி தான் கர்ப்பம் ஆனேன்… அப்படியே போட்டுடைத்த ஜாய் கிறிஸில்டா ….

0
Follow on Google News

கோவையை சேர்ந்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவரது மாமன் மகள் ஸ்ருதியை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஸ்ருதி வக்கீல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் தனது மனைவி ஸ்ருதியை பிரிய உள்ளதாகவும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டா என்பவருடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டா கடந்த 2018ம் ஆண்டில் சினிமா இயக்குனர் ஜே ஜே பெட்ரிக் என்பவரை திருமணம் செய்தார். பிறகு 2023ம் ஆண்டில் கருத்து வேறுபாட்டால் அவரிடம் இருந்து பிரிந்து விட்டதாக ஜாய் கிறிஸில்டா அறிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜூடன் தனக்கு திருமணம் நடந்ததாக கூறி இணையத்தில் சில புகைப்படங்களை அவர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் வெளியிட்ட அந்த புகைப்படங்களில் அவர்கள் இருவரும் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்களையும் அதன்பிறகு இருவரும் முத்தம் கொடுத்துக் கொள்கிற வீடியோவையும் வெளியிட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அந்த வீடியோவை ரங்கராஜ் தான் எடிட் செய்தார் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மருத்துவ பரிசோதனைக்காக சென்ற நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்ட ஜாய் கிறிஸில்டா, தங்கள் குழந்தைக்கு ராஹா என்ற பெயரையும் வைத்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்தது சட்டப்படி குற்றம், இது எப்படி சாத்தியம் என்று இணையத்தில் பல்வேறு விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்தன.

அதே நேரத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிறிஸில்டா வெளியிட்ட புகைப்படங்கள் குறித்து எதிர்ப்போ கருத்துகளோ என எதுவுமே தெரிவிக்கவில்லை. இந்த சம்பவங்கள் குறித்து அவர் எந்த விளக்கமும் தரவில்லை. இதற்கிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாய் கிறிஸில்டாவுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் மாதம்பட்டி ரங்கராஜ் திடீரென நீக்கிவிட்டார்.

இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டார் என்றும் தன்னை கர்ப்பம் ஆக்கிவிட்டு இப்போது தன்னுடன் வாழ மறுப்பதாகவும் கூறி ஜாய் கிறிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் நேரில் வந்து புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரில் ஜாய் கிறிஸில்டா , நாங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் சில ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தோம்.

பின்னர் எம்ஆர்சி நகர் அம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் அதை பதிவு செய்யவில்லை. எங்கள் திருமணமும் நான் கர்ப்பமாக இருப்பது குறித்தும் வெளியே தெரிந்த பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் என்னை சந்தித்து, கருவை கலைக்கச் சொல்லி தாக்கினார். தவறாகவும் நடந்து கொண்டார். என்னை அவர் சந்திக்க மறுக்கிறார்.

எனக்கும் என் கருவில் வளரும் குழந்தைக்கும் அவர் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து போலீசார் மாதம்பட்டி ரங்கராஜிடம் விசாரணை நடத்துவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது மேலும் இதுவரை மௌனமாக இருந்த அவர் தற்போது இந்த விவகாரம் குறித்து மௌனம் கலைத்து வாய் திறந்து பதில் அளிப்பாரா என்று பலரும் ஆவலாக காத்திருக்கின்றனர்.