சில அழகான நடிகைகள் நடித்த படங்களின் எண்ணிக்கை மிக சொற்பமே என்றாலும் அவர்களின் வசீகரமான அழகால் நடிப்பால் ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் 10க்கும் குறைவான படங்களில் நடித்தவர்தான் நிவேதா பெத்துராஜ். தூத்துக்குடியை சேர்ந்த தொழிலதிபர் பெத்துராஜ் மகள்தான் இவர். ஆனால் சிறுவயதிலேயே துபாயில் செட்டிலாகி விட்டார்.
படித்தது வளர்ந்தது எல்லாமே அங்கேதான் என்று சொல்லப்படுகிறது. தற்போது அவரது வயது 34. தெலுங்கிலும் சில படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். தமிழில் இவரது நடிப்பும் கவர்ச்சியும் ஏராளமான ரசிகர்களை பெருமூச்சு விட்டு ஏங்க வைத்தது. நடிகை நிவேதா பெத்துராஜ், சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி விளையாட்டுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

இவர் ஒரு விளையாட்டு வீராங்கணையாகவும் இருக்கிறார். மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்று பலமுறை வெற்றி பெற்றிருக்கிறார். ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். சினிமாவில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் விளையாட்டில் முழு ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்தி கொள்கிறார்.
இதற்கிடையே தமிழகத்தை சேர்ந்த இளம் அரசியல்வாதி ஒருவருடன் நடிகை நிவேதா பெத்துராஜ் நெருக்கமான நட்பில் இருப்பதாகவும், துபாயில் இருந்து நிவேதா பெத்துராஜ் சென்னை வரும்போதெல்லாம் அந்த இளம் அரசியல்வாதியை தனிமையில் சந்திப்பதாகவும் சில மாதங்களுக்கு முன் தகவல் பரவியது. துபாயில் 50 கோடி ரூபாய் மதிப்பில் நடிகை நிவேதா பெத்துராஜூக்கு அந்த இளம் அரசியல்வாதி சொந்தமாக பங்களா வாங்கி தந்ததாகவும் தகவல் வைரலானது. அதை எல்லாம் ஒரு வீடியோவில் நிவேதா பெத்துராஜ் மறுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் தனது காதலருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, புகைப்படத்தின் கீழே ஹார்ட்டின் ஈமோஜிகளை பதிவிட்டுள்ளார். அவரது காதலரின் பெயர் ரஜித் இப்ரான். அவர் மாடலிங் துறையை சேர்ந்தவர். துபாய் மற்றும் சென்னையில் சொந்தமாக பிஸினஸ் செய்கிறார். மிகப்பெரிய தொழிலதிபராகவும் அவர் இருந்து வருகிறார். ரஜித் இப்ரானுக்கும் நிவேதா பெத்துராஜூக்கும் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது.
அவர்களது திருமணம் வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இதுகுறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவிக்கையில்,, நானும் ரஜித் இப்ரானும் கடந்த ஐந்து ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். நாங்கள் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவரை காதலித்து வருகிறோம் என்பது எங்களுக்கு தெரியவந்தது. இதைப்பற்றி எங்களது பெற்றோரிடம் கூறினோம். அவர்களும் உடனே எங்களது திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.
அதனால் எங்களது திருமணம் இரு தரப்பு பெற்றோர்களின் சம்மதம் மற்றும் ஆசீர்வாதத்துடன் நடக்கும் காதல் திருமணமாகும். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு எங்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது, எங்கள் திருமணம் வருகிற 2026 ம் ஆண்டு ஜனவரியில் சென்னையில் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு பிறகும் நான் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்று நிவேதா பெத்துராஜ் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான நிவேதா பெத்துராஜ், துபாயைச் சேர்ந்த தொழிலதிபரை காதல் திருமணம் செய்து கொள்கிறார் என்கிற தகவல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் வசீகரமான அழகும் நல்ல நடிப்பாற்றலும் உள்ள நடிகை நிவேதா பெத்துராஜ், திருமணத்துக்கு பிறகும் தமிழ் படங்களில் அவர் கூறியபடி தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

